மெளனம் பேசியதே
அத்தியாயம் - 12
துள்ளலோடு வந்து கொண்டிருந்த இருவரையும் பார்த்த சங்கிலி சட்டென தான் செய்து கொண்டிருந்த வேலையை போட்டு விட்டு எழுந்து விட்டான். என்ன தான் அவள் தனக்கு இல்லை என தெரிந்தாலும் அவளை இன்னொருவனோடு பார்க்கும் சக்தி இன்றி சிலையாக நின்றுக் கொண்டிருந்தவனை விக்கி பார்த்து விட ,
"ஏய்!... மீன்காரன். காலையில மீன் கொண்டு வந்தானே. அவன். அங்க பாரு சைக்கிள் கடையில சைக்கிள் கம்பியோட நிக்குறான்."
விக்கி சொல்ல... சட்டென நிமிர்ந்த பல்லவியோ...
"அவன் எதுவும் பண்ணட்டும் நமக்கென்ன?... வா நாம போகலாம்."
"ஒரு நிமிஷம் பல்லவி. தினமும் நாம போகிறது வரை மீன் கொண்டு வர சொல்லிட்டே போவோம்."
என்றவன் அவள் பதிலை எதிர்பார்க்காமல் சைக்கிள் கடைக்குள் புகுந்து விட...
சங்கிலியோ திருதிருவென முழித்தான்.
"இவன் எதுக்கு நம்ம கடைக்குள்ள வரான்?."
ஒரு நொடி யோசித்தவன் சைக்கிள் கடைக்குள்ள எதுக்கு வருவான். சைக்கிள் வாடகைக்கு எடுக்கவா இருக்கும்.
எண்ணியவன் மெல்ல நடந்து அவன் அருகில் வர, பல்லவியோ தூரமாய் நின்று கொண்டாள்.
"சொல்லுங்க சார். சைக்கிள் எதுவும் வாடகைக்கு வேணுமா?"
என ஆர்வமாக கேட்டவனை கேலி சிரிப்போடு பார்த்தவன்.
"இந்த ஒட்ட டப்பா சைக்கிளை வாங்க வரல ... எனக்கு கார் ஓட்டி தான் பழக்கம். இப்படி டப்பா சைக்கிள்ல்ல போய் எல்லாம் பழக்கமில்லை."
நக்கலோடு சொன்னாலும் சங்கிலி அமைதியாகவே பதில் சொன்னான்.
"அது எல்லாம் இங்க வாடகைக்கு கிடைக்காது சார்."
"அது தெரியாதா?... இந்த காயிலான் கடையில எது இருக்கும் எது இருக்காதுணு கூடவா தெரியாது."
விக்கி நமட்டு சிரிப்போடு நின்றிருக்க... சங்கிலி முகமோ சுருங்கி போனது. என்றாலும் வீம்பை சிறிது கூட தளர்த்தாத சங்கிலி.
"அப்படி எல்லாம் தெரிஞ்சவர் இங்க எதுக்கு வந்திருக்கார்னு நான் தெரிஞ்சிக்கலாமா?"
சங்கிலி கொஞ்சம் சூடாகவே கேட்க...
இப்போது விக்கியின் முகம் சுருங்க, பல்லவியை பார்த்தவன் சட்டென தலையை குனித்து கொள்ள, ... பல்லவியின் ரியாக்ஷனை ஒர கண்ணால் சங்கிலியும் பார்த்தான். அவளோ இவர்கள் இருவரையும் பார்க்காமல் எங்கோ வெறித்தவாறு நின்றிருக்க...
"ஏண்டீ உன் அலட்சியம் கூட எனக்கு அம்புட்டு அழகா தெரியுது."
சங்கிலியின் உள்ளம் சட்டென எண்ணவும் கண்கள் அவனையும் அறியாமல் கலங்க துடித்தது. அதை வெளி காட்டி கொள்ள மனமில்லாதவன் பார்வையை சட்டென வேறு பக்கம் திரும்பி வலியை அடக்க போராடிய போது.
"ம்... கொதிச்சி போய் தான் இருக்கீங்க. உங்களை கோபப்படுத்த விரும்பல. வந்த விசயத்தை சொல்லிடுறேன் மீன்காரரே..."
என்றதும் ஜெகன் சூடாக... அவன் உதடோ...
"மீன்காரரா?"
என அனல் கக்கும் பார்வையை வீசியவன், அவனை கூட்டி வந்தவள் மீதும் மாறி மாறி அதே பார்வையை வீச...
"விடுடா..."
என அவனை அடக்கிய சங்கிலி விக்கியை நிமிர்ந்து பார்த்து,
"சொல்லுங்க சார். என்னை எதுக்கு பார்க்க வந்தீங்க?."
"உங்க மீனுக்கு பல்லவி மட்டுமல்ல நானும் அடிமை ஆகிட்டேன். எப்படியும் ஒரு வருஷம் டவுண்ல்ல தான் இருக்க போறோம். இந்த ஒரு வருஷமும் டெய்லி மீன் கொண்டு வந்து தந்தா நல்லா இருக்கும்ணு பீல் பண்ணுறேன். அதான் கேட்டுட்டு போலாம்ணு வந்தேன்."
"டவுணுக்கா. அங்க எல்லாம் கொண்டு வர வாய்ப்பு இருக்காது சார். ஊர்ல்ல எல்லாருக்கும் கொடுத்துட்டு வந்து சேரும் போது கடைக்கு நேரம் சரியாயிருக்கும். அம்புட்டு தொலைவு எல்லாம் கொண்டு வந்து தருகிறதுனா என்னோட வேலையில் பல வேலை செய்ய முடியாம போயிடும். சாரி சார். என்னால வர முடியாது."
என்றதும் முகம் சுருங்கிய விக்கி பல்லவியை பார்த்து கொண்டே...
" நீங்க அப்படி எல்லாம் பேச கூடாதுங்க. இந்த ஆள் இல்லா கடையில டீ ஆத்துறதுக்கு எங்களுக்கு கொண்டு வந்து கொடுத்தா நீங்க நினைக்கிறதை விட அதிகமா நாங்க பணம் கொடுத்திடுறோம்."
என்றதும் சட்டென சூடான சங்கிலி மிக கஷ்டப்பட்டு தன்னை அடக்கி கொண்டு,
"பணத்துக்காக இல்ல சார்..."
என பல்லை கடித்து கொண்டு சொன்ன போது... கொலைவெறி பார்வையோடு அவனை முறைத்தான் ஜெகன். இதுவே இவன் இடத்தில் வேறு யாராவது இப்படி பேசியிருந்தால் இவன் பேசிய பேச்சிற்கு சரியாக வாங்கி கட்டி கொண்டு தான் சென்றிருப்பான். ஆனால் இன்று சங்கிலியோ எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்க கண்டதும்,
"என்ன அண்ணே இதெல்லாம்..."
என அவனை ஆதங்கத்தோடு பார்க்க...
"எல்லாம் பணம் அதிகரிச்ச மப்புடா. விடு. பேசிட்டு போகட்டும். நீங்க கிளம்புங்க சார்."
என சங்கிலி சொல்லி விட, விக்கி சட்டென பல்லவியை பிடித்து இழுத்து அவன் அருகில் கொண்டு வந்து விட்டு விட்டு...
"எனக்காக கேட்கல சார். நாலு வருஷத்துக்கு அப்புறம் இன்று தான் எங்க பல்லவி மனசுக்கு நிறைவா? வயிறு நிரம்ப சாப்பிட்டிருக்கா. அதுவும் சங்கிலி மீன்னா அவளுக்கு ஸ்பெஷல்னு தெரிஞ்சிகிட்டேன். அதுல வேற நீங்க அப்ப எல்லாம் தினமும் கொண்டு வந்து கொடுப்பீங்களாம். உங்க மீன் இல்லாம அவா சாப்பிட்டதே இல்லையாம். அவளுக்காக தான் கேட்கிறேன்."
என்றவனையும் இருவருக்கும் இடையில் நின்ற பல்லவியையும பார்த்தவன்... ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாக அவனையே முறைத்து கொண்டு நின்ற பல்லவியை ஆழமான பார்வை ஒன்றை பார்த்தவாறு அமைதியாக ...
"சொல்லு பல்லவி..."
ஒரு முறை விக்கியின் உலுக்கலில் நார்மல் ஆனவள். ஒரு முறை நிமிர்ந்து சங்கிலியை பார்த்தவாறே...
"விருப்பம் இல்லனா விடு விக்கி. மீன் குழம்பு இல்லாம மெட்ராஸ்ல சாப்பிடலியா என்ன?... அப்படி நினைச்சி சாப்பிட்டுட்டு போவோம். விருப்பம் இல்லாதவங்களை எதுக்கு வற்புறுத்துறா..."
என்றதும்
. நிமிர்ந்து அவளை பார்த்தவன். தன்னையே கூர்தீட்டி நின்ற அவளின் பார்வைக்குள் ஒரு நொடி இறங்கி மீண்டவன்.
"மீன் தானே வேணும். எந்த வழியிலயாவது யார்ட்டயாவது கொடுத்து அனுப்புறேன்."
என்றதும் சட்டென திரும்பிய பல்லவி.
"எதுக்கு? எவனையாவது அனுப்பி என் மானத்தை வாங்கவா? அவரால கொண்டு வந்து கொடுக்க முடியலனா விட்டுட சொல்லு விக்கி."
என சட்டென அவன் மேல் இருந்த தன் பார்வையை திருப்பி கொண்டு வெளி உலகில் நோட்டமிட்டவாறு சொல்ல...
"கோபத்த பாரு. இன்னும் அந்த கண்ணு முழியை உருட்டுறதை மட்டும் விடல போல . இப்படி உருட்டி உருட்டியே என் மனசை சுருட்டி எடுத்திடுறா..."
உள்ளத்துக்குள் பேசியவன் அவளை ஊடுருவி பார்க்க...
"போலாம் விக்கி. இதுக்க மேல கெஞ்சி தான் அவர் வரணம்ணு இல்ல."
"இப்ப எதுக்கு இம்புட்டு பேச்சு பேசுறா நான் மீன் கொண்டு வரணும் அம்புட்டு தானே."
என சங்கிலி சரண்டர் ஆக...
"பாருடா!. மீன்காரர் கூட இந்த விக்கியோட பேச்சை கேட்க மாட்டேனுட்டார். ஆனா பல்லவி சொன்ன உடனே ஒ.கே சொல்லிட்டார்".
விக்கி இருவரையும் ஒரு தினுசாய் பார்த்து விட்டு சொல்ல ... பழையபடியும் மீன்காரர் என்ற விக்கியின் வார்த்தையால் கடுப்பான ஜெகன் இருவரையும் முறைத்து கொண்டு உள்ளே நுழைந்து கொண்டான். விக்கியும் சங்கிலி கையில் பணத்தை திணித்து விட்டு பல்லவியோடு கிளம்ப எத்தனிக்க...
பல்லவியின் பார்வையோ அவனை முறைத்து கொண்டு தான் கடந்து சென்றது. அதனூடே விக்கியின் தோள்பட்டையில் ஓங்கி ஒரு அடி வைத்தவள்.
"எதுக்குடா இப்ப மீனு. மீன் இல்லாம உன்னால சாப்பிட முடியாதா?."
"ஏது?... ஏது?... சங்கிலியோட மீனுனா நான் ஒரு பிளைட் கூட சாப்பிடுவேணு சொன்னது யாரு."
அவன் கிண்டலோடு கேட்க...
"அதுக்காக இப்படியா வந்து நிப்பா?"
அவர்கள் இருவருக்குள்ளும் சுவாரஸியமான சண்டை நிகழ... அடித்து விளையாடி கொண்டே போகும் இருவரையும் வேதனையோடு பார்த்து நின்றான் சங்கிலி.
"சார்!.. உங்களுக்கு கொடுக்க கார் எல்லாம் எனட்ட இல்லாம இருக்கலாம். ஆனா புதுசா பைக் ஒண்ணு வாங்கியிருக்கேன். வேணா ஊர் சுத்தி பார்க்க ஆசைப்பட்டா அதை எடுத்துட்டு போகலாம்."
சங்கிலி சத்தம் போட்டு சொல்ல... முன்னால் சென்று கொண்டிருந்த விக்கியின் கால்கள் சட்டென நின்றன.
"புது வண்டியா?"
அவனின் விழி விரிவின் ஆச்சரியத்தை ரசித்தவன்.
"ஆமா சார். இந்தாங்க சாவி..."
என பல்லவியை ஒர கண்ணால் பார்த்தவாறே விக்கியிடம் நீட்ட... சட்டென அவனை பார்த்து முறைத்தவள்.
"வேணாம் விக்கி. நாம நடந்தே போயிடலாம்."
என அவள் கரம் பற்றி இழுக்க...
அவள் கரம் அவன் கரத்தில் இணைந்த இடத்தை ஒரு முறை அழுந்த பார்த்து விட்டு சட்டென பார்வையை திருப்பி விக்கியின் முகத்துக்கு நேராய் சாவியை தூக்கி பிடிக்க...
"மீன்காரர் தான் விரும்பி தன்னோட சாவியை தராரே பல்லவி. ஒரு முறை சேர்ந்து ஊரை சுத்திட்டு வந்தா தான் என்ன?..."
விக்கி கண்ணடித்து சிரிக்க...
உள்ளத்தின் ஆத்திரத்தை காட்ட முடியாமல் மறுபடியும் சங்கிலியை பார்த்து முறைத்தவள்... விக்கியை இயலாமையோடு பார்க்க... விக்கியோ எந்த தயக்கமும் இல்லாம சங்கிலியின் கையில் இருந்து சாவியை வாங்கியவன் அவன் சுட்டி காட்டிய வண்டியை நோக்கி நகர்ந்தான். செட்டில் நின்ற வண்டியின் அருகில் வந்த விக்கி அதில் அமர்ந்தவாறு வண்டியை உசுப்பேத்த புது வண்டி சத்தம் அதிகமின்றி பயணத்துக்கு ரெடியாக... மெல்ல நகர்த்தி கொண்டு வந்தவன் பல்லவியின் பக்கத்தில் வந்ததும் காலை தரையில் ஊன்ற ...
பல்லவியோ வாய்க்குள் எதையோ வைத்து முணுமுணுத்தவாறு கண்களில் தீப்பொறியை கக்க ... அவளின் முறைப்பை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் திருதிருவென முழித்தவாறு நின்று கொண்டிருந்தவனை சுட்டெரிக்கும் பார்வையை பார்த்தவாறே வந்து விக்கியின் பின்னால் ஏறிக் கொண்டாள். விக்கியோ பேரானந்தத்தோடு வண்டியை கிளப்பினான். வண்டி கிளம்பிய அடுத்த நொடி இதுவரை மலர்ச்சியின் உச்சத்தில் இருந்த சங்கிலியின் முகம் இருளடைய தொடங்கியது.
இதை பார்த்த ஜெகனோ...
"செய்யுறது அம்புட்டையும் செய்றது. அப்புறம் கண் கலங்கி நிக்குறது. முதலாளி இல்லாம போயிட்டாரு. அவர் இருந்திருக்கணும். உங்க மண்டையிலே ஒண்ணு வச்சி..வந்து சிமிட்டிட்டு நின்னாளே அவளை வார்த்தையாலே விரட்டி அடிச்சிருப்பாரு . அவளுக்கு நல்ல நேரம் ஐயா இல்லாம போயிட்டாரு."
ஜெகன் ஆத்திரத்தில் வெகுண்டெழ...
"விடுடா. இன்றும் நாளையும் நிற்க போறாங்க. அப்புறமா கிளம்பிட போறாங்க. அவங்க மேல எதுக்கு கோபப்படணும். நீ வேலையை பாரு. நான் பண்ணையார் வீடு வரை போயிட்டு வந்திடுறேன்..."
என்றவாறு பழைய TVS சோடு கிளம்ப...
"ஆமா?... நல்ல வண்டியை கொடுத்திட்டு பழைய வண்டியில போனா வந்தவன் பேசுறது போல தான் ஊரும் பேசும்..."
முணுமுணுத்த ஜெகனை முறைத்தவன்.
"என்னடா முனங்குறா?. எல்லாம் எங்களுக்கு தெரியும். உன் வேலையை பாரு..."
அதட்டிவிட்டு சென்ற சங்கிலியை பெருமூச்சோடு பார்த்தவன்.
"இந்த அதட்டல் எல்லாம் எனட்ட தான். அவளை கண்டாலே பெட்டி பாம்பா அடங்கிடுறது. என்ன காதலோ!... கன்றாவியோ!..."
வாய்விட்டே முனங்கியவனை எதுவும் சொல்லாமல் கடந்து சென்றவன் வண்டியை சாலையில் ஒடவிட...
ஜெகன் மனதோ ஆறவில்லை. வந்தவன் எப்படி மட்டமாக பேசி விட்டு செல்கிறான்.
"மீன்காரனாமே?...."
"அவங்க பெரிய டாக்டர் தானே. ஒரு வண்டி வாங்க முடியாம எங்க அண்ணனுட்ட வந்து வண்டி வாங்கிட்டு போறவங்களுக்கு எதுக்கு இந்த வீராப்பு. அதுவும் கூச்சமே இல்லாம என் அண்ணன் முன்னாலயே அவன் பின்னால போய் ஏறுகிறா, சே... நானும் முதலாளி கூட கிளம்பி போயிருக்கணும். இப்படி மாட்டி கண்ட கண்ட கழுதைங்க எல்லாம் வந்துட்டு போறதை பார்க்கிறது போல ஆகிடுச்சே."
ஜெகனால் முணுமுணுக்க தான் முடிந்தது. வேறு எதுவும் செய்ய தோன்றவில்லை. ஆனால் வெளியில் போன சங்கிலியோ அதிவேகமாக பண்ணையார் வீட்டை நோக்கி விரைந்த வழியில் மறுபடியும் இருவரையும் பார்த்தான். தாமரை குளத்தில் இறங்கி நின்று இவரும் தாமரை பூவை பறித்து அடித்து விளையாடியதையும் நீரை வாரி இறைத்து விளையாடியதையும் பார்த்தான்.
ஒரு கட்டத்திற்கு மேல் அங்கு நிற்க பிடிக்காமல் அவன் சென்று விட, அரை மணி நேரத்தை அங்கே செலவிட்டவர்கள் அதன் பின் அந்த ஒற்றையடி பாதை வழியே ஸ்கூலை நோக்கி விரைந்தனர். அந்த மரதடி வந்த போதே பல்லவியின் மனதுள் பழைய நினைவுகள் வந்து போயின. அதிலும் சங்கிலியின் கன்னத்தில் அறைந்த நொடி சட்டென வர... சிரித்து விட்டாள்.
"என்னம்மா பொங்கி சிரிக்கிறா . என்னணு சொன்னா நானும் சிரிப்பேன்ல்ல..."
"பழைய நியாபகங்கள் விக்கி..."
"பழைய நியாபகமா?... "
" ம்...ம்... ஒரு நாள் இதே இடத்துல அந்த சங்கிலி கன்னத்துல அறைஞ்சிட்டேன்."
"என்ன சொல்லுறா... நீயா?..."
"ஏன் என்னால முடியாதா?"
"முடியும். உன் வீரம் எல்லாம் இப்படிப்பட்ட மீன்காரனுட்ட தான் நடக்கும். நம்மளை போல மீசை உள்ள ஆம்பிள்ளைட்ட நடக்காது."
"நடக்காதா?... வேணா கீழே இறங்குறியா? அடிக்க முடியுதானு பார்க்கிறேன்."
என்றதும் சட்டென பயந்தவனாய்...
"வேணாம்மா. வேணாம். நான் வீரத்துல சிங்கம்ணு மீசையை முறுக்கிகிட்டு அலையுறேன். நான் மீசையை எடுத்துட்டு அலையுறது போல பண்ணிடாத."
"அப்படினா. பேச்சை குறைச்சிட்டு முன்னால் பாத்து ஓட்டு..."
என அவன் தலையை செல்லமாக தட்ட, விக்கி சிரித்து கொண்டே வண்டியை முன்னோக்கி நகர்த்தினான். வழி நெடுக்கிலும் ஏதேதோ பேசி கொண்டே வந்தாலும் பேசாமலே பல நியாபகங்கள் அவளுக்கு முளைக்க தான் செய்தது. அப்படியான நியாபகங்களில் பல இடங்களில் சங்கிலியின் நியாபகங்கள் வந்தாலும் அவனின் நியாபகங்கள் வரவர கோபமும் கொழுந்து விட்டு எரியத்தான் செய்தது.
அதே நேரம் அவள் படித்த ஸ்கூலும் வந்து விட, வண்டியை நிறுத்த சொன்ன பல்லவி நேரே ஸ்கூலுக்குள் செல்ல, அவளை கண்டதும் ஆசிரியர்கள் அத்தனை பேர் சூழ்ந்து கொள்ள நலம் விசாரிப்பு தொடங்கி இப்போது வாழ்வு எப்படி போய் கொண்டிருப்பது வரை விசாரிக்க, பல்லவி நான்கு வருடத்தில் அவள் செய்த எல்லாம் சொல்லி இனி செய்ய போவதை பற்றியும் விளக்கி சொல்ல... அவள் கிளாஸ் மிஸ்ஸாக இருந்த வனிதாவுக்கு ரொம்ப பெருமையாக இருந்தது. அதிலும் மும்பை ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிய ஆராய்ச்சி தொடங்கும் பிரிவில் இவளையும் தேர்ந்தெடுத்திருப்பது ரெட்டிப்பு மகிழ்வை தர ரொம்பவே சந்தோஷப்பட்டாள் அந்த ஆசிரியை.
அன்றைய நாள் விக்கி அந்த ஸ்கூலில் பல்லவியை பற்றி இதுவரை தெரியாத பல விசயங்களை தெரிந்து கொண்டாள். பல்லவி எவ்வளவு அவனுடன் நெருங்கிய நட்பில் இருந்தாலும் பல விசயங்களை அவள் இதுவரை பகிர்ந்து கொண்டது கிடையாது. அரட்டை, ஜாலி என அவர்களுடன் கலந்திருந்தாலும் பல விசயங்கள் இன்னும் அவள் அவனிடம் சொல்லவே இல்லை. அப்படி சொல்லாத பல விசயங்களை இன்று தெரிந்து கொண்டான் விக்கி. திறமையில் அவள் ராணி தான் என்பது அவனுக்கு தெரியும். ஆனால் அவள் வாழ்ந்த வாழ்வும் ஜெயிக்க போராடிய வழியும் அவனை பிரமிக்க வைத்திருந்தது.
அதிலும் அந்த ஊரில் அவன் சந்தித்த ஒவ்வொரு மனிதர்களுமே பல்லவியை உயர்வாக பேசி உண்மையிலே விக்கி நெகிழ்ந்து தான் போனான். அதிலும் அவளின் கிளாஸ் மிஸ் வீடு வரை அழைத்து சென்று உபசரித்ததை அவனால் மறக்கவே முடியாது. அதன் பின் தோட்டம், குளக்கரை, கோவில் என எங்கெல்லாமோ சுற்றி விட்டு வீடு வந்து சேர மாலை 5 மணி ஆகிவிட்டது.
"விக்கி நீ சீக்கிரம் கிளம்பு. மாமா உன்னை டவுணுக்கு கூட்டிட்டு போய் நாம தங்க போற வீட்டுல விட்டுட்டு வந்திடுவாங்க."
என்றவாறு அவள் பாண்டியை அழைக்க...
"இப்ப என்னை எங்க அனுப்ப போறா?..."
"உனக்கு இந்த இடம் செட்டாகாது விக்கி. நீ நமக்கு தங்குறதுக்காக பாத்திருக்கிற வீட்டுக்கு போயிடு. இரண்டு நாளும் ஹோட்டல்ல எதையாவது வாங்கி சாப்பிடு. நான் நம்ம கிளாஸ்மெற் எல்லாரும் வரும் போது வந்திடுறேன். அதுவரை என் மாமா அத்தை கூட தங்கிட்டு வரேன்."
" நல்லா தங்கிக்க. நான் வேணாம்ணா சொல்லுறேன். அதுக்கு என்னை ஏன் போக சொல்லுறா?"
"உனக்கு இங்கே வசதியா இருக்காது விக்கி."
"அதை நான் சொல்லணம்மா. நீ சொல்லுறா?
"ஏய்... ஏஸி இல்லாம தூக்கம் வராதுணு நீ தானே சொல்லுவா?"
"அது மெட்ராஸ்ல்ல. அங்க உள்ள வெப்பத்துக்கு ஏஸி இல்லாம தூக்கம் வராதுணு சொல்லுவேன். உன் மாமா வீடு அப்படியா? ஏஸியை விட அழகான சுகமான ... சுகாதாரமான ... காற்றோட்டோமா... இருக்கிறப்ப ஏஸி எதுக்கு?..."
"அதுக்கில்லடா. நல்ல கட்டிலோ?, மெத்தையோ?... கூட..."
அவள் இழுக்க.
"அது யார் கேட்டா?. விரிச்சிக்க ஒரு துணி கொண்டா... இல்லயா?. நீ மூலையில சுருண்டது போல பாயே இல்லாம நானும் வேணா சுருண்டுக்கிறேன்."
சொல்லி கொண்டு அவன் சிரிக்க...
"இல்ல விக்கி. இங்க உனக்கு சரிப்படாது."
"ஏன்?... நான் இருக்கிறது உனக்கு எதுவும் இடைஞ்சலா இருக்குதா…?"
"ஏய்… அப்படி எல்லாம் இல்லடா."
"அப்ப விட்டு தள்ளு."
"எங்க தள்ளுறது. ஒரு மூணு நாளாவது நிம்மதியா யாரோட இடையூறும் இல்லாம தனியா சந்தோஷமா இருக்குலாம்ணு பார்த்தா. அதுக்கும் வேட்டா."
அவள் முனங்க…
"என்னடி சொன்னா?"
"அப்புறம் எப்பவுமே நெருஞ்சி முள் போல ஒட்டிகிட்டு இருந்தா."
அவள் கண்ணடித்து சிரித்து கொண்டு சொல்லியவாறு ஒட அவளை விரட்டிக் கொண்டு அவனும் ஓடினான்.
பாண்டியோ சிரித்து கொண்டே
" கமலம்… அந்த தம்பி படுக்க சரியான ஒரு இடமா தேர்வு செய்"
என சொல்ல…
"சரிங்க…"
என்றவாறு அவள் உள் செல்ல, பாண்டியின் கண்களோ பல்லவி மீதும் விக்கி மீதும் இருந்தது.
"அருமையான ஜோடி. பல்லவி எனக்கு மாப்பிள்ளை தேடுற வேலையை கொடுக்காம அவளே தேர்ந்தெடுத்துட்டா. இதை மட்டும் நல்லபடியா முடிச்சி வச்சிட்டேனா… கல்பனாவோட ஆன்மா சாந்தி அடைஞ்சிடும். என் விரல் பிடித்து நம்பி வந்த பொண்ணை கரையேத்திட்டேனு என் மனசும் நிறைஞ்சி போகும். எல்லாம் நல்லபடியா நடக்கணும். கடவுளே நீ தான் நடத்தி கொடுக்கணும்."
மனதுக்குள் வேண்டிய பாண்டி டவ்வலை எடுத்து தோளில் போட்டவாறு வெளியே வந்தான்.
அதே நேரம் சத்தம் போட்டு கொண்டே உள்ளே நுழைந்தான் ரவி.
"ஆமா சீமையில இல்லாத துரை வந்துட்டாரு. அவருக்கு இவன் வண்டியை தூக்கி கொடுத்திருக்கான். எடுத்தவனுக்கு கொண்டு கொடுக்கணும்ணு தெரியாதா."
என கத்தி கொண்டே வந்தவன் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் முன் வந்து அதை எடுக்க முயல…
"டேய்… டேய்… அது அந்த டாக்டர் தம்பியோடது. அதை எங்க எடுத்துட்டு போறா?"
பாண்டி கத்த,
"ஆமா பெரிய டாக்டர் தம்பி. இது உங்க டாக்டர் தம்பியோடதா? . வாங்கிட்டா... காலையும் கீழ ஊன்ற மாட்டானுங்க. இது என் நண்பன் சங்கிலியோடது. பாவம் பார்த்து ஒட்ட கொடுத்தா… உங்க வீட்டுக்குள்ள கொண்டு வந்து வச்சிருக்கீங்க."
"என்னடா சொல்லுறா? இது… இது சங்கிலி வண்டியா?"
"அப்புறம். அவனை தவிர வேற எவன் உங்க குடும்பத்துக்கு செய்வான். உங்களுக்கு அவனை போல ஒரு அப்பாவி கிடைச்சிருக்கான். எல்லாரும் வச்சி செய்யுறீங்க இல்ல."
"இவா இந்த ஊருக்கு வருகிறதுக்கு முன்னாலயே சின்ன பையன்னாலும் எப்படி இருந்தான். ஹெத்தா… திமிரா… தெனாவட்டா …கை நிறைய காசுப் பணத்தோட இருந்தவனை டொட்டலா மாத்துனது மட்டுமில்லாம… இப்ப கண்டும் காணாதவங்க மாதிரியா போறீங்க. நடத்துங்க. எவ்வளவு முடியுமோ அவ்வளவு நடத்துங்க. உங்களை சொல்லுறதுல என்ன இருக்கு. அந்த வெட்கம் கெட்டவனை தான் சொல்லணும். நீங்க இம்புட்டு செஞ்ச பிறகும் வீட்டில் பூச்சி போல மறுபடியும் மறுபடியும் வந்து விழுறான் பாரு. அவனை சொல்லனும்."
சொல்லியவாறு பாண்டியை பார்த்து முறைத்தவன்,
"போய் வண்டி சாவியை வாங்கிட்டு வாங்க …"
என்றதும் எதுவும் பேசாமல் உள் சென்ற பாண்டி, வெளி வந்த போது பைக் சாவியோடு வர, அவரை தொடர்ந்து வந்த பல்லவியை கண்டதும், அதற்கு மேல் எதுவும் பேசாமல் முணு முணுத்து கொண்டே வண்டியை ஸ்டாட் செய்து கொண்டு திரும்பி திரும்பி பார்த்தவாறே வெளி வந்தான் ரவி.
ரவி எப்போதும் அப்படி தான். ஆரம்பத்தில் அவள் இந்த ஊருக்கு வந்த பொழுதும் அவள் அருகில் இருந்து பேசியது இல்லை. எது சொல்ல வேண்டும் என்றாலும் செழியனிடம் சொல்லி தான் அனுப்புவான். பக்கத்தில் வந்தால் கூட திரும்பி பார்க்காமல் சென்று விடுவான்.. அவன் மட்டும் செழியனை போல் பேசி இருந்தால் இப்போது சங்கிலியை புறக்கணிப்பதற்கும், விக்கியோடு வந்து இறங்கியதற்கும், இன்று இப்படி நடந்து கொண்டதற்கும் நாக்கை புடுங்குவது போல நாலு கேள்வி கேட்டிருப்பான். ஆனால் அவன் வீரம் எல்லாம் பல்லவி இல்லாத இடத்தில் தான். அந்த புள்ளையின் முகம் பார்த்து விட்டால் அப்படியே அடங்கி விடுவான். அதனால் தான் ஆத்திரத்தோடு உள்ளே நுழைந்தாலும் ஆவேசமாக தந்தையிடம் எரிந்து விழுந்தாலும் அவள் முகம் பார்த்து விட்டால் அடங்கி போய் சென்று விட,
வெளியில் வந்து வண்டியை கிளப்பிக் கொண்டு போன ரவியையே பார்த்து கொண்டே இருந்த பல்லவி. திரும்பி உள் சென்று விட, அதுவரை மறைவில் தன்னை மறைத்து கொண்டு நின்ற சங்கிலியோ மெல்ல வெளி வந்தான். வெளிவந்தவன் உள் செல்லும் பல்லவியின் பின் முதுகையே இயலாமையோடு பார்த்து நின்றான்.
அத்தியாயம் தொடரும்...