மெளனம் பேசியதே
அத்தியாயம் - 11
" ஐஸ்சு... எவ்வளவு நாளுக்கு பிறகு நல்ல சாப்பாடு சாப்பிடுறேன் தெரியுமா? அங்க சாப்பாட்டுல உப்பு உரப்பு எதுவுமே இருக்காது. நாக்குக்கு ருசியே இருக்காது. சாப்பிடணுமேனு சாப்பிடுவேன். ஆனா இன்று தான் அத்தை கைமணத்துல வயிறு நிரம்ப சாப்பிட்டேன்."
சொல்லி கொண்டே ஐஸ்வரியாவோடு கை அலம்ப வந்தவள் வாசல் புறம் திருதிருவென விழித்து கொண்டிருந்த விக்கியை பார்த்ததும்.
"என்னடா!... ஆந்தை முழி முழிச்சிட்டு நிக்குறா. கையை இன்னும் கழுவலியா?..."
"ம்... அது... எங்க கழுவுறதுணு தெரியாம முழிச்சிட்டு நிக்குறேன்."
" உங்க வீட்டை போல கை கழுவ எல்லாம் இங்க தனி இடம் எல்லாம் கிடையாதுப்பா... வெளியில பக்கெட்டுல தண்ணி இருக்கும் எடுத்து ஊற்றி கழுவிட வேண்டியது தான்."
என்றவள் முன் செல்ல அவளை பின் தொடர்ந்து வந்த விக்கி...
"ஓ!.. வெளியில இவ்வளவு இடம் இருக்குதா?..."
வியப்போடு அந்த இடத்தை பார்க்க...
"நகர்புற வாழ்க்கையே வேற. அங்க எல்லாம் வீடு பெரிசா இருக்கும். இடம் கொஞ்சமாயிருக்கும். அதனாலயே எல்லா வசதியையும் அந்த பெரிய வீட்டுக்குள்ள அடைச்சி வச்சி வாழ பாக்குறாங்க. ஆனா இங்க அப்படியில்ல. திங்கிறதுக்கும் தூங்குறதுக்கும் தான் வீடு. மற்ற எல்லா வேலையும் வெளியிலேயே பாத்துக்கலாம். சரி. இந்தா கையை கழுவு."
என மக்கில் நீரை எடுத்து அவனிடம் நீட்ட... விக்கி சிரித்து கொண்டே அதை வாங்கி கொண்டான். இவர்கள் இருவரையும் தூரத்திலிருந்து பார்த்து கொண்டிருந்தனர் பாண்டியும் கமலமும்...
கமலம் தன் கணவரிடம் இருவரையும் ஜாடை காட்டி...
"என்ன மாதிரி அந்த தம்பியை கவனிச்சிக்கிறா பாருங்க. இந்த ஒரு வருட படிப்பு முடிஞ்சி நல்ல ஒரு வேலையில போய் அமர்ந்ததும் நாமளே அந்த தம்பி வீட்டுல போய் பேசி முடிச்சிடணும். ஊருக்குள்ள நாலு விதமா பேசுறதுக்கு முன்னால நாமளே மனமுவந்து அந்த நல்ல காரியத்தை பண்ணி வச்சிடனும்."
அதே நேரம் கயிற்றில் தொங்கி கொண்டிருந்த டவ்வலை எடுத்து பல்லவி விக்கியிடம் நீட்ட...
அதை கையில் வாங்கியவன்
"இடம் செமயா இருக்கு பல்லவி. சிலுசிலு காற்றும், வேப்ப மர நிழலும். இப்ப மட்டும் ஒரு நார் கட்டில் கிடச்சிதுணு வை. சாப்பிட்ட சாப்பாட்டிற்கு ஒரு குட்டி தூக்கம் போட்டா ரொம்ப நல்லா தான் இருக்கும்."
விக்கி ஆசையோடு சொல்ல...
அடுத்த நிமிடம் செழியன் நார் கட்டிலோடு அவர்கள் நின்ற இடத்திற்கு வந்தான்.
"என்ன பல்லவி!. கேட்டதும் உடனே கிடைச்சிடும் போல தெரியுது. மாய கண்ணாடி கேட்டதும் கொடுக்கிறது போல இந்த வேப்பமரமும் கொடுக்கும் போல..."
சிரித்து கொண்டே அவன் சொல்ல...
அவன் தோள்பட்டையில் ஓங்கி அடித்தவள்.
"இது மாயமும் இல்ல, மந்திரமும் இல்ல. மாமா காதுல நீ பேசினது விழுந்திருக்கணும். அவர் மகன்ட்ட கொடுத்து அனுப்பியிருக்கிறாரு."
"கிராமத்துக்கு போனா அன்புக்கு குறைவிருக்காது உபசரிப்புக்கு பஞ்சமிருக்காதுணு சொல்லுவாங்க. அது உண்மைணு உன் அத்தை மாமா நிரூபிச்சிட்டாங்க."
"இதுக்கு தான் உன்னை என் கூடவே கூட்டிட்டு வந்தேன். நான் எப்ப அவங்களை பற்றி பேசினாலும் நம்ப மாட்டால. வந்து பார்த்து தெரிஞ்சிட்டாலியா . இது போதும். சரி ஆசைபட்டால கட்டில்ல படுத்து தூங்கு. நான் உள்ளால போறேன்."
என்றவள் அடுத்த நொடி உள் நோக்கி நகர, விக்கி சிரித்து கொண்டே கால் நீட்டி அந்த நார் கட்டிலில் படுத்து கொண்டான். உண்ட மயக்கத்தில் பத்தே நிமிடத்தில் தூக்கம் அவனை ஆட்க் கொண்டது.
உள்ளே வந்த பல்லவியோ தனிமை கிடைத்த சந்தோஷத்தில் ஒடி தன் அறைக்கு வந்தாள். தான் வாழ்வில் பல நாட்கள் முடங்கி கொண்ட அந்த மூலையை பார்த்தாள். கண்கள் கரித்து கொண்டு வந்தது. அந்த மூலை சுமந்து நின்ற நியாபகங்கள் அடுக்கடுக்காய் நினைவலையில் வந்தது. வந்த நாள் முதலாய் தன்னை தாங்கி கொண்ட அந்த இடத்தை நெகிழ்வோடு பார்த்தாள். பின் மெதுவாக அந்த இடத்தில் அமர்ந்து கொண்டாள்.
முதல் நாள் அத்தை மேல் கொண்ட பயத்தால் நடுநடுங்கி கொண்டு இருந்த நொடியில் இருந்து ஒவ்வொன்றும் படமாக ஓடியது. அதை நினைவலையில் ஓட விட்டவள்.
"இப்ப எப்படி மாறிட்டேன். அப்போ யாரை பார்த்தாலும் பயம். யார்ட்ட பேசவும் பயம். எதை செய்யுறதுனாலும் பயம். அந்த பயத்தை மொத்தமா மாற்றி என்னை நார்மல் ஆக்கியது விக்கி தான்.. விக்கி எனக்கு பிரண்டா கிடைச்சப் பிறகு தான் நான் பயப்படாம சமுதாயத்துல வாழ ஆரம்பிச்சேன்." விக்கியின் நியாபகம் வந்தவுடனே மெட்ராஸில் அவன் நடத்திய லீலைகள் நினைவலையில் வந்து சிரிப்பை ஏற்படுத்த...
அந்த இடத்தை சுற்றி பார்த்தாள்.
"அம்மா!... இருக்கிறியாம்மா?. நீ இதுல தானே இருப்பா. இதுல இருந்து பேசும் போது மட்டும் தான் உன் கூட இருக்கிறது போலவே இருக்குதும்மா. நாலு வருஷமா என்னால இப்படி மனசு திறந்து பேசவே முடியலம்மா. அங்க என்னை யாரும் தனியாவே விடுறதில்லைம்மா. உனட்ட பேசணும்மா. நிறைய பேசணும். உன் பொண்ணு சாதிச்ச எல்லாத்தையும் சொல்லணும்."
வாய் விட்டே முனங்கியவள் அந்த மூலையில் சின்ன குழந்தை போல் முடங்கி கொண்டாள். கண்கள் அருவியாக வழிந்தோடியது. தான் இங்கிருந்து சென்றதிலிருந்து திரும்பி வந்தது வரை நடந்த ஒவ்வொன்றையும் சொல்ல தொடங்கினாள். சொல்ல சொல்ல அவள் முகம் ஜொலித்து நின்றது. தன் தாய் அருகில் இருந்து கேட்கிறாள் என்பது போல சின்ன குழந்தையாக தன்னை நினைத்து கொண்டு மனதில் இருந்த எல்லாவற்றையும் தடங்கலே இல்லாமல் சொல்லி கொண்டே இருந்தாள்.
ஒரு கட்டத்தில் நிறுத்தியவள்.
"கேட்கிறியாம்மா?..." என தலையை நிமிர்த்த...
"சொல்லுடி தங்கம்"
என தாய் கூறுவது போல உணர்வு ஏற்பட தலையை மறுபடியும் தாழ்த்தி கொண்டு படுத்தவள் ...
"நான்!...நான்!...ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்ம்மா. என் வாழ்க்கை மொத்தமா மாறி போனது போல ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா. எல்லாமே எனக்கு கிடைச்சிட்ட மாதிரி ஃபீல்லாகுது. இப்ப கூட டிரைனிங்கிற்கு தான் இங்க வந்திருக்கேன். இது முடிஞ்சதும் உன் பொண்ணு ஆராய்ச்சி பண்ண மும்பை போகப் போறேம்மா. உன் பொண்ணை இப்பவே செலக்ட் பண்ணிட்டாங்க. என் கூட படிச்சதுலயே எனக்கு மட்டும் தாம்மா அப்படி ஒரு வாய்ப்பே கிடைச்சிருக்கு. என்னை அன்றைய நாள் எல்லாரும் எப்படி எல்லாம் பாராட்டுனாங்க தெரியுமா?"
"நீ இருந்திருக்கணும். இதை எல்லாம் என் கூட நின்னு நீ பாத்திருக்கணும். இப்ப கூட நான் கண்டுபிடிச்ச ஒரு மருந்து ஆராய்ச்சிக்கு போயிருக்கும்மா. அது மட்டும் சக்சஸ் ஆச்சி உன் பொண்ணு பெரிய ஆளா உயர்ந்திடுவேன். இன்னும் இதை நான் யார்ட்டயும் சொல்லலம்மா... உன்கிட்ட மட்டும் தான் சொல்றேன். அது மட்டும் சக்சஸ் ஆச்சி உன் பொண்ணுக்கு இருபது லட்சம் கிடைக்கும்."
"தெரியுமாம்மா உனக்கு. இதுக்கு காரணம் விக்கிதாம்மா. அவன் தான் இந்த வழியையே எனக்கு காட்டுனான். ஆரம்பத்துல என்னால யார்ட்டயும் பேச முடியலம்மா. ஒதுங்கியே தான் இருந்தேன். ஆனா அவன் விடல... துரத்தி துரத்தி வந்து கேள்வியா கேட்டு என்னை பேச வச்சான். அவங்க கூட்டத்துக்குள்ள என்னை கலரவச்சான்."
"எல்லாரோடும் சகஜமா பேச வச்சான். என்னை தனியா இருக்க விடாம ஒட வச்சான். எனக்குள்ள இருக்கிற திறமையை காட்ட வச்சான். அந்த போட்டிகள் எல்லாத்துலயும் என்னை கலர வச்சி என்னை ஜெயிக்க வச்சதே அவன் தாம்மா. அவன் மட்டும் இல்லனா உன் பொண்ணு டாக்டர் பட்டத்தோட தான் திரும்ப வந்திருப்பேன்."
"ஆனா இப்போ ஹெல்த் டிப்பாட்மென்ட்ல நானும். ஒரு மெம்பரா ஆகி ஆராய்ச்சி கூடத்துக்குள்ள நுழைஞ்சிருக்கேனா அதுக்கு காரணம் விக்கிம்மா. இப்போ கூட ஊருக்கு நான் தனியா வருகிறேன் என்கிறதுக்காகவே, அவன் ஊருக்கு கூட போகாம... என் கூட வந்திருக்காம்மா. அவனை உனக்கு பிடிக்கும் தானே."
என்றதும் தாய் ஆமா சொல்வது போல தோன்ற... அவள் முகம் பூவாய் விரிந்தது.
"தெரியும்மா. எனக்கு தெரியும். அவனை உனக்கு ரொம்ப பிடிக்கும்ணு தெரியும். உனட்ட அறிமுகப்படுத்த தான் அவனை இங்க கூட்டிட்டே வந்தேன். எப்படியும் அவனால இந்த வீட்டுல தங்க முடியாதும்மா. அவன் எல்லாம் ரொம்ப வசதியானவன்ம்மா. அவன் அப்பா போலீஸ் ஐ.ஜியா இருக்காங்க. அவன் அம்மா பிரபஸர். அவங்க வீட்டை நீ பார்த்தா கடல் போல இருக்கும்."
"அவனோட அம்மா எனட்ட ரொம்ப பாசமா பழகுவாங்கம்மா. அடிக்கடி பேசுவாங்க. விக்கிட்ட பேசும் போது எல்லாம் என்கிட்டயும் பேசுவாங்க. ஒரு முறை வீட்டுக்கு வாம்மாணு கூப்பிட்டாங்க. நான் போகட்டுமாம்மா."
என்று தலையை உயர்த்தியவள் தாய் சரி என்பது போல் தலையாட்ட...
"தெரியும்மா. நீ போக வேணாம்ணு சொல்லவே மாட்டா. அவனோட அம்மாட்ட பேசும் போது உனட்ட பேசுறது போலவே இருக்கும்மா. அவ்வளவு அன்பா பேசுவாங்க. விக்கியை பார்க்க வரும் போது எல்லாம் எனக்கும் நிறைய பொருள் வாங்கிட்டு வருவாங்க."
"இந்தா பாரும்மா. இந்த டிரஸ் கூட விக்கியோட அம்மா தான் எடுத்து கொடுத்தது. அப்போ எல்லாம் விக்கி விளையாட்டுக்கு கோபப்பட கூட செய்வான்."
"நீ!... உன் பையனையே மறந்திடுவா போல தெரியுது மம்மினு."
"பொய்யா கோபப்படுவான். அவனுக்கு ஒரு டவ்வல் 2 சோப்பு என கொஞ்சமா பொருள் வாங்கிட்டு எனக்கு பெரிய பை நிறைய திங்ஸ் கொண்டு வந்து தருவாங்கம்மா."
"இது ஒவர் மம்மி. எனக்கு மொத்தம் நாலு பொருள். அவளுக்கு பை நிரம்பவாணு கேட்பான்." அதுக்கு அவனோட அம்மா.
"இது பொம்பளைங்க சமாச்சாரம்டா. பசங்க வெளியில ஆயிரம் இடத்துக்கு போவீங்க. போகிற இடத்துல இருந்து தேவையான பொருளை வாங்கிக்குவீங்க. ஆனா பல்லவி எங்கேயும் போக மாட்டானு நீ தான் சொல்லுவா. அதான் அவளுக்கான அத்தனையும் வாங்கிட்டு வந்திருக்கேன்."
" ............".
" அதான் அம்மா பை நிறைய கொண்டு வந்து கொடுத்தாங்களேனு கண்டுக்காம இருந்திடாத. தினமும் வந்து வெளியில போகிறதுக்கு முன்னால எதுவும் வேணுமானு கேட்டு தேவையை அறிஞ்சி செய்யணும்."
"அப்படி சொல்லி சொல்லியே தான் விக்கியை ஒரு நல்ல பிரண்டா கொடுத்தாங்கம்மா."
" உன் பொண்ணு இப்போ ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேம்மா."
"பாரு!. பார்த்தா தெரியுது தானே?..."
சட்டென மறுபடியும் எழுந்து அவள் கேட்க...
"ஆமா?... தோணும். எப்பவுமே அழுமூஞ்சியா இருந்த பொண்ணு முகத்துல சந்தோஷத்தை பார்த்ததுமே உனக்கு தெரிஞ்சிருக்குமே..."
என்றவள் மறுபடியும் படுத்து கொள்ள...
"விக்கியை இன்றைக்கே டவுனுக்கு அனுப்பிடணும்மா. அவனால இந்த குடிசை வீட்டுல எல்லாம் தூங்க முடியாது. ஆனா உன் பொண்ணு இன்னும் இரண்டு நாள் உன் கூட தான் இருப்பேன். உன் பக்கத்துல உன் மடியில தான் படுப்பேன். நீ இப்படியே ராத்திரி முழுசும் தூங்காம என் தலையை கோதிட்டே இருக்கணும் சரியா..."
என்றதும் தாய் அணைத்து கொண்டது போல் தோன்ற அவள் கையை நெஞ்சோடு பிடித்து அணைத்தவாறு முகம் மலர தூங்க தொடங்கினாள் பல்லவி.
எவ்வளவு நேரம் தூங்கினாளோ என்னவோ... பக்கத்தில் அரவம் கேட்டு கண் விழித்தவள் விக்கி தன் அருகில் இருப்பதை கண்டதும்,
சட்டென அவசரம் அவசரமாக எழுந்தாள்.
"என்னடா எழும்பிட்டியா?"
"என்ன தான் வயிறு முட்ட சாப்பிட்டாலும் இப்படியா கும்பகர்ணன் போல தூங்குவா? நான் உன் முன்னால வந்து உட்கார்ந்தே ஒரு மணி நேரம் கழிஞ்சிடுச்சி."
"என்ன ஒரு மணி நேரமா?... அப்போ... மணி எத்தனை?."
"மூணு கழிஞ்சாச்சு."
"மூணு ஆகிடுச்சா. ஐயோ!... ஊரை சுற்றி பார்க்க வேணும்னு சொன்னியே. அம்மா மடியில தூங்குனா இப்படி தான் என்னை மறந்து தூங்கிடுவேன்."
என்றதும்...
"என்ன அம்மா மடியா? "
விக்கி ஆர்வமாக கேட்க...
"நான் உனட்ட சொல்லியிருக்கேன்ல்ல. இந்த வீட்டுல ஒரு ஸ்பெஷல் இடம் உண்டு. என் பல வருட வாழ்வை அந்த ஒரே இடத்துல தான் கழிச்சேன். அது எனக்கு ஸ்பெஷல் இடம். அதுல படுத்தா மட்டும் என் அம்மா கூட இருக்கிறது போல எனக்கு இருக்கும்ணு . அது இந்த இடம் தான்."
என்றதும் சட்டென ஒடி வந்தவன். அவள் இதுவரை படுத்திருந்தது போல தன் இரு கையையும் தலைக்கு தலையணையாக கொடுத்து சுருண்டு படுக்க...
"டேய்!... அது என் அம்மா மடிடா."
"ஏன் உன் அம்மா மடியில நான் படுக்க கூடாதா. உன் அம்மா எனக்கும் தான் மடியை கொடுத்திருக்காங்க..."
என்றவன் கண் மூடி கொள்ள...
"எழும்புடா. அந்த இடம் எனக்கு மட்டும் தான். வேற யாருக்கும் கிடையாது."
ஒடி வந்து பல்லவி அவனை அடிக்க...
"சும்மா சொல்ல கூடாது. அத்தை மடி அத்தனை சுகமா தான் இருக்கு..."
சொல்லி கொண்டு அவன் ஒட... அவனை விரட்டி கொண்டு இவளும் ஒடினாள். ஓடிய ஒட்டத்தில் வெளியே வந்தவள் சுற்றத்தை பார்க்காமல் அவனை துரத்தி கொண்டு ஓட...
பாண்டி, கமலத்தின் கண்கள் மட்டுமல்ல, சுற்றியிருந்த பல வீட்டினரின் கண்களும் இவர்கள் மேலே விழுந்தது. இதை அறியா பல்லவி அவனை துரத்தி கொண்டு ஒடி ஒரு கட்டத்தில் அவனை பிடித்து விட...
அவள் கரத்துள் சிக்குண்ட விக்கி திணறிக் கொண்டு,
"சாரி... சாரி.." என கெஞ்ச... அவன் காதை பிடித்து திருகியவள்
"எனட்ட இருந்து தப்பிக்க முடியும்ணா நினைச்சா. இந்த பல்லவி நினைச்சா. எங்க தப்பி ஓடினாலும் துரத்தி பிடிச்சிடுவா."
"போதும். போதும். துரத்தி ஒடினது போதும். இந்தாங்க. இரண்டு பேரும் காப்பியை குடிங்க." என கமலம் இரண்டு கப்பை நீட்ட... ஆளுக்கொன்றாய் எடுத்து கொண்டவர்கள் கேலியும் கிண்டலுமாக எடுத்து குடித்து முடிக்க...
"என்ன பல்லவி கிளம்புவோமா?"
என கேட்ட விக்கியை ஆர்வமாக பார்த்த கமலம்.
"எங்க போறீங்க..." என கேட்க...
. "அத்தை இவனுக்கு ஊரை சுத்தி பாக்கனுமாம். நான் கூட போயிட்டு வந்திடுறேனே."
என்றவளிடம் மறுத்து பேச தோன்றாமல்.
"போகிறது எல்லாம் சரி. ஆனா இருட்டுறதுக்கு முன்னாடி வீடு வந்து சேர்ந்திடனும்."
"கண்டிப்பா அத்தை. இவனையும் பேக் பண்ணி டவுனுக்கு அனுப்பணும்ல்ல. சீக்கிரம் வந்திடுறேன். ராஜா வீட்டு கண்ணுகுட்டியால நம்ம குடிசையில ராத்திரியை கழிக்க முடியாதுல . அதுக்காகவாவது நேரமே வந்திடுறேன்."
என்றவாறு விக்கியோடு வெளியேறிய பல்லவியை அங்கே பல கண்கள் முறைத்து கொண்டு தான் இருந்தது. பல்லவி இது எதை பற்றியும் கவலைபடாதவள் போல அவன் கையை ஜாலியாக பிடித்து கொண்டே வெளியே வந்தாள். வழி நெடுக்கிலும் எது எதுவோ பேசி கொண்டே சிரிப்பதும் அடித்து ஒடுவதுமாக அவள் இருக்க , விக்கியோ பார்க்கும் இடங்களை பற்றி எல்லாம் கேள்வியாய் கேட்கத் தொடங்கினான்.
பல்லவியும் விக்கிக்கு தான் பயணப்பட்ட இடங்களை எல்லாம் காட்டி காட்டி அந்த இடங்களில் நடந்த சுவாரஸியமான நினைவுகளை அவனுடன் சொல்லியவாறே வந்து கொண்டிருந்தாள். அப்படி அவள் நியாபகப்படுத்தி சொல்லும் போது. அவள் கண்களில் மின்னிய ஆர்வத்தையும் சந்தோஷத்தையும் ரசித்தவாறே வந்து கொண்டிருந்தான் விக்கி.
கொஞ்ச தூரத்தில் மிட்டாய் கடை வந்து விட ஒரு துள்ளலோடு பாட்டியின் கடைக்கு வந்தவள் விக்கியின் அனுமதி கேட்காமல் அவன் பர்ஸை எடுத்து பாட்டியிடம் நீட்ட...
"என்ன பல்லவி?. நீ இன்னும் சூப்பு மிட்டாயை மறக்கல போல தெரியுது."
"எப்படி பாட்டி மறக்க முடியும். செழியன் எங்கயாவது ஆட்டைய போட்டுட்டு வந்து தினமும் உன் கடையில வாங்கி தருகிற சூப்பு மிட்டாயோட டேஸ்ட் டவுண்ல்ல எவ்வளவு ரூபாய் கொடுத்து வாங்குற இனிப்புலயும் இல்ல பாட்டி."
என்றதும் சிரித்து கொண்டே பாட்டி ஒரு மிட்டாயை நீட்ட...
"ரெண்டு கொடுங்க பாட்டி. இவன் வாழ்க்கையில் இப்படியான சந்தோஷம் எதையும் அனுபவிச்சிருக்க மாட்டான்."
சொன்னவன் இரண்டை வாங்கி ஒன்றை அவனிடம் நீட்ட அவனும் சிரித்த முகத்தோடு வாங்கி கொண்டான்.
மிட்டாயின் மேல் உள்ள காகிதத்தை பிரித்தவாறு இருவரும் நடக்க...
"நம்மளை பார்த்தா எல்லாரும் என்ன நினைப்பாங்க."
"என்ன நினைப்பாங்க..."
பல்லவி மிட்டாயை வாயில் வைத்து சூப்பியவாறே அவனை பார்த்து கேட்க...
"சின்ன குழந்தைகள்ணு நினைப்பாங்க."
"நினைச்சா நினைச்சிட்டு போகட்டும். இன்னும் ஒரு இரண்டு நாள் இங்க நிப்போமா? அப்புறம் என்று வர போறோம்னே தெரியல. அதுனால யாரை பற்றியும் நினைக்காம ஜாலியா எஞ்சாய் பண்ணு."
"பல்லவி சொல்லிட்டா. அப்பீலே இல்ல. இதுக்க மேல ஜாலிக்கு ஒரு குறைவும் வைக்க கூடாது."
சொன்னவன் பல்லவி கையை அழுந்த பிடித்தவாறு நடக்க தொடங்க... மழை நீரில் சிலிர்த்து நின்ற வேப்பமர இலையை பிடித்து பல்லவி இழுத்ததும் அதன் மேல் இதுவரை அடைக்கலமாகி இருந்த நீர் துளிகள் பூவாய் அவன் மேல் விழ... துடித்து ஒடிய விக்கியை பார்த்து வாய் விட்டு சிரித்தாள் பல்லவி.
அவள் சிரிப்பில் நாணப்பட்டு மென்நடையோடு அருகில் வந்தவன் அவள் தோளை பிடித்து தள்ளி கொண்டு முன்னோக்கி நகர... முன்னால் சென்றாலும் பின்னால் அவனை பார்த்து பார்த்து நக்கலும் நையாண்டியும் செய்தவாறு வந்த இருவரையும்,
அடுத்து வந்த சைக்கிள் கடையில் இருந்து பார்த்து கொண்டிருந்தது சங்கிலியின் கண்கள்.
அத்தியாயம் தொடரும்