அத்தியாயம் -3

  • Hi friends, வாசிப்பதை சுவாசமாக சுவாசிப்போம். ❤️Sweet Sundari தளத்திற்கு உங்கள் அனைவரையும் இதயம் மகிழ்ந்து மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்❤️ இத்தளத்தில் எழுத விரும்பும் படைப்பாளிகள் sweetsundari217@g.mail.com என்ற மின்னஞ்சல் தொடர்பை தொடர்பு கொள்ளவும்.
அத்தியாயம் -3

அவள் வகுப்பை யாருமே தவற விட மாட்டார்கள் .முழு வருகை பதிவு அவள் வகுப்பில் இருக்கும். வராத பிள்ளைகளை குறித்து கேட்டு அறிந்து கொள்வாள். எதற்காக என்றும், ஏன் என்றும் ,தொடர்ந்து தொடர்ச்சியாக ஒரு ஒரு வாரம் அந்த வகுப்பிற்கு மாணவி வரவில்லை என்றால், உடனே பெற்றோருக்கு போன் செய்து கேட்டு தெரிந்து கொள்வாள். இல்லை என்றால் சக மாணவிகளிடம் கேட்டு தெரிந்துகொண்டு அது என்ன? எதற்காக என்பதையும் அக்கறையாக விசாரித்துக் கொள்வாள்.

அவளது வகுப்பில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் அவளது தொலைபேசி எண் வழங்கப்பட்டிருக்கும் . எந்த ஒரு காரணமாக இருந்தாலும் பெற்றோருடன் பேச முடியாத விஷயங்களை என்னோடு நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்
என்பதை உணர்த்துவாள். மாணவிகளும் தன் பெற்றோரிடம் சொல்ல முடியாத சில பல விஷயங்களை தன் ஆசிரியரிடம் சொல்லி அறிவுரை கேட்டுக் கொள்வர் .

எத்தனையோ விஷயங்களை சுமூகமாக அவள் முடித்தும் வைத்திருக்கின்றாள். தன் வகுப்பு காரியங்களில் மிகவும் கவனமாகவே இருப்பாள். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி அது தனக்குப் பின்பு தான் தன் தலைமை
ஆசிரியருக்கே தெரிய வேண்டும் என்பதில் அவள் கவனம் செலுத்துவாள்.

ஏனென்றால் ஒரு வகுப்பு ஆசிரியரின் கவனம் தன் மாணவர்களிடத்தில் முழுமையாக இருக்க வேண்டும் என்பதை அவள் புரிந்து வைத்திருந்தாள்.

தன் வகுப்பு மாணவிகளை குறித்த அனைத்து விபரங்களையும் தன் விரல் நுனியில் வைத்திருப்பாள். தேவ்ஷிகா
எந்த சூழ்நிலையிலும் எப்பொழுதும் அவளை கூப்பிட்டு விசாரித்தால், தன் மாணவிகளை குறித்த விபரங்களை , மாணவிகளின் பெற்றோர்களின் பெயர்கள் முதற்கொண்டு அவர்கள் வீட்டு முகவரியை முதற்கொண்டு அவள் ஞாபகத்தில் வைத்திருப்பாள். அந்த அளவுக்கு தன் மாணவிகளிடத்தில் அக்கறையும் அன்பும் செலுத்தினாள்.


தேவ்ஷிகா ஒரு நல்ல ஆசிரியராக இருந்ததினால் தான் அவரது மாணவிகளும் அவள் மீது அதிக அன்பும்
அக்கறையும் வைத்திருந்தனர் . அவள் அன்று பள்ளிக்கு வருகின்றாரா? இல்லையா?, என்பதை மாணவர்கள் ஆவலோடு எதிர் பார்த்து காத்திருப்பர் . அந்த அளவுக்கு தேவ்ஷிகாவின் மீது மாணவிகளும் அன்பு செலுத்தினர். அவள் செல்லும் வகுப்புகளில் தன் மாணவர்களிடத்தில் நேரம் கிடைத்தால் அன்பாக உரையாடிக் கொண்டிருப்பாள். வகுப்பு நேரம் போக மீதி நேரங்களில் மாணவர்கள் இடத்தில் மாணவர்களுக்கு தேவையான விளக்கங்களையும் வழிகளையும் காட்டுவாள்.


இங்கு தேவேந்திரனும் தன் பணியில் இருந்தாலும் இவளையே நினைத்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அவள்
செய்த குறும்பும் , சிரிப்பும் அவன் மனக்கண் முன் ஓடிக்கொண்டே இருந்தது . தன்னை மறந்த நிலையிலே அவன் வாழ்ந்து கொண்டிருந்தான். அந்த ஒரு வாரம் முழுவதும் தன்னை மறந்து, தான் என்ன செய்கின்றோம் என்பதையே யோசிக்காது, தன் மனம் போன போக்கில் போய்க் கொண்டிருந்தான்.



தேவேந்திரனை, அவனது நண்பர்கள் அனைவருமே அவனை சுற்றி கேலி செய்ய ஆரம்பித்தனர் . என்னாச்சுடா உனக்கு?,என்ன ஆச்சு? ஏன் நீ இப்படி ஒரு மாதிரியாகவே சுற்றிக் கொண்டிருக்கிறாய் . சரி இல்லையே, உன்னை ஏதோ ஒன்று ஆட்டி படைக்கின்றது ,என்பது எங்களுக்கு தெரிகிறது . உனக்குள் என்ன ஒரு போராட்டம்?, எங்களிடம் தெரியப்படுத்து. நாங்கள் அதை தீர்த்து வைக்கிறோம் என்று அவனை நச்சரிக்க ஆரம்பித்து விட்டனர் . அவனும் அதற்கு சிரித்துக்கொண்டே ஒன்றுமில்லையே என்று பதிலளித்துக் கொண்டிருந்தான்.



ஒன்றுமில்லை என்றால், நீ ஏன் இப்படி ஒரு மார்க்கமாக சுற்றிக் கொண்டிருக்கின்றாய்? என்று கேட்டார்கள் . அதற்கு அவன் ஒன்றும் இல்லையே என்று மீண்டும் பதில் உரைத்தான். இல்லை நீ சரியில்லை உனக்குள் ஏதோ ஒன்று இருக்கின்றது . அதற்கும் அவன் சிரித்து விட்டு தன் வீட்டிற்கு வந்து விட்டான். வீட்டிற்கு வந்தும் தனது தாயிடமும் சரிவர பேசாமல் ஏதோ ஒன்றை மந்திரித்து விட்டது போன்றே அலைந்து கொண்டிருந்தான்.



அவனது தாயும் என்னாச்சு டா உனக்கு?, ஏன் இப்படி ஒரு மாதிரியாகவே இருக்கின்றாய் உனக்கு உடம்பு எதுவும் சரியில்லையா? என்று கேட்டார் .அதெல்லாம் ஒன்னும் இல்லை நான் நன்றாகத் தான் இருக்கின்றேன் என்று பதில்
உரைத்தான். பின்பு ஏன் யாரிடையும் எதுவுமே சரியாக பேச மாட்டேன் என்கிறாய்? என்று கேட்ட பொழுதும் அதெல்லாம் ஒன்னும் இல்லை என்றான்.


என்னடா எதை கேட்டாலும் ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்று சொல்கின்றாய்? என்று கேட்டார். தன் தாயார் இப்படி கேட்டதும் தான் தன் சூழ்நிலையினை உணர்ந்து கொள்ள ஆரம்பித்தான். தேவேந்திரன் என்னாச்சு எல்லோரும் கவனிக்கின்றார்களோ? , எல்லாரும் நம்மிடம் இப்படியே கேட்கின்றார்களே, சரி இனி இப்படி இருக்கக் கூடாது என்பதை உணர்ந்து தன்னை சரிப்படுத்திக் கொள்ள முனைகின்றான்.



அதன் பின்பு தன் பணிகளை சரிப்படுத்தி செய்ய ஆரம்பித்து விடுகின்றான். அவன் ஒரு மத்திய அரசு பணியில்
வேலை செய்து கொண்டிருந்தான் . அவன் வீட்டில் , அவனுக்கு ஒரு தங்கை இரண்டு தம்பிகள் இரண்டு அக்கா இருந்தனர் . மிகப்பெரிய ஃபேமிலி தான் . இவன் தான் மூத்த மகன் அந்த குடும்பத்திற்கு , அதனாலேயே பொறுப்புகளும் அதிகம் .



அவனது தந்தை இவன் பிறந்த பிறகு வேறு ஒரு திருமணம் செய்து கொண்டு விட்டு சென்று விட்டார். அதன் பின்பு
அவனது குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் தான் இருந்தது . இவன் ஏதோ தட்டு தடுமாறி பத்தாம் வகுப்பு தேர்வுக்கு பிறகு அந்த குடும்ப பொறுப்பை அவன் எடுத்துக் கொண்டான் . அதுவரை அவனது தாயார் அந்த குடும்பத்தை கவனித்துக் கொண்டார். அவனது அக்காமார்களும் அவனது குடும்பத்தை கவனித்துக் கொண்டனர். அதன் பின்பு முழு பொறுப்பும் இவன் தலையில்தான் வந்து விழுந்தது . தகப்பன் "பெயருக்கு " தான் தகப்பனேத் தவிர அவரைக் குறித்து எந்த ஒரு பிரயோஜனமும் கிடையாது . அதனாலயே குடும்ப பொறுப்பு முழுவதும் இவனைச் சார்ந்து இருந்தது. ஏதோ அவர்களுக்கு முடிந்தவரை அவர்களது வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருந்தது. இவன் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு வேலை செய்ய ஆரம்பித்து விட்டான் . இவன் பணிக்கு சென்ற பிறகு அவனது குடும்பத்தில் சரியான உணவு கிடைக்க வழி வகை கிடைத்தது . தன் சகோதரிகளையும், சகோதரர்களையும் சரியாக வழி நடத்திச் சென்றான் .

தன் ஆசைகளை தனக்குள்ளாகவே வைத்துக் கொள்ள ஆரம்பித்திருந்த தேவேந்திரனுக்கு முதன் முறையாக அவன் மனதில் காதல் பூ பூக்க ஆரம்பித்தது தேவ்ஷிகாவை கண்டதுமே . அதையுமே மனதிற்குள்ளாக வைத்துக்கொள்ள தெரியாமல் தான் இந்த ஒரு வாரம் தன் நண்பர்களிடத்தில் கேலி வார்த்தைகளை கேட்க நேரிட்டது. அதற்குபின்பு தன்னை சரிப்படுத்திக் கொண்டு தன் வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தான். பின்பு எப்பொழுதும் போல் அவனது அன்றாட பணிகள் தொடங்கியது .தன் வேலைக்கு செல்வது, வீட்டிற்கு வருவது , வீட்டு பொறுப்புகளை கவனிப்பது என்று கொஞ்ச நாட்கள் எப்பொழுதும் போல், எந்த வித மாற்றமும் இல்லாமலே சென்று கொண்டிருந்தது தேவேந்திரனுக்கு.


இங்கு தேவ்ஷிகாக்கு சில பல மாற்றங்கள் உருவாகத் தொடங்கியிருந்தது மனதிற்குள். தன்னைத்தானே கேட்டுக் கொண்டிருந்தாள் தேவ்ஷிகா . தன் தோழி தன்னை அறிந்து கொண்டு விட்டாளோ? தன்னிடம் ஏற்பட்ட மாற்றங்களை தெரிந்து கொண்டு தான் கேட்கின்றாளோ? என்று அவள் யோசித்துக் கொண்டு தன்னை உணர்ந்து கொண்டிருந்தாள்.

இவ்வாறு தனக்குள்ளாக அவள் தன் மனதில் உதித்த, காதலை குறித்த போராட்டங்கள், அவளிடத்தில் அவளை குழப்பிக் கொண்டிருந்தது. ஒரு வழியாக அதிலிருந்து விடுபட போராடிக் கொண்டிருந்தாள் .அவள் நாம் செல்லும் பாதை சரியானதுதானா ? இது நமக்கு தேவையா ? என்று தன் மனதிற்குள்ளாக உரையாடிக் கொண்டிருந்தாள். அவள் அந்த போராட்டத்திற்கு உள்ளேயே இருந்ததினாலோ, என்னவோ தன் தோழி ராஜி தன்னை கவனித்துக் கொண்டே இருக்கின்றாள் என்பதை மறந்து விட்டாள் .

ராஜி, தேவ்ஷிகாவிடம், நீ ஊர் சென்று வந்த பிறகு, நீ நீயாக இல்லை என்று கேட்டுக்கொண்டு இருந்தாள். அதற்கு சரியாக பதில் சொல்லாமல் மழுப்பி கொண்டு கொண்டிருந்தாள் தேவ்ஷிகா . ஆனாலும் அவளது தோழி ராஜி ,அவளை விடவில்லை. உனக்கு என்னமோ ஆயிடுச்சு, எனக்கு தெரியும் . நீ நீயாக ,இப்பொழுது இல்லை என்பதை அவளுக்கு உணர்த்தத் தொடங்கினாள்.



அப்படியா!, நான் நானாக இல்லையா ? அது எப்படி உனக்கு தெரியும்? , எனக்கு தெரியாமலே ,என்பதை கேட்டாள். எனக்கு தெரியாதா உன்னை பற்றி, நாம் சிறு வயது முதற்கொண்டு, வகுப்பு படிக்க ஆரம்பித்த பொழுதிலிருந்து உன்னை நான் அறிந்து கொண்டிருக்கின்றேன். நீ எப்பொழுது எப்படி இருப்பாய்? , என்பது எனக்கு தெரியும் . நீ என்னை ஏமாற்ற நினைக்காதே , . நீ யாரை வேண்டுமானாலும் ஏமாற்றிக்கொள். ஆனால் என்னை மட்டும் நீ ஏமாற்றவே முடியாது, என்பதை குறித்து ராஜி அவளிடம் உரையாடிக் கொண்டிருந்தாள்.



அவளிடம் தேவ்ஷிகா உரையாடிக் கொண்டிருந்தாலும், அவளது மனது மீண்டும் அந்த ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது. ராஜி அதையும் கவனித்துக் கொண்டிருந்தாள். நீ இப்பொழுது கூட என்னிடம் பேசிக் கொண்டிருந்தாலும் உன் மனது இங்கு இல்லை என்பது எனக்கு தெள்ளத் தெளிவாகவே தெரியும். ஆனால் நான் சொன்னால் நீ ஒத்துக்கொள்ள மாட்டாய் என்று உரைத்திருந்தாள். அந்த வார்த்தையில் தான் அவள் திடுக்கிட்டு விளித்தாள் . ஆமாம் நீ என்னோடு இப்பொழுது உரையாடிக் கொண்டிருந்தாலும் , உனது வாய் மட்டும்தான் என்னோடு உரையாடிக் கொண்டிருக்கிறது.

உன் மனது என்னிடம் இல்லை . நான் கேட்பதிலும் இல்லை. உன் மனது வேறு எங்கோ இருக்கின்றது, என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும் என்றாள்., தோழி ராஜி. எதற்கு அப்படி சொல்கிறாய்? என்று கேட்டுக் கொண்டாலுமே, அதை அவளுமே உணர்ந்து இருந்தாள்.. ஆம் நாம் நாமாக இல்லை தான் என்று அதன் பின்பே தன்னை சரிப்படுத்திக் கொண்டு, இல்லை நான் உன்னோடு தான் உரையாடிக் கொண்டிருக்கிறேன்., என் மனதும் இங்கே தான் இருக்கின்றது. நீ இப்படி எல்லாம் என்னை சொல்லாதே ,என்று அவளிடம் தன் மனதை மறைத்து விட்டு , தன்னை சுதாரித்துக் கொண்டு, அதன் பின்பு அவளிடம் முழு மனதாக உரையாட ஆரம்பித்தாள்.

இன்று உனது வகுப்பு எப்படி போனது? மாணவிகள் எல்லோரும் சரியாக பாடங்களை கவனித்தார்களா? வீட்டு பாடங்கள் செய்து வந்திருந்தார்களா ? அதை எல்லாம் கேட்டாயா? வகுப்பில் எந்த கலகமும் இல்லையே? என்று கேட்டு அறிந்து கொண்டாள் தேவ்ஷிகா. நடைமுறையாக எப்பொழுதும் போல் சரியாகத்தான் சென்று கொண்டிருக்கின்றது என்பதை இருவரும் பரிமாறிக் கொண்டனர். வேலை இருக்கின்றதா? என்று இருவருமே கேட்டுக் கொண்டு வகுப்பு முடிந்ததும் தங்கள் , தங்கள் வீடுகளுக்கு செல்ல ஆயத்தம் ஆகினர் .



அப்பொழுதுதான் தலைமை ஆசிரியர் அழைப்பதாக , அந்த பியூன் வந்து தேவ்ஷிகாவை அழைத்துச் சென்றார். ஏன்? எதற்கு ? என்று கேட்ட பொழுது, தெரியவில்லை மேம் . உங்களை தலைமை ஆசிரியர் அழைத்தார் என்று மட்டும் சொல்லிவிட்டு, அவர் சென்று விட்டார் . சரி , என்று தேவ்ஷிகா, ராஜியிடம் சிறிது நேரம் காத்திரு , நான் என்னவென்று கேட்டு விட்டு வருகின்றேன், என்று சொல்லிவிட்டு தலைமை ஆசிரியரின் அறைக்குச் சென்றாள். தலைமை ஆசிரியர் சில நேரங்களில் தேவ்ஷிகாவோடு சிறிது குறும்பாகவும், அன்பாகவும் பேசிக் கொள்வார். ஏனென்றால் , தலைமை ஆசிரியருக்கு தேவ்ஷிகா வாழ்க்கை முறை பற்றி நன்கு தெரியும். நீ யாராக இருக்க வேண்டும் என்பதை நீயே முடிவு செய்., என்பதில் அவள் மிகவுமே கவனமாக இருப்பாள். முதலில் ஒரு ஆசிரியர் அன்னையாக இருக்க வேண்டும் என்று உரைப்பாள்.