அத்யாயம் - 3
கோபத்தின் உச்சத்தில் இருந்ததால் பாண்டியின் நடையில் வேகம் அதிகமிருந்தது. கையில் இருந்த துண்டை உதறி தோளில் போட்டவாறு அசுர வேகத்தில் அவர் நடக்க…
"பேசாம நம்ம வண்டியில வந்திருக்கலாம். மனுஷர் இப்படி வேகமா போறாரு."
எண்ணிகொண்டு வேகமும் நடையுமாய் சங்கிலி அவர் பின்னால் வர… சிறிது தூரத்திலே பாண்டியின் கோபம் மட்டுபட முன்னால் இருந்த வேப்பமர நிழலில் சட்டென அமர்ந்து விட்டார்.
சங்கிலி வேகமாக அவர் அருகில் வந்த போது மனுஷர் குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தார். முகத்தை கையால் பொத்தி கொண்டு அவர் குலுங்க… அவரின் தோளின் மேல் சங்கிலி கை வைக்க நிமிர்ந்த பாண்டி சங்கிலியை பார்த்ததும்.
அழுவதை நிறுத்தி கொண்டு அமைதியாக…
"என்னண்ணே என்னாச்சு.சாதாரண விசயத்துக்கெல்லாம் அசர கூடிய ஆள் இல்லயே நீங்க…நீங்க இப்படி குலுங்கி குலுங்கி அழுறீங்க. வீட்டுல பிரச்சினை ஒயலியா?..."
"இல்லப்பா சங்கிலி. பொம்பளைகளுக்கு தான் பாசம் அதிகம்னு .சொல்லுவாங்க. ஆனா மனசு கல்லா போன பொம்பளைகளும் இருக்க தான் செய்றாங்க. பல்லவி பாவம்டா. இவா போட்ட ஆட்டத்துல புள்ள பயந்து போய் இருக்குது. இது இப்படியே போனா என்ன ஆகுமோணு ரொம்ப பயமாயிருக்கும் சங்கிலி. அந்த புள்ள ரொம்ப நல்லா வாழ்ந்த புள்ளைடா. ஒரே மகா. தாய் பாசத்துக்கு குறைவிருக்குமா சொல்லு. அதோட ஒவ்வொரு செயலையும் பார்த்தா எந்த குறையுமில்லாம ரொம்ப சந்தோஷமா வளர்ந்த புள்ளை போல தான் தெரியுது. மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ல தான் படிச்சிருக்கு. அந்த புள்ளையோட துணியை மட்டும் பாத்தியணா இரண்டு பிரோ நிறைய இருந்துச்சு. கல்பனாவும் இவளும் எடுத்துகிட்ட போட்டோவை பார்த்தே கல்பனா புள்ளையை தங்கமா வளர்த்துகிட்டதை தெரிஞ்சிகிட்டேண்டா."
"அப்படி வளர்ந்த புள்ளைக்கு அது போல ஒரு வாழ்வு கொடுக்க முடியாது தான். ஆனா மூணு வேளை சோறாவது கொடுக்கலாம்ணு தாண்டா கூட்டிட்டு வந்தேன். ஆனா இந்த பத்ரகாளி ஆடுற ஆட்டத்தை பார்த்தா ரொம்ப பயமா இருக்குடா. கூட்டிட்டு வந்து அவளோட வாழ்வை நானே கெடுத்திட்டேனோனு தோணுது. ராத்திரி அந்த புள்ள ஒத்த கண் தூங்கல. அழுதுட்டே தான் இருந்துச்சு. அதான் மனசு கேட்காம இறங்கி போனா அவா ஏரி மேய்றா. அதான் தாங்க முடியாம வெளியில வந்துட்டேன்."
"சாப்பிட்டாளா அண்ணாச்சி…"
"சாப்பாடு. ஐயோ. அந்த புள்ள நேற்று மதியானம் சாப்பிட்டது. அதற்கு பிறகு இதுவரை சாப்பிடல. இவளை சமாதானப்படுத்துற எண்ணத்துல அதை மறந்துட்டேனே…"
பாண்டி பரபரப்போடு எழும்ப…
"இருங்க அண்ணாச்சி. நானே வாங்கிட்டு வாரேன். எப்படியும் உங்க பொண்டாட்டி அந்த புள்ளைக்கு பச்சை தண்ணி கொடுக்காதுணு தெரியும். இரண்டு நேரத்துக்கே வாங்கிட்டு வாரேன். கொண்டு கொடுக்க… முதல்ல சாப்பிடட்டும். அப்புறம் பதமா பேசிக்கலாம். அக்காவும் எத்தனைநாள் கோபமா இருக்கும். எல்லாம் சரியாகும். ஆனா எந்த காரணம் கொண்டும் அந்த புள்ளையை கைவிட்டுடாதுங்க அண்ணாச்சி. அப்புறம் அந்த புள்ளையும் என்னை போல ஆகிடும்."
"சின்ன வயசுல நான் பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும். இன்று என் காதுபடவே பணப்பேய்ணு சொல்லுறாங்க. உண்மைதான் நான் பண பேய் தான். ஏன் அப்படி ஆனேன். இந்த பணம் இல்லாம நான் நின்ன போது இந்த ஊர் தானே நாயை ஒடவிட்டு என்னை அடிச்சிது. ஒரு வாய் சோற்றுக்காக எத்தனை வாசல்படியில காவல் இருந்தேன்."
"போட்டாங்களா? இல்லல. தூர போடுற சோற்றை கூட எனக்கு போடாம விரட்ட தானே செய்தாங்க. அதுனால தானே பண பேயா மாறினேன். என் நிலைமை அந்த பொண்ணுக்கு வந்திட கூடாதுண்ணே. அந்த பொண்ணுக்கு எது செய்யுறதா இருந்தாலும் எனட்டச் சொல்லுங்க நிச்சயம் செய்றேன்."
என்றவன் லூங்கியை தூக்கி கட்டியவாறு சாப்பாடு வாங்க கிளம்ப, பாண்டி அவனை ஆச்சரியமாக பார்த்து கொண்டிருக்க……
முன்னோக்கி நடந்தவன் சட்டென திரும்பி ஸ்டைலாக தன் கழுத்து சங்கிலியை ஒடவிட்டவாறு”,....
"அந்த புள்ளைக்காக செய்யுறதுனா மட்டும் எந்த சம்பளமும் வேணாம்.ஆனா உங்க விறகு மூட்டையை சுமக்க கண்டிப்பா சம்பளம் கொடுத்திடணும் அண்ணாச்சி…"
சொல்லி கொண்டு சங்கிலி சிரிக்க பாண்டியும் சிரித்துகொண்டார்.
"எப்படியான பையன். இவனுக்கு கூட நெஞ்சுல ஈரம் இருக்கு. ஆனா இந்த கமலம் இப்படி இருக்காளே. அதுவும் ஒரு பொண்ணை பெத்து வச்சிட்டு இப்படி ஒரு குழந்தை சூழ்நிலை கைதியா நிக்குறதைப் புரிஞ்சிக்க முடியவனா. என்ன மனசோ அவளுக்கு."
பாண்டி நொந்து நூலாகி போய் உடைந்து உட்கார்ந்திருந்த நேரம் பார்சலோடு வந்த சங்கிலி கவரை பாண்டியின் கையில் கொடுக்க… பணத்தை எடுத்து பாண்டி நீட்ட……
"இல்ல அண்ணாச்சி தினமும் என்னால அந்த புள்ளைக்கு சோறு போட முடியாது. ஆனா இன்றைய ஒரு நாள் சாப்பாடாவது என் சாப்பாடா இருக்கட்டும். ஆனா அவளை பட்டினியா மட்டும் படுக்க வச்சிடாதுங்க. அந்த பட்டினியோட வலியை பல இரவுகள் அனுபவிச்சவன் நான். அந்த வலியால இறுகினவன்தான் நான். அது போல அந்த புள்ளையும் இறுகிடகூடாது."
சொல்லி கொண்டு சங்கிலி சிரித்து கொண்டு நின்றாலும் அவன் கண்கள் கோர்த்து நின்ற நீர் துளிகளை பார்த்தவர். அவன் வலி புரிய…
"வரேன் சங்கிலி..ரொம்ப சூடா தான் வந்தேன். உனட்ட பேசின பிறகு மனசு இளகினது போல இருக்கு."
சொல்லி கொண்டே விடை பெற்று வீட்டை நோக்கி நடந்தார்.
"தான் வெளியில் வந்ததும் அந்த புள்ளையை எதுவும் செய்தாளோ?.."
என்ற கலக்கம் முதன்முதலாக நெஞ்சில் படர… ஆவேசமாக மிக மிக விரைவாக வீட்டை நோக்கி நடந்தான்.
வீட்டிற்குள் நுழைந்ததுமே அவன் கண்ட காட்சி அவன் ரத்தத்தையே சூடாக்க... மனைவி மேல் கொலைவெறி ஆத்திரம் வந்தது அவனுக்கு. அவன் பிள்ளைகள் மூன்று பேருக்கும் அவள் சமைத்து உணவு பரிமாற… பல்லவியோ ஏக்கத்தோடு பார்த்து கொண்டு நின்றிருந்தாள்.
"மலட்டு ஜீவன் போல." அந்த குழந்தையை கண்டும் காணாதவள் போல அவளும் உண்ண தொடங்க அக்காட்சியை கண்டதும் உள்ளத்துக்குள் வந்த வெறியை அடக்கியவர் மெல்ல நடந்து பல்லவியின் அருகில் வர……
பல்லவியோ பரிதாபமாக அவரை பார்த்தாள்..பசி மயக்கம் தெளிவாக அவள் கண்ணில் தெரிந்தது.
"சீ……"என ஒரு பார்வையை மனைவி மீது வீசி விட்டு பல்லவியை அழைத்து கொண்டு உள்ளே போனார். பெஞ்சின் மேல் அவளை அமர வைத்து, கொண்டுவந்த பார்சலில் ஒன்றை பிரித்து அவள் முன் வைக்க……
அவள் கலக்கத்தோடு அவரை பார்க்க……
"சாப்பிடும்மா… எல்லாம் சரியாகும். அதுவரை இப்படி சாப்பிட்டு தான் ஆகணும்.சாப்பிடு."
என்றதும் அவசரம் அவசரமாக உண்ணத் தொடங்கினாள் பல்லவி. அவள் எடுத்து உண்டத் தோரணையே அவள் எவ்வளவு பசியில் இருந்திருக்கிறாள் என்பதை காட்ட பாண்டியின் கண்கள் கூட கலங்கி விட்டன.
"அவள் பசியில் இருப்பாள் என்று நமக்கு கூட தோன்றவில்லை. ஆனால் அந்த சங்கிலி சரியா கணிச்சிருக்கானே. இரக்கம் கெட்டவன் காட்டுமிராண்டிணு அவனை எல்லாரும் சொல்லுறாங்க. ஆனா அவனா இரக்கம் இல்லாதவன்?...அவனா காட்டுமிராண்டி."
"உங்க எல்லாருக்கும் அவன் தான் சரி. செத்த வீடுனாலும் சரி. சந்தோஷ வீடுனாலும் சரி சவுசினியம் பார்க்கும் ஆளே இல்லை. தனக்கானது கிடைத்தே ஆக வேண்டும் என்று நிற்பவன் தான். ஆனால் பல்லவியின் வலி அவனுக்கு கூட புரிகிறது. வீட்டுல இருக்கிற இவளுக்கு புரியலியே…"
எண்ணியவரால் சாப்பிட முடியவில்லை. பல்லவியை சாப்பிட சொல்லிவிட்டு எழுந்து வெளியே வந்தார். நாளைய பொழுது பயமுறுத்த ஆரம்பித்தது. அடுத்து வந்த மூன்று நாளும் கூட பெரிய வேறுபாடுயின்றி அப்படியே நகர்ந்தது. பாண்டி அந்த மூன்று நாளும் மனைவியின் அருகில் கூட செல்லவில்லை. கமலமும் உமக்கு நான் குறைந்தவளா என்பதுபோல் தான் இருந்தாள். பண்ணை வீட்டிற்கு வேலைக்கு அவளும் செல்லவில்லை. கையிலிருந்த பொடிப்பொட்டு காசை வைத்து நான்கு நாளை சமாளித்தாகி விட்டது. இதற்கு மேல் சமாளிக்கவும் முடியாது.
பாண்டி வேலைக்கு இன்றே கிளப்பினால் தான் நாட்களை இப்படியாவது கடத்த முடியும். இதில் வேறு மனிதர் முறுக்கி கொண்டு திரிகிறார். அந்த பொண்ணுக்கு சமைத்ததில் கொடுக்காதவுடன் இவரும் அவள் கையால் சாப்பிடவே இல்லை.நான்கு நாளாய் அப்படியே தான் அலைகிறார். வீடு வந்தால் கூட அவள் முகம் பார்க்கவில்லை. இரவு ஆனால் அவள் அருகில் படுப்பதில்லை. ஆரம்பத்தில் வீம்பில் அவள் ஒதுங்கி சென்றாலும் நாட்கள் செல்ல செல்ல மனது வலிக்க ஆரம்பித்தது.
அதிலும் நேற்று மாரியின் மனைவி வந்து சொன்ன பின் இறுகியிருந்த அவள் மனது லேசாக இளகியது.
"என்ன சொல்லுறீங்க அக்கா."
சொல்ல வந்தவளை ஆச்சரியமாக கமலம் பார்க்க…
"ஆமா கமலம். நீயும் விடாம இப்படியே வீம்பு பிடிச்சிட்டிருந்தா. ஆத்திரத்துல உன் புருஷன் அந்த பொட்டை சிறுக்கியை கூட்டிட்டு உன்னை விட்டு போயிட்டாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல. அப்புறம் குய்யோ…முய்யோணு சொன்னா யாரும் எதுவும் பண்ண முடியாது…."என பெரிய வெடியை கொழுத்தி போட்டுவிட்டு செல்ல…
அதன் பிறகு தான் கொஞ்சமாக கனியத் தொடங்கியதுஅவள் மனது. அதில் வேறு வாரம் ஒன்று கழிந்தும் மனிதர் இறங்கி வராதது வேறு பயத்தை தர குட்டி போட்ட பூனை போல அங்குமிங்கும் நடமாடத்தொடங்கினாள்..
நிமிடத்திற்கு ஒரு முறை பல்லவி இருந்த இடத்தை எட்டி பார்த்தாள்.
அவளை பார்க்க பார்க்க இவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இத்தனை வருட குடும்ப வாழ்வில் அந்த மனிதர் இப்படி நடந்து கொண்டதே கிடையாது. வேலைக்கு போகாமல் இருந்ததே இல்லை. ஏன் அவளின் அருகில் வராமல் புறக்கணித்ததே இல்லை. இதற்கு முன்னால் சண்டை அவர்களுக்குள் வராமல் இல்லை. வாயை மூடா சகுனியை கட்டி கொண்டால் சண்டை இல்லாமல் போகுமா? வீட்டில் இருந்தாலே ஏதாவது குற்றம் கண்டுபிடித்து சாட தான் செய்வாள். சில வேளை வாக்குவாதம் முற்ற கூட செய்திருக்கிறது. என்றாலும் இரவு ஆனால் அவள் முந்தானைக்குள் ஒளிந்து கொள்ள மட்டும் அவன் தயங்கியதே இல்லை. காலையின் ஊடல் இரவு கூடலோடு முடிவுக்கு வந்து விடும்.
ஆனால் இப்போது முழுதாய் ஒரு வாரம் அவள் அருகாமையை நெருங்காமல் இருக்கிறான். அதிலும் அவள் கையிலிருந்து பச்சை தண்ணீர் கூட வாங்கி குடிக்காமல் இருக்கிறான். இதுவே அவளுள் புயலை கிளப்பியது. எதிர் வீட்டு அக்கா சொல்வது போல நடந்து விட்டால் நினைப்பே மனதுக்குள் புயலை கிளப்ப……
"என்ன ஆனாலும் சரி. இன்றே அவரிடம் பேசி விட வேண்டியது தான். இந்த சிறுக்கிக்காக அவரை நாம இழந்திட கூடாது." என்ற தீர்மானத்தில் தான் என்றும் இல்லாமல் இன்று தலை வாரி பூ சூடி. நல்ல சாரியாய் ஒன்றை எடுத்து கட்டி கொண்டு முகத்தில் வராத பொன் சிரிப்பை ஏந்தி கொண்டு பாண்டியின் வரவுக்காய் காத்திருந்தாள்.
மாலை போய் இரவும் வந்து விட்டது. ஆனால் பாண்டி தான் வரவே இல்லை. நேரம் ஆக ஆக பயம் அவள் வயிற்றை தாக்கியது. ஒரு நிமிடத்திற்கு முன் தான் பல்லவி இருப்பதை உறுதி செய்து விட்டு வந்திருப்பாள் என்றாலும் அவள் இருக்கிறாளா என மறுபடியும் போய் பார்ப்பாள்.
இப்படி கமலம் குழப்பத்தின் உச்சத்தில் நின்று வாசலுக்கும் பின்புறத்திற்குமாக ‘நடக்க மிக சோர்வோடு உள்ளே நுழைந்தான் பாண்டி.
பாண்டியை கண்டதும் குப்பென வந்த ஒரு உணர்வு அவளை தாக்க...பின்புறமிருந்து ஒடி முன்னால் வந்தாள். உள்ளே வந்தவனின் முன் போய் அலங்காரத்தோடு நின்றும் பாண்டி ஏறிட்டும் பார்க்காமல் நேரே பல்லவி இருந்த இடத்திற்கு வர, கமலத்தின் கோபம் விறு விறுவென மண்டையை தாக்க தொடங்கியது. ஆனாலும் கட்டுபடுத்திக் கொண்டு அவள் நின்றிருக்க…
உள்ளே போன பாண்டியோ அதே மூலையில் அப்படியே முடங்கி கிடந்த பல்லவியை எழுப்பி,
"புறப்படு பல்லவி."
என்றதும் கமலத்திற்கு தூக்கிவாரிப் போட்டது.
"புறப்பட சொல்லுறாரு. ஒரு வேளை மாரி சொன்னது போல மொத்தமா என்னை விட்டுட்டு இவளோட போக முடிவு பண்ணிட்டாரா?" உடல் முழுவதும் பதற்றம் தொற்றி கொள்ள…
ஒடி அவர் அருகில் வந்தவள்.
"இந்த ராத்திரி நேரம் அவளை எங்க புறப்படச் சொல்லுறீங்க…"
பதட்டத்தில் கேட்டாலும் திமிர் குறையாமல் கேட்க… திரும்பி ஒரு முறை அவளை ஆழமாக பார்த்த பாண்டி. எதுவும் பேசாமல் திரும்பி…
"நீ புறப்படுடா செல்லம். நாம வேணாம்ணு ஒரு வாரம் இருந்தவங்களுட்ட எல்லாம் நாம பேச வேண்டிய அவசியமே இல்லை."
சொன்னவன் பல்லவியை எழுப்பி புது டிரஸ் போடவைக்க….
இப்போது கமலத்தின் இதய துடிப்பின் ஒலி அதிகமானது. ஆனாலும்
"கேட்டுட்டே இருக்கேன். பதில் சொல்லாம அவளை புறப்பட சொன்னா என்ன அர்த்தம்."
"ம்…ம்... உனட்ட பேச புடிக்கலணு அர்த்தம்…"
வெடுக்கென சொல்லி கொண்டு மறுபடியும் அவர் திரும்பி கொள்ள…
"ஏன்ய்யா. இவளுக்காக என்ன வேணாம்ணு முடிவு பண்ணிட்டால நீ…"
விம்மலோடவே அவள் கேட்க…
"நாங்க வேணாம்ணு முடிவு பண்ணி தனியா சமைச்சி சாப்பிட்டவங்க எல்லாம் அது பற்றிப் பேச கூடாது."
"சாப்பிட்டுட்டா விட்டுட்டு போயிடுவியா?"
அவளும் ஆதங்கமாக கேட்க…
"வேணாம்ணு ஒதுங்குனவங்களுக்கு இப்ப என்ன வந்துச்சாம். பல்லவி நீ சீக்கிரம் கிளம்புமா நேரமாகுது."
என அவரும் அவசரமாக ரெடியாக.
அவர் முன்னால் போய் நின்றவள்
"இப்ப சொல்ல போறியா இல்லையா?....இந்த ராத்திரி நேரம் எங்க கிளம்புறா?…"
மறுபடியும் கண்ணில் கலக்கத்தோடு அவள் கேட்க.
ஒரு முறை அவளை பார்த்தவன் எதுவும் பேசாமல் பல்லவியின் கரத்தை பிடித்து கொண்டு வெளிவர…
கமலம் உடைந்தே விட்டாள். பயத்தில் கண்ணில் இருந்து கண்ணீர் பொல பொலவென வழிய தொடங்க…..அதை சிறிதும் சட்டை செய்யாமல் முன்னோக்கி அவன் நகர… அதே நேரம் அவன் குழந்தைகள் மூவரும் துணி மாற்றி புறப்பட்டு வர…கமலம் அதிர்வோடு அவர்களை பார்த்தாள்.
"என்ன இவர் குழந்தைகளையும் கூட்டிட்டு போறாரா?...அப்படினா நான் மட்டும் வேணாம்ணு முடிவுபண்ணிட்டாரா?"
அவள் விக்கித்து போய் நின்ற நேரம்.
ஒடி வந்த ஐஸ்வரியா தந்தையின் கையை பிடித்து கொண்டு.
"எனக்கு ஐஸ் வாங்கி கொடுப்பியாப்பா…"
"வாங்கி தரேண்டா செல்லம்."
"அப்பா எனக்கு…:"செழியன் ஒடி வந்து கேட்க…
"என் மகனுக்கு இல்லாமலா…வாங்கி கொடுக்கிறேன்டா கண்ணுகளா…"
"அப்பா சாமி பூ குழி இறங்குறது எப்போப்பா.."
"நைட் பன்னிரெண்டு மணி வாக்குல நடக்கும்." ஒரக்கண்ணால் மனைவியை பார்த்து விட்டே பதில் சொல்ல..அப்போது தான் பல்லவிக்கும் கமலத்திற்கும் கூட விசயம் புரிந்தது.
"இந்த மனுஷர் புள்ளைங்களை கூட்டிட்டு கருப்பசாமி கோவில் திருவிழாவுக்கா போறாரு. நாம தான் மாரியோட பேச்சை கேட்டுட்டு ரொம்ப குழம்பிப் போயிட்டோமோ?…"
கமலம் நிம்மதி பெருமூச்சு ஒன்றை விட்டவாறு நிற்க……
பாண்டி திரும்பி ஒரு முறை கூட மனைவியை பார்த்து விட்டு முன் நோக்கி நகர…
"எவ்வளவு திமிரு.என்னை கூப்பிடணம்ணு தோணுதா பாரு. சண்டை போட்டா பொண்டாட்டி இல்லணு ஆகிடுமா?....ம்கூம்…
முகத்தை சுழித்து கொண்டு கமலம் உள் செல்ல பாண்டி குழந்தைகளோடு வெளியேறினார்.
வெறுப்பும் வேதனையுமாக உள் சென்றவளின் உள்ளம் எரிமலையாய் கொதித்தது. எல்லாம் அவளால் வந்த வினை. இல்லை என்றால் இந்த மனிதர் இந்த அளவு கோபப்படும் ஆளே இல்லை. உனக்கு இருக்குடி.
கமலம் கர்வி கொண்ட நேரம்… இரவு இருளில் கலர் மின் விளக்குகளின் அணிவகுப்பில் நடந்த திருவிழா கூத்தை விழிவிரியப் பார்த்து நின்றாள் பல்லவி. அவள் கண்களில் பல நாளுக்கு பின் ஒளி சுடர் பிரகாசமாக எரிந்தது.
அத்யாயம் தொடரும்….