அத்யாயம் - 4

  • Hi friends, வாசிப்பதை சுவாசமாக சுவாசிப்போம். ❤️Sweet Sundari தளத்திற்கு உங்கள் அனைவரையும் இதயம் மகிழ்ந்து மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்❤️ இத்தளத்தில் எழுத விரும்பும் படைப்பாளிகள் sweetsundari217@g.mail.com என்ற மின்னஞ்சல் தொடர்பை தொடர்பு கொள்ளவும்.
Status
Not open for further replies.
அத்யாயம் - 4


மலக்க மலக்க விழித்து கொண்டு நின்ற பல்லவியை பார்த்து சிரித்தார் பாண்டி.

"என்ன பல்லவி எங்க ஊர் திருவிழா எப்படி?..."

என்றவரிடம் விழியின் விரிப்பால் பதில் சொன்னவள் பொம்மலாட்டம், கரகாட்டம் என களை கட்டி கொண்டிருந்த அந்த இடத்தின் ஒவ்வொரு அழகையும் ரசித்தாள். போதா குறைக்கு ஐஸ்வர்யா ஆயிரம் கேள்வியை பாண்டியிடம் அடுக்கடுக்காய் கேட்க பாண்டியும் சலிக்காமல் பதில் சொல்லி கொண்டே இருந்தார். பல்லவியின் மனதிலும் ஆயிரம் சந்தேகங்கள் எழுந்தது.ஆனால் கேட்க தான் மனசு வரவே இல்லை. தாயிடம் நெருங்கி போனது போல,..இங்கு யாரிடமும் மனது நெருங்கி போகவில்லை.ஏன் ஐஸ்வரியா கூட அவளிடம் இதுவரை பேசியதில்லை.அவள் இவளை விட மூன்று நான்கு வயது இளையவள் தான் என்றாலும் தாயின் பேச்சை கேட்டு விட்டு பக்கத்தில் கூட வரவில்லை.செழியனோ தூரமாய் நின்று பார்ப்பான். ஆனால் பேசியதே இல்லை. ரவி மட்டும் அடிக்கடி பக்கத்தில் வருவான். அவன் தன்னை விட மூத்தவன் என்பதால் அவளுக்கு அவனிடம் பேச தோன்றவில்லை.

மொத்தத்தில் அவளிடம் பேசும் ஒரே ஆள் பாண்டி தான். ஆனாலும் தாயிடம் மட்டும் வளர்ந்த அவளால் பாண்டியிடம் நெருங்கி பழக முடியவில்லை. இங்கு யாரிடமும் மனம் திறந்து கேட்கவும் தோன்றவில்லை.

"அப்பா… அந்த பொம்மை சூப்பரா இருக்குப்பா…"

ஐஸ்வரியா விற்பனைக்கு வைத்திருந்த பொம்மையை சுட்டி காட்டி கேட்க…

"இல்லடா செல்லம். அதை இப்ப கேட்டா கொள்ளை விலைச் சொல்லுவான். அப்பா விறகு கொண்டு டவுனுக்கு போவேன்ல்ல அப்ப வாங்கிட்டு வந்து கொடுக்கிறேன்."

என்றவர் குழந்தைகளை கூட்டி கொண்டு அந்த கூட்டத்துக்குள் நடக்க… விதம் விதமான அலங்காரத்தை ரசித்துக் கொண்டே வந்தவள் யாரின் மேலோ மோதி விட, சட்டென திரும்பி பார்த்தவள் முகம் பொலிவிழக்க தொடங்கியது. பயத்தில் உடலே தந்தியடிக்க தொடங்கியது.

அவள் முன்னால் கன்னம் கரேல் என்று ஒரு உருவம். பற்களில் கூட கறை தெரிந்தது. செம்பட்டை படிந்த தலை. சட்டையின் அத்தனை பட்டினையும் கழற்றி விட்டு விட்டு உள்ளே தெரிந்த கிளிந்த பனியனை வெளி காட்டி கொண்டு… போதா குறைக்கு கழுத்தில் கிடந்த சங்கிலியை கடித்து கொண்டு அசல் ரவுடி போல சங்கிலி நின்று கொண்டிருந்தான்.

அவளை பார்த்த மாத்திரத்தில் ஏதோ ஈர்க்க… கனிந்துருகும் பார்வையோடு அவன் நின்றிருக்க, இவளோ பயத்தில் இரண்டடி பின்வாங்கி வெளிறிப் போய் நின்றிருந்தாள்.

அவளின் நிலையை பார்த்ததுமே சங்கிலியின் முகம். பேயறைந்தது போல் ஆனது. அவளின் முகத்தில் தெரிந்த வெறுப்பும் அருவருப்பும் அவனை பொசுங்கி போக வைத்து விட…

"சாரி…சாரி...சாரி…"

என சொல்லி கொண்டே அவளை திரும்பி திரும்பி பார்த்தவாறு முன்னோக்கி நகர்ந்தான்.

பிடித்திருந்த மூச்சை விட்டவாறு இறுக்கி இருந்த விழியை மெதுவாக திறந்தாள் பல்லவி. சங்கிலி அவளை விட்டு வெகுதொலைவு சென்ற பிறகும் அவள் உடல் நடுங்கி கொண்டு தான் இருந்தது.

"என்ன பல்லவி என்னாச்சு. ஏன் ஒரு மாதிரி ஆகிட்டா…" என கரிசனையோடு பாண்டி அருகில்வர…

"ஒ… ஒண்ணுமில்ல மாமா."

"சரி சரி… வா கூட்டம் ரொம்ப அதிகமாயிருக்கு. நெரிசல்ல மாட்டிக்க கூடாது. அந்த பக்கமா போய் அமரலாம்."

என பாண்டி அனைவரோடும் அந்த குறிபிட்ட இடத்திற்கு வர… தூரமாய் சங்கிலி தன் நண்பனோடு நிற்க…அது சரியாக பல்லவியின் பார்வையில் விழுந்தது.

"ஐயோ!… மாமா வேற இந்த ரவுடி பக்கமா கூட்டிட்டு வந்து உட்கார வச்சிருக்காரு."

பதட்டத்தோடு அமர்ந்தாலும் நொடிக்கு முன்னூறு முறை பரபரப்போடு அவனை பார்க்க அவனோ இவர்கள் புறமே வைத்த கண் எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தான்.

நடுங்கி தான் போனாள் பல்லவி. இடிச்ச கோபத்துல எதுவும் பண்ணிடுவானோ என்ற பயமே மேலோங்கி நிற்க, அதற்கு பின் மனம் விழாவில் செல்லவில்லை. அதில் வேறு இவர்கள் போகும் இடங்களில் எல்லாம் முளைத்தது போல் அவனும் வந்து நிற்க… சொல்லவேண்டாம்... பல்லவி மொத்தமாய் நடுங்கியே விட்டாள்.

அதை பாண்டியிடம் சொல்லவும் பயந்தவளாய் நிச்சயம் அவன் தன்னை தான் தண்டிக்க துரத்துகிறான் என தப்பு கணக்கு போட்டு விட்டு… போகும் இடத்தில் எல்லாம் பயத்தோடு திரும்பி திருப்பி பார்த்தவாறே தான் சென்றாள்.

சாமி பூக்குழி இறங்கும் இடத்திற்கு வந்ததும்.

"ஐயோ!… இந்த தீக்குள்ளாலவா இறங்குவாங்க…"

பயத்தில் விழி விரிய பார்த்தவள்.

"ஐயோ!… தகதகணு இருக்குது. இதுக்குள்ள இறங்குனா மொத்தமா எரிஞ்சி போயிட மாட்டாங்க.'

அவள் எண்ணி கொண்டிருக்கும் போதே அவள் பக்கத்தில் கொஞ்சம் நீங்கி நின்ற பெரியவர் சட்டென ஆடத் தொடங்க… துடித்து தான் போனாள் பல்லவி. உடலும் மனமும் அவள் கண்ரோலில் இல்லாமல் சங்கிலியால் நடுங்கி கொண்டிருந்த நேரம், சட்டென அவரும் ஆட… பல்லவி பயத்தில் மொத்தமாய் கலங்கி நின்ற நேரம்…

சரியாக சங்கிலியும் வந்து அவள் நேர் எதிரில் நிற்க… அவள் விழியோ பயத்தில் விரிய தொடங்கி, உடல் மொத்தமாக ஆட்டம் கண்ட அதே நேரம்,

சாமியாட்டம் உச்சத்தில் செல்ல, சாமி தென்னம்பூவோடு தீக்குழிக்குள் இறங்க… பயந்து நடுங்கி கொண்டிருந்த பல்லவிக்கு அது சங்கிலியாக தெரிய… அவன் முகமும், சாமி ஆடுபவரின் முகமும் ஒரே போல் கோரமாயும், உள் பக்கமாய் நாவை மடித்து அவர் வெறி கொண்டு ஆடிய ஆட்டமும் தெரிய…

"வீல்”" என கத்தி கொண்டு அடி சாய்ந்து அப்படியே விழுந்து விட்டாள் பல்லவி. பல்லவியின் இந்த நிலையை சற்றும் எதிர்பார்த்திராத பாண்டி பயத்தில் என்ன செய்வது என புரியாமல் நிற்க ஒடி வந்த சங்கிலியோ ஒரு நொடி யோசிக்காமல் அவளை தூக்கி கொண்டு…

"இங்க வேணாம் அண்ணாச்சி. இந்த உடுக்கு சத்தம் கேட்காத இடமா கூட்டிட்டு போறது தான் நல்லது. ரொம்ப பயந்து போயிட்டாணு நினைக்கிறேன்." என்றவன் அவளை தூக்கி தோளில் போட்டவாறு நடக்க பதட்டத்தோடு பாண்டியும் பின்னால் சென்றான்.

சிறிது தூரம் கொண்டு சென்றவன்.

"இருங்க தண்ணி கொண்டு வரேன்…"

என சங்கிலி கிளம்பி செல்ல… பதட்டமான பாண்டி அவள் கன்னத்தில் அடிக்க தொடங்கினார். சிறிது நேரத்தில் கண் திறந்த பல்லவி.

"போயிடுவோம் மாமா… இங்க வேணாம் மாமா…"

என பயத்தில் உறைந்து போய் சொன்னதும்.

"பயப்படாதடா. ரொம்ப தூரமா வந்துட்டோம்…"

"போயிடுவோம் மாமா…"

மறுபடியும் அவள் சொல்லி கொண்டு நடுங்க…

"செழியா?… நீயும் அண்ணனும் நில்லுங்க. தண்ணீர் எடுக்க போனவன் வந்ததும் சொல்லிடுங்க. நான் ஐஸ்வரியாவையும் பல்லவியையும் கூட்டிட்டு கிளம்புறேன்."

என்று சொல்லி கொண்டு அவர் கிளம்பிய 5 நிமிடத்தில் வந்த சங்கிலி அவளை காணாததும் திகைக்க… ரவியோ நடந்தவற்றை சொல்லி விட்டு அவனுடன் திருவிழா நடக்கும் இடத்திற்கு வந்தனர். ஏனோ அதன் பின் அங்கு நிற்க சங்கிலியால் முடியவில்லை. சுற்றி சுற்றி சிறிது நேரம் நின்னவன் பின் கிளம்பி சைக்கிள் கடையை நோக்கி நடந்தான். வரும் வழி எல்லாம் அடிசாய்ந்து விழுந்தவளே நினைவலையில் வர தலையை ஒரு முறை சிலிப்பிக் கொண்டான்.

வேகமாக போனாலும் அந்த வீட்டை தாண்டி செல்ல மனம் வராததால் ஒருமுறை அந்த வீட்டை சுற்றி வந்தான். உள்ளிருந்து எந்த சத்தமும் வரவில்லை. "தூங்கியிருப்பாங்களோ?..." இருக்கலாம்…

என தனக்கு தானே பேசி கொண்டவன் சிறிது நேரம் கூட நின்று விட்டு கடையை நோக்கி நடக்க…

உள்ளே…

ஒரு மூலையில் படுத்திருந்தாலும் தன் முட்டை கண்ணை உருட்டி கொண்டு தான் இருந்தாள் பல்லவி. கண் மூடும் நேரம் எல்லாம் தீக்குழிக்குள் நின்று ஆடிய சங்கிலியே தெரிய கண்களை மூடக்கூட பயமாக இருந்தது.

திரும்பி திரும்பி படுத்தும், ஏன் தாயின் சாரியை எடுத்து தலை வரை மூடிய பிறகும் கூட அவளின் நினைவலையில் தவழ்ந்த சங்கிலியின் கோர முகம் போகவே இல்லை. அன்றைய நாள் இரவு பொட்டு தூக்கம் கூட வராமலே அவள் புரண்டு கொண்டிருக்க…

பாண்டியும் தூக்கம் வராமல் தான் புரண்டான். இத்தனை வருட வாழ்வில் அவன் மனைவி இல்லாமல் எந்த திருவிழாவிற்கும் சென்றதில்லை. அதிலும் ஒரு வாரமாய் பேசாமல் ஒதுங்கியவள் வலிய வந்து கேட்ட பிறகும் அழைத்து கொண்டு போகாதது மனவலியை தந்தது. அதிலும் திரும்பி வரும் போது அவள் மூலையில் சுருண்டிருந்த தோற்றம் மனதை பிசைய… தூக்கத்தை தொலைத்தவராக தான் படுத்து கிடந்தார்.

அதே சமயம் கமலமோ குலுங்கி குலுங்கி அழுது கொண்டே இருந்தாள். அவளால் கணவரின் புறக்கணிப்பை ஏற்று கொள்ள முடியவில்லை. என்ன வாயாடியாய் இருந்தாலும் எதிர்த்துப் பேசினாலும் அவனின் ஒதுக்கல் அவளை வலிக்க தான் செய்தது. அந்த வலி பல்லவியின் மேல் கோபத்தையும் வெறுப்பையும் தான் அவளுக்கு அதிகமாக விதைத்தது. ஆனாலும் இப்போது காட்டுவது தனக்கு தான் பாதிப்பு என உணர்ந்தவள்…

மெல்ல திரும்பி படுத்தாள். இரவு அவளுக்கும் தூக்கம் வரவில்லை. காலையில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என இரவே கணக்கு போட்டாள். அதன்படி காலையிலே எழும்பி எல்லா வேலையும் முடித்து விட்டு காப்பியோடு கணவர் படுத்திருந்த இடத்திற்கு வந்தாள்.

மெல்ல அவன் அருகில் அமர்ந்து அவனை எழுப்பினாள். பல நாளுக்கு பின் இப்படி அருகில் வந்து எழுப்பிய மனைவியை விசித்திரமாக பார்த்தார்.

"ஏன்?... அப்படி பாக்குறீங்க. எடுத்துக்குங்க…"

என்றதும் மறுபடியும் வியப்போடு பார்க்க…

"இப்ப நான் அந்த பொண்ணுக்கும் கொடுக்கணும் அவ்வளவு தானே. நானே கொடுக்கிறேன்..உங்களுக்காக கொடுக்கிறேன் போதுமா?..."

என்றவள் அவர் அருகில் காப்பி ஒன்றை வைத்து விட்டு பல்லவி படுத்திருந்த இடத்திற்கு வந்தாள். பாண்டியோ நம்ப முடியாமல் அதிர்வில் தான் இருந்தார். எப்படியும் தன் மேல் செம கோபத்தில் தான் இருப்பாள். கோவிலுக்கு அழைத்து செல்லாதது என் தவறுதான். காலையில் பேசி விட வேண்டும் என இவன் நினைத்து கொண்டிருக்க, இவன் எண்ணத்திற்கு நேர் எதிர்மாறாய் வந்து சிரித்து கொண்டு நிற்கிறாள்.

மனைவி கொடுத்த காப்பியை எடுத்து கொண்டே வெளி வந்தார். கமலம் பல்லவியின் அருகில் இருப்பது தெரிந்தது. பல்லவியோ இவளை பார்த்தும் பயந்து நடுங்கி கொண்டிருக்க…

"வந்த நாளே பத்ரகாளியா ஆடுனா புள்ள பின்ன பயப்படாம என்ன செய்யும்…"

சொன்னவாறே வந்த கணவரை திரும்பி பார்த்தவள். வராத புன்சிரிப்பை கஷ்டபட்டு வர வைத்து விட்டு பின் திரும்பி அவள் புறம் நீட்ட…

"வாங்கிக்கம்மா… இல்ல வேதாளம் மறுபடியும் முருங்கைமரம் ஏறிடும்…"

பாண்டி சிரித்து கொண்டே சொல்ல… பல்லவியும் தயங்கியவாறே வாங்கி கொண்டாள்.

ஆனாலும் விழி உயர கமலத்தை பார்த்தவாறே வாங்கியவள் சட்டென பாண்டி பக்கம் திரும்ப…

“குடி” என்பது போல பாண்டி சைகை காட்ட மெல்ல வாயில் வைத்து உறுஞ்சத் தொடங்கினாள்.

"சரி நீங்க குளிச்சிட்டு வாங்க. நான் இட்லி சமைச்சு வைக்கிறேன்.நீயும் தான் பொண்ணே…"

சொல்லியவாறு கமலம் வெளியேற பிரமிப்போடு தான் பார்த்து நின்றான் பாண்டி. உண்மையிலே அன்றைய நாள் முழுவதும் புதுப்புது ஷாக்காக தான் கொடுத்துக் கொண்டிருந்தாள் கமலம். அதை உண்மை என நம்பிய பாண்டியும் மனதுக்குள் நிம்மதி பெருமூச்சு விட்டான்.

அதிலும் கமலம் பல்லவியை தங்கள் குடும்பத்தோடு உட்கார வைத்து பரிமாறியதும் பாண்டி.

"போதும்… இது போதும்… என்னோட மனசுல இருந்த பெரும் கவலை நீங்கிடுச்சி கமலம்…"

என்றதற்கும் வார்த்தையை கொடுக்காமல் புன்சிரிப்பையே பரிசாக்கியவள் அன்று முழுவதும் பாண்டியை குளிரவே வைத்தாள். அதில் உட்சகட்டமாக இரவு நிலவு மகளை வான் சிலையில் ரசித்துக்கொண்டிருந்த வேளை அருகில் வந்த கமலமோ…

“ஏன்ய்யா படுக்கலியா?”

என்றாள் காதோரம் கிசுகிசுப்பாக…

“படுக்கணும் புள்ள" ..’

“அப்போ வா“

“இல்ல நீ போய் படு. நான் கொஞ்சம் நேரம் கழிச்சி“

அவன் சொல்லி முடிக்கவில்லை. அவன் சட்டையை பிடித்து இழுத்தவள்….

“உன்னை இப்படியே விட்டா சரியில்ல."

என இழுத்துக் கொண்டு போக... மனைவியின் கோபத்தை உள்ளுக்குள் ரசித்தவன் அவள் பின்னே போக.… “

"ஏய்…ஏய்...ஏய்… என் இடம் அங்க…"

தினமும் படுக்கும் இடத்தை அவன் சுட்டி காட்ட…

"ம்… அங்க ஒரு இடம் இரண்டு வாரமா ஏங்கிட்டு இருக்கு. பேசாம அங்க வந்து படுய்யா…."

"பல்லவி பாவம்.."

"நானும் பாவம் தான்ய்யா…"

அவளும் கிறக்கமாக சொல்ல..

"இல்ல புள்ள அது..வந்து… "

"வந்து போயி…… உன்னை இன்று எங்கேயும் விடுறதா இல்ல. சரியா தூங்கி இரண்டு வாரமாச்சு. உன் அருகாமை இல்லாம தூக்கம் கூட வரல.பேசாம வந்து படு…"

"நாங்களும் குறட்டை விட்டா தூங்குனோம். புரண்டு புரண்டு தான் படுத்தோம்."

. "அந்த அவஸ்தை இனி வேணாம். வாய்யா…"

என இழுத்தவள் அறைக்குள் சென்றதும் அவனை பிடித்து தன் மார்புக்குள் பொதிய பாண்டியும் அவளுள் புதைய தொடங்கினான்.

. மறுநாள் காலை என்றும் இல்லாமல் இன்று கமலம் சுறுசுறுப்பாக நின்றாள். பல்லவியையும் வஞ்சகம் இல்லாமல் கவனித்தாள். ஆனால் பல்லவியால் தான் அவர்களோடு இணைய முடியவில்லை ஒதுங்கி ஒதுங்கி போய் அமர்ந்து விட…

. பாண்டி தான் பல வேளை அவளை அழைத்து வந்து எல்லாரிடமும் பழக விட்டான். இப்போது குழந்தைகளும் பேச ஆரம்பித்திருந்தாலும் அவர்களிடம் கூட பல்லவியால் நெருங்கி வர முடியவில்லை. எப்போதுமே ஒரு பதற்றம் படபடப்பு இருந்து கொண்டு தான் இருந்தது .

. அன்றே மனைவி நல்ல மூடில் இருக்கும் போது பேசிவிட வேண்டும் என்றே பல்லவியின் படிப்பை பற்றியும் பாண்டி பேசி விட ஆரம்பத்தில் வேண்டாம் கூடவே இருந்து என் வேலையில் ஒத்தாசை பண்ணட்டும் என்பதை கேட்க கணவர் தயார் இல்லை என்பதை உணர்ந்ததும் பின்வாங்கிக் கொள்ள பாண்டி அந்த விஷயத்திலும் ஜெயித்துவிட்டார் .

. உடனே சுறுசுறுப்பானவர் அன்றே அவளை அழைத்துக்கொண்டு ஸ்கூலுக்கு கிளம்பி விட ஸ்கூலில் கேட்ட அத்தனை கேள்விக்கும் பல்லவி சரியாக பதில் சொல்ல அவளை பாராட்டிய பள்ளி நிர்வாகம் அவளை சேர்த்துக்கொண்டது .

. திரும்பி வரும்போது பாண்டி

"இனி பல்லவிக்கு நிறைய பிரண்ட்ஸ் கிடைப்பாங்க. மூலையிலே அடைஞ்சி கிடக்க வேண்டிய அவசியம் இல்லை சரிதானே கண்ணு." .

. "ம்…ம்...ம்…"

என்றாள் சிரித்துக் கொண்டு…

. "அப்பா...புள்ளைக்கு ஸ்கூலுக்கு வந்த பிறகு தான் சிரிப்பே வருதுல. அது சரி.நீ தான் ஸ்கூல் டாப்புணு சொல்லியிருக்கால. டாக்டர் ஆகிறது தான் தன்னோட ஆசைணு வேற சொன்னியே…"

. என்றதும் பல்லவி ஆமா என்பது போல தலையசைக்க…

"அது உன் கையில தான் இருக்கு பல்லவி. மாமாவால அவ்வளவு பெரிய படிப்பெல்லாம் கொடுக்க முடியாது. ஆனால் நீ நினைச்சா முடியும். உன் மார்க் உன்னை அப்படி ஒரு உயர்ந்த இடத்துல கொண்டு போய் உட்கார வைக்கும். அதுக்கு நீ படிக்கணும். ஒரு மார்க்கை கூட நான் இழந்துட கூடாதுனு நினைச்சி படிக்கணும்."

. "உன் அத்தைகாரி இவ்வளவு இறங்கி வந்ததே உலக அதிசயம். இதுக்கு மேல நம்மளால அவளுட்ட எதையும் எதிர்பார்க்க முடியாது. பாண்டி கூட்டிட்டு போனான். பல்லவியோட வாழ்க்கை சீரழிஞ்சி போச்சுணு ஒருத்தன் பேசிட கூடாது. நீ பேச வச்சிடக்கூடாது மாமா உனக்கு நல்லது தான் செஞ்சேணு நம்ம உறவுகள் எல்லாரும் பேசுறது போல செய்யணும்… செய்றியா பல்லவி?..." .

. "நிச்சயமா… நிச்சயமா மாமா. இனி எனக்கு அது ஒண்ணும் தான் நல்ல எதிர்காலத்தை கொடுக்கும்ணு தெரியும் மாமா. உங்க பெயருக்கு களங்கம் வருகிறது போலவும் நடக்க மாட்டேன். நீங்க வருத்தப்படுவது போலவும் செய்ய மாட்டேன். உங்க பெயருக்கு மதிப்பை கொடுக்கிறது மாதிரி நிச்சயம் உயர்ந்து நிற்ப்பேன்."

. "போதும்மா. உன் மாமனுக்கு இது ஒண்ணும் போதும்." .

மன நிறைவோடு வீட்டுக்கு அழைத்து வந்து உள்ளே விட்டவர் நண்பன் சோமுவை பார்க்க விரைந்தார்.

. அதே நேரம்…

துள்ளலோடு வெளிவந்த சங்கிலியை இடைமறித்தார் தண்டபாணி. .

. "இந்த நேரம் தினமும் கடையில தானேடா இருப்பா. இப்ப என்ன அவசரமா கிளம்புறா?…"

. "தெரியுதுல.அவசரமா கிளம்புறேணு. அப்புறம் இப்படி வழி மறைச்சிட்டு நின்னா எப்படி?..."

. "எங்க போறாணு சொல்லிட்டு போறது…."

. "வடிவேலு வீட்டுக்கு போறேன் போதுமா…"

. "வடிவேல் வீட்டுக்கு இப்ப எதுக்கு?...".

. "தேங்கா ஒரு லோடு வந்திருக்காம். உரிச்சு கொடுத்தா உடனே பணம் தரேணு சொன்னார். அதான் உரிச்சு கொடுத்து என் 8000 ரூபாயை 10 ஆயிரமாகிடலாம்ணு விரைவா கிளம்புறேன்."

. "அப்போ கடையை பாக்குறது யார்டா…."

. "அதான் நீங்க இருக்கீங்களே முதலாளி"

. "எனக்கு காலெக்ஷனுக்கு போக வேண்டாமா?…."

. ஒரு அரை மணி நேரம் இருந்தா ஜெகன் வந்துடுவான். நீங்க அவனை இருத்திட்டு கிளம்புங்க. நான் அஞ்சு மணியானா வந்துடுவேன். அதுக்கு அப்புறம் தானே சைக்கிள் கொண்டு போனவனுக்கு எல்லாம் திரும்ப வருவாங்க நான் அதுக்குள்ள வந்துடுறேன்.

. "அப்படின்னா இன்றே பத்தாயிரம் ரூபாய் சேர்த்திடுவா போல..."

. "ஆமா பாஸ் இன்று சேர்த்திடலாம்."

. சொன்னவன் தன் டிவியஸை உசுப்ப அதுவும் வெறி கொண்டது போல ஓடத் தொடங்கியது. ஒரு கையால் வண்டியை பிடித்தவன் மறுக்கையால் தலையை கோதியவாறு விசில் அடித்து ஜாலியாக வந்தான்.

. எதிர்கொண்டு வந்த பாண்டியை பார்த்ததும் மெல்ல வண்டியை ஸ்லோவாக்கி நிறுத்தியவன் அவர் வாடிப்போன முகத்தைப் பார்த்து விசாரிக்க...

. "இல்ல சங்கிலி. அந்த புள்ளையை இன்று ஸ்கூல்ல கொண்டு சேர்த்துவிட்டு வந்ததுல இருந்து சிரிக்கவே செய்யாத புள்ள முகத்துல இன்று தான் சிரிப்பை பார்த்தேன். அப்படிப்பட்ட புள்ளையை நாளைக்கு ஸ்கூலுக்கு அனுப்பிடலாம்னு பார்த்தா.இப்ப பார்த்து பர்ஸ் காலியாயிருக்குதப்பா."

"............." .

. "ரெண்டு வாரம் கமலத்துக்க மேல உள்ள கோபத்தால காட்டுக்குப் போகலையா?... சல்லி காசு இல்லாம போச்சு. கமலத்திட்ட கேட்கலா்ம்னா அவ இந்த புள்ளனா தந்துவிட்டு தான் மறு வேலை பார்ப்பா. அதான் யோசனையோட சோமுவ பார்க்க போனேன். எத்தனை நாள் கைமாத்தா என்கிட்ட இருந்து பணம் வாங்கி இருப்பான். இல்லன்னு கையை விரிச்சிட்டான். அப்புறம் முத்து வீட்டுக்கு போலாம்னு தான் நினைச்சேன். அப்புறம் அவனே கஞ்ச பையன். அவன் எங்க தருவான்னு திரும்பி வந்துட்டேன்."

"............."

"அதான் யார்கிட்ட கேட்கலாம் என்று யோசித்துக்கொண்டே வந்தேன். நாளைக்கு போக வேண்டாம் ரெண்டு நாள் கழிச்சு போகலாம்னு சொன்னா அந்த புள்ள முகத்துல இருக்குற சந்தோஷம் மொத்தமா தொலைஞ்சு போயிடுமோன்னு கவலையா இருக்கு."

. பாண்டி வேதனையோடு சொல்ல வண்டியை விட்டு இறங்கியவன்.

. "எவ்வளவு பணம் வேணும்?"

. "ஒரு 2000 ரூபா வேணும்பா"

. "சரி நான் கொடுக்கிறேன்.அந்த பிள்ளைக்கு தேவையானதை வாங்கி கொடுங்க."

. "சங்கிலி!...!...!..."

. "படிப்பு விஷயமா சொல்றீங்க அதுல வேற இன்று தான் சிரிச்சிதுன்னு வேற சொல்றீங்க. மறுபடியும் நாம அழ வைக்க வேணாம். வண்டியில ஏறுங்க... கடையில சேர்த்து வைத்த பணம் இருக்கு. எடுத்து தரேன்."

. என்றவனை வெளிறிய முகத்தோடு தான் பார்த்தார் பாண்டி. காரணம் சங்கிலி கையில் இருந்து பணம் வாங்குவது என்றால் அதுதான் உலக அதிசயம். யாருக்கும் அவன் இதுவரை கொடுத்ததில்லை. இந்த அளவு இறங்கி நின்று பேசியதும் இல்லை. முதல் முதலாக தனக்கும் இதயம் இருக்கிறது, அந்த இதயத்திலும் இரக்கம் இருக்கிறது, அந்த இரக்கத்திலும் கனிவு இருக்கிறது என காட்டி நின்ற சங்கிலியை கட்டி அணைத்துக் கொண்டார் பாண்டி. .



. அத்தியாயம் தொடரும்...

.
 
Status
Not open for further replies.