அத்தியாயம் 5
வீட்டின் வெளியில் ஒரு ஆடவரின் குரல் கேட்க ஐஸ்வர்யாவோடு இருந்த பல்லவி எழ முயல...
"இருக்கா... அப்புறம் நான் கள்ளாட்டு ஆடிட்டேன்னு சொல்லுவா? " முன்னால இருந்த சின்ன குண்டில் புளியமுத்தை போட்டவாறு ஐஸ்வர்யா சொல்ல... எழ முயன்ற பல்லவி மறுபடியும் அமர்ந்த போது,
"வந்துட்டேன்டா!..."
என்றவாறு பரபரப்போடு பாண்டி வெளியே செல்ல, அங்கே சங்கிலி நின்று கொண்டிருந்தான். அவனையும் அவன் கையில் இருந்த பார்சலையும் பார்த்தவர் முகம் மலர...
. "வாங்கிட்டு வந்துட்டியா சங்கிலி. ரொம்ப சந்தோசம். நீ மட்டும் தக்க சமயத்தில் உதவலணா நாளைக்கு பல்லவியால ஸ்கூலுக்கே போக முடியாது. ரொம்ப நன்றிடா. ஆமா பிரேக் டவுன் ஆனா மினி பஸ் சரி ஆயிடுச்சா."
"எங்க அண்ணே இன்னும் நாலு நாள் நம்ம ஊர் ஆளுங்களுக்கு வெளியூர் போகணும்னா சிரமம் தான். வழியில டிரைவரை பார்த்தேன். எப்படியும் ஒரு நாலு நாளாவது ஆகும்னு சொல்றான்." .
. "நல்ல நேரம் நேற்று நீ மட்டும் வரலனா நான் திரும்பி வாங்காம தான் வந்திருப்பேன்."
பாண்டி பேசிக் கொண்டிருக்கும்போதே பார்சலை பிரித்த சங்கிலி...
"எல்லாம் சரியா இருக்குதான்னு ஒரு முறை செக் பண்ணிக்கோங்க."
. "என்னடா நீ!... சரியா தான் இருக்கும்"
"அதுக்கு இல்லனே. நமக்கே எழுத படிக்கத் தெரியாது. இதுல வேற இந்த புள்ள இங்கிலீஷ்ல எழுதி இருக்கு. கடைக்காரன் சரியா போட்டானானு எனக்கென்ன தெரியும்..எதுக்கும் ஒரு முறை சரியா பாருங்க. எதுவும் மிஸ் ஆயிடுச்சுனா சொல்லுங்க. நாளைக்கும் டவுன்ல ஒரு வேலை இருக்கு. போகும் போது வாங்கிட்டு வந்து கொடுக்கிறேன்." என்றதும்...
. சங்கிலி நீட்டிய பேப்பரை வாங்கியவர் சரிபார்க்கத் தொடங்க...
"இது அதுல எழுதி இருக்காதுனே.ஆனா தேவைப்படும் இல்ல. அதான் பார்த்ததும் வாங்கிட்டேன்."
ஜாம்டிறிபாக்ஸை அவன் காட்ட..., சிரித்துக்கொண்ட பாண்டி அடுத்து பேக்கை கையில் எடுக்க,
."இதுவும் அதுல இருக்காது. இம்புட்டு நோட்டை அந்த புள்ள கைலயா கொண்டு போகும். அதனாலதான்...."
சொல்லிக் கொண்டு அவன் தலையைச் சொறிய...
"விவரம் இல்லாதவனா நீ!... புள்ளையை பெத்த அப்பன் கூட இவ்வளவு யோசிச்சு யோசிச்சு பண்ண மாட்டான்டா"
. என்றவர் நோட்டை சரிபார்க்க, எல்லாம் சரியாக இருந்தது.
"எல்லாம் சரியா இருக்குடா சங்கிலி."
"சரியாதான் இருக்கணும். பேப்பரில் போட்டு இருக்கிற எண்ணிக்கையை எண்ணி சரியா இருக்குதான்னு பார்த்து தான் கொண்டு வந்தேன்."
"இது எதுக்குடா..."கர்ச்சிப்பை அவர் தூக்கிக்காட்ட..
"பொம்பள புள்ளைங்க கையில் எல்லாம் இது இருக்குமே. ஒரு வேளை இல்லாம போயிடக் கூடாதுல அதான் வாங்கினேன்."
அப்பாவித்தனமாக சொல்ல அவனை நிமிர்ந்து பார்த்தவர் ,
"உனக்கு நல்ல மனசுடா."
"அது இருந்துட்டு போகட்டும். கொண்டு அந்த புள்ளைட்ட கொடுங்க. நாளைக்கு சந்தோஷமா ஸ்கூலுக்கு போகட்டும்."
. சொன்னவன் விடைபெற்று வெளியேறி இருக்க, பாண்டி மொத்த பொருளோடு உள்ளே வந்தார்.. அதை பார்த்த கமலம் உள்ளுக்குள் புகைய, பாண்டியோ... பல்லவியின் அருகில் வந்தார். அவரையும் அவர் கையில் இருந்த பொருட்களையும் பார்த்தவள் முகம் மலர, அவர் அருகில் வர,
"இந்தா... நாளைக்கு ஸ்கூலுக்கு கொண்டு போகக்கூடிய மொத்த பொருளும் வாங்கியாச்சு. இனி எல்லாம் உன் வேலை தான். ஒழுங்கா படிக்கணும் ஓகேவா" .. "ம்…ம்...ம்…"
என்றாள் முகம் எல்லாம் பூரிப்போடு... .
பாண்டி தன் கையில் கொடுத்த புத்தகங்களை அந்த மரபெஞ்சின் மேல் அடுக்கியவள் ஒவ்வொன்றாக பிரித்துப் பார்க்கத் தொடங்கினாள். அதே நேரம் ஒரு நோட்டின் ஓரத்தில் கரி படிந்திருக்க அதை பார்த்த பல்லவி,
"புது நோட்டுல என்ன அழுக்கு".
சலித்துக் கொண்டு துடைக்க... முடியல, அது போவேனா? என்பது போல அடம் பிடிக்க, ஒரு வருடம் கையில் வைத்திருந்தால் கூட நோட்டை அழகாக வைத்திருக்கும் அவளுக்கு முதல் நாளே கறையோடு காண பொறுக்க முடியவில்லை. தன் பாவாடையை வைத்து அழுத்தி எடுத்து பார்த்தாள்.
அவளுக்கு தெரியாது. அந்த கறி படிந்த வாழ்வில் தன்னை தொலைத்துக்கொண்டு உழைத்து வந்த காசில்தான் இன்று தன் கையில் புத்தகம் வளர்ந்துள்ளது என்று.அழுக்கையே வெறுக்கும் நிலையில் பல்லவி. அழுக்கோடே வாழும் இடத்தில் சங்கிலி. வாழ்க்கை இவர்களை புரிய வைக்குமா?. .
காத்திருப்போம்...
காலையில் சுறுசுறுப்பாக புறப்பட தொடங்கினாள் பல்லவி. யூனிபாம் இல்லாததால் கலர் டிரஸ் தான் அணிந்திருந்தாள். பாண்டி அவளைக் கொண்டு விட்டு காட்டுக்கு செல்வதாக தான் இருந்தது. ஆனால் வழியிலே லாரி ஒன்று போக தயாராய் இருக்க,
"நீங்க கிளம்புங்க. ஸ்கூலுக்கு தானே நான் ரெடி பண்ணி விடுறேன்.
செழியன் கூட போவான்." .
என கமலம் சொல்ல செழியனிடமும் பல்லவிடமும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு தான் கிளம்பினார் பாண்டி. அவர் கிளம்பியதுமே பல்லவி புறப்பட தொடங்கினாள். குழந்தைகளை அதட்டி, உருட்டி புறப்பட வைத்ததை பார்த்தே...
"அத்தை...மாமா சென்றதும் சரி இல்லை" என்பதை புரிந்து கொண்டு எதற்கும் அவர்கள் உதவியை நாடாமல் புறப்பட்டு ரெடியானாள் பல்லவி. உணவு தட்டு பறந்து தான் வந்தது. எதுவும் பேசாமல் உண்ண தொடங்கினாள். கடைசியில் செழியன் வந்து அழைக்க அவனுடன் பயணமானாள். .
. மனதில் ஒரு இனம் புரியாத உணர்வு. புது ஸ்கூல், புது தோழர்கள், தோழிகள் எப்படி இருக்குமோ?...என்ற பதபதைப்பு வேறு. வழியில் செழியன் வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தான்.. முட்டாய் கடை வந்துவிட "மாமா சொன்ன முட்டாய் கடை வந்துடுச்சு. அடுத்து கொஞ்ச தூரத்தில் சைக்கிள் கடை அப்புறமா சிவன் கோயில். கொஞ்சம் போனா ஒரு ஒத்தையடி பாதை. அது வழியா போகணும்னு தானே மாமா முதல்நாள் சொன்னாங்க."
பல்லவி மனதுக்குள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே சைக்கிள் கடை வந்து விட எதேச்சையாக அவள் கண்கள் கடையின் முன் பகுதிக்கு செல்ல, அங்கு அழுக்கு துணியோடு சைக்கிள் டயரோடும் போராடிக் கொண்டிருந்தான் சங்கிலி. .
அவனின் அழுக்கான தோற்றமும், அன்று அவன் தோற்றத்தில் சாமியாரின் ஞாபகமும் வர பயந்து போனவள் சட்டென மறுபக்கம் ஒதுங்கி செழியன் கையை பிடித்துக் கொண்டு மறைந்து மறைந்து செல்ல...
அதே நேரம் அவளை பார்த்துவிட்டு சங்கிலி வியப்பில் எழுந்து தன் கறி படிந்த கையை தன் அழுக்கு பனியனில் துடைக்க, அதை பார்த்து அவளுக்கோ ஒமட்டல் வர... பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு செழியனை இழுத்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அந்த இடத்தில் இருந்து ஓடி மறைந்தாள்.
. புன்சிரிப்போடு அமர்ந்தவனுக்கு அதன்பின் வேலை ஓடவில்லை. ஜெகனிடம் கடையை பார்க்கச் சொல்லி விட்டு ஒரு சைக்கிளை எடுத்துக்கொண்டு அவள் பின்னால் வந்தான்.
. "ஐ!...சங்கிலி……"
செழியன் குரல் கொடுக்க....
சட்டென திரும்பியவள் சங்கலியை பார்த்ததும் சர்வமும் ஒடுங்க படபடப்பும் வெறியோடும் விரைய...
அவள் மனமோ, முதல் நாள் பாண்டி சொல்லியதில் சென்றது.
"இவன்தான் அந்த கெட்டவனா?... பார்த்தாலே தெரியுது. ரவுடி போல இருக்கான். ஆமா இவன் எதுக்கு நம்ம பின்னால வரான். எண்ணமே பயத்தை விதைக்க..."
அதே நேரம் அவர்களை நெருங்கி இருந்தான் சங்கிலி.
"பேக் புடிச்சிருக்கா?..."
அவர் மென்மையாக தான் கேட்டான். அதுவும் தான் தேடித்தேடி தேர்ந்தெடுத்து கொண்டு வந்தது என்பதால் தான் கேட்டான்.
. ஆனால் இது தெரியாததால்...
"இவன் எதற்கு என்னிடம் பேசுகிறான். என் பேக் நல்லா இருந்தா அவனுக்கு என்ன?... நல்லா இல்லனா அவனுக்கு என்ன?..." என்று தோன்றியது பல்லவிக்கு. செழியன் அவனுக்கு மறுமொழி கூறியதும் அவளுக்கு பிடிக்கவில்லை.
"ரவுடிகள்ட்ட உனக்கு என்னடா பேச்சு." அவன் மண்டையில் கொட்டு வைத்தவள்...
"வாடா நீ!..."
என வெறுப்பின் உச்சத்தில் அவள் செல்ல, உறைந்து போய் அப்படியே நின்றான் சங்கிலி. ஆனாலும் கடைசியாக அவன் உதட்டில் புன்னகையே மலர்ந்தது.
. தினமும் அன்றிலிருந்து அவள் பள்ளிக்கு வரும் போது கடையில் இருந்தால் ஸ்கூல் காம்பவுண்டுக்குள் அவள் நுழையும் மட்டும் பின் தொடர்ந்து வந்தான். .
. ஆனால் அந்த கறி படிந்த துணியோடு வரவில்லை. பறட்டை தலையோடும் வரவில்லை. எண்ணெய் வைத்து வாரி சீவி இருப்பதிலேயே நல்ல ஆடையாக அணிந்து கொண்டுதான் அவள் முன் வருவான். ஆனால் அருகில் செல்லாமல் தூரமாய் தான் நின்றான். ஆனால் அவள் பார்வையில் விழும் இடத்தில்தான் இருப்பான். அவன் முன் வெறுப்பை உமிழ்ந்து கொண்டு முகம் சுளித்துக்கொண்டு தான் பள்ளிக்குப் போவாள். பல்லவி. நாட்கள் இப்படியே போய்க் கொண்டிருந்தது. இப்போதெல்லாம் கமலம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி பல்லவியை வீட்டு வேலை செய்ய வைத்து துன்புறுத்த. ஆரம்பித்து இருந்தாள்.
. வீட்டிற்கு சென்றாலே பல்லவிக்கும் மூச்சு முட்டும் அளவு வேலை இருந்தது. ஆரம்பத்தில் பாண்டி சப்போர்ட்க்கு வந்தாலும்,
"பொம்பளை புள்ளை படிச்சு தான் ஆகணும். இந்த விஷயத்துல குறுக்கே வராதுங்க."
என அவள் சொல்ல... அவரும் ஒதுங்கிக் கொண்டார். ஆனால் அவர் இருக்கும் போது ஒரு முகமாகவும், அவர் இல்லாதபோது வேறு ஒரு ரகமாகவும் இருக்கும் கமலத்தை பாண்டிக்கு தெரியாது. தெரியப்படுத்தவும் பல்லவி விரும்பவில்லை. காரணம் ஆரம்பத்தில் பாண்டி மனைவியிடம் முட்டிக்கொண்டு நின்று சோறு தண்ணி இல்லாமல் இருந்ததே அவள் பார்த்துக் கொண்டுதானே இருந்தாள். அதில் இங்கு நடப்பதை மட்டும் நீ அவரிடம் சொன்னால் இந்த பத்திரகாளி அத்தையை தான் பார்ப்பா என கமலம் சொல்லி வைத்திருந்ததால் பல்லவி எதையும் சொல்லாமல் தன் கஷ்டத்தை தன்னிடமே அடக்கி கொண்டாள்.
. இதுவே கமலத்தின் ஆட்டத்திற்கு போதுமானதாக இருந்தது. கணவர் இருக்கும் போது ஒரு முகமாகவும், இல்லாத போது வேறு முகமாகவும் நின்று தன் ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டாள்.
. பாவம். அதில் மாட்டிக்கொண்டு முழித்தது என்னவோ பல்லவி தான். ஸ்கூலுக்கு போயிட்டு வந்து மாட்டு தொழுவத்தை சுத்தப்படுத்துவதில் இருந்து பாத்திரங்கள் அனைத்தையும் கழுவி அடுக்குவது வரை அனைத்துமே அவள் தலையில் கட்டி விட்டாள் கமலம். ஆரம்பத்தில் பண்ணை வீட்டில் அதிக வேலை என்ற காரணத்தைச் சொல்லியே அவளை வேலை வாங்க ஆரம்பிக்க... இப்போது அது அவளின் ரெகுலர் வேலையாகி போனது. ஆனாலும் படிப்பை விட்டு விடவே கூடாது என நினைத்து இரவு வெகு நேரம் விழித்திருந்தே படித்து முடித்தாள். நாட்கள் இப்படியே வேகமாக மிக வேகமாக நகரத் தொடங்கியது.
. அன்று பல்லவிக்கு விடுமுறை நாள். கமலம் காலையிலிருந்து வயிற்றுப்போக்கால் அல்லல்ப்பட்டுக் கொண்டிருந்தாள். எப்படியும் பண்ணை வீட்டிற்கு வேலைக்கு சென்றே ஆக வேண்டும். ஆனால் எழுந்து நிற்கக்கூட முடியவில்லை. பக்கத்து வீட்டு கனகம் கூட கமலத்தை தேடி வந்துவிட்டாள்.
"என்ன கமலம் இப்படி கிடக்கிறா?. இந்த லட்சணத்துல பண்ணையார் பொண்டாட்டி, வந்து தான் ஆகணும்னு சொல்றா... இப்ப நீ என்ன பண்ண போறா?..."
"தெரியலடி."
"அவளுக்கு தேவையான நாள் போகலனா அவ மனுஷியா பேச மாட்டா...அதுல வேற அவளோட பேத்தி பெரிய பொண்ணு ஆயிருக்கா? இந்த நேரம் நீ லீவு கேட்டா விடுவாளா?."
"அதாண்டி என்ன பண்ணுனே தெரியல."
"ஒண்ணு பண்ணுறியா?"
"என்னடி?..."
"பேசாம என்கூட அந்த பொண்ணு பல்லவி அனுப்புறியா?".
"அவளையா.!.."
"அவா எப்படி?..."
"இப்ப உனக்கு இருக்கிற ஒரே வழி அதுதான்."
"அவருக்கு மட்டும் தெரிஞ்சிது. என்னை உண்டு இல்லைன்னு பண்ணிடுவாரு."
"தெரிஞ்சா தானே. இப்ப நீ சின்ன கொடுமையா பண்றா?. அந்த சின்ன குழந்தைக்கு உன்னோட மொத்த வேலையும் கொடுத்து கஷ்டப்படுத்தல."
"அது...அது வீட்டுலடி...."
"இது வெளியில... எல்லாம் நம்ம கைல தான் இருக்கு."
"அப்படியா சொல்றா?..."
"ஆமாக்கா. ரொம்ப யோசிக்காத. நான் சொன்னதை செய்."
"செய்யலாம். அதுக்கு அந்த பொண்ணுக்கு உலக்கையில் மாவு இடிக்க தெரியணுமே."
"அதை என்கிட்ட விடு. இன்று உனக்கு தான் மாவு இடிக்கிற வேலை. எனக்கு மாடு மேய்க்கிற வேலை. ரெண்டையும் மாத்திட்டா போச்சு."
"............."
. "அந்தப் பொண்ணு பண்ணையாரோட மாட்ட ஓட்டிட்டு போகட்டும். நான் மாவு இடிக்க போறேன். இது ஒண்ணும் தான் உனக்கிருக்கிற ஒரே வழி.".
"நல்ல யோசனைடி அப்படியே பண்ணுவோம்.".
என சொன்னவள் அடுத்த நொடியே...
புத்தகங்களோடு மூழ்கி இருந்த பல்லவி அருகில் வந்தாள். அவள் வேலையை சொன்னபோது பல்லவி திணறி தான் போனாள். ஆனால் அவள் சொல்ல நினைத்தாலும் அவளிடம் சொல்லி எந்த பலனும் இல்லை என உணர்ந்தவள் அமைதியாக கனகத்தோடு வெளியேறினாள்.
. அந்தப் பண்ணியாரின் வீடு ஊரில் நடுவில் கம்பீரமாக அமைந்திருந்தது. பழைய கால மூன்று அடுக்கு ஓட்டு கட்டிடம் தான். ஆனால் மரத்தால் முன் பகுதி வேலைப்பாடுகள் அட்டகாசமாக இருந்தது.
ரசித்தவாறே காம்பவுண்டுக்குள் நுழைந்தவள். முன்னாள் வரிசை மாறாமல் இருந்த அலங்கார செடி தொட்டிகளை பார்த்தவாறே உள் செல்ல... அங்கே பந்தடிக்களம் போல் ஒரு பெரிய இடம். அதில் பயறு வகைகளும், தேங்காயுமாக குவித்து கிடந்தது. சில இடங்களில் வத்தல் கூட்டம் கூட்டமாக காய வைக்கப்பட்டு இருந்தது. ஏக்கர் கணக்காய் நிலம் உண்டாம். அதில் விளைந்த பயிர் வகைகள் ஒவ்வொன்றும் கூட்டம் கூட்டமாய் கிடந்தது. கனகம் அதை தாண்டி தான் அவளை கூட்டி சென்றாள். பல்லவியின் விழிகள் நாலாபுறமும் விரிந்தன.
. கூட்டம் கூட்டமா இருந்தவற்றை பார்த்துக் கொண்டே வந்தவளை பிடித்து இழுத்துக்கொண்டு சுப்பனிடம் வந்த கனகம்...
"சுப்பு நான் இன்று மாவு இடிக்குறேன். நான் மேய்ச்சலுக்கு கூட்டிட்டு போக வேண்டிய மாடுகளை இதுகிட்ட கொடுத்து அனுப்பு."
என சொல்லிவிட்டு அவள் கிளம்பி விட சுப்புவோ பல்லவியை மேலும் கீழும் பார்த்தான். பின்..
"நமக்கு எதுக்கு வம்பு, மாட்ட புடிச்சி கொடுத்திட வேண்டியதுதான்."
என எண்ணியவன் மூன்று மாட்டை பிடித்துக் கொடுக்க... பல்லவி திருதிருவென விழித்தாள்.
"என்ன புள்ள மாட்ட கைல புடிச்சிட்டு அப்படியே நிக்குறா. ஓட்டிட்டு போ." சுப்பு அதட்ட பயத்தில் நடுங்கியவள் கலங்கிய கண்ணோடு...
"எங்க?..."
என்றாள் குரல் கம்ம...
. "எங்கைய்யா. சரியா போச்சு. எங்க போகணும் தெரியாம தான் வேலைக்கு வந்தியா...ஏ...ராசு...நீ மந்த வெளிக்கு மேய்ச்சலுக்கு தானே போறா."
"ஆமா அண்ணே..."
"போகும்போது இந்த பொண்ண கூட்டிட்டு போ."
"என்னால எல்லாம் யாரையும் பார்த்துட்டு இருக்க முடியாது. வேணா என் பின்னால வர சொல்லுங்க."
என்றவாறே மூன்று மாட்டின் கயிற்றையும் பிடித்துக் கொண்டு ராசு முன் செல்ல.. பல்லவியும் ஒருவாறு கயிற்றைப் பிடித்து அவன் பின்னால் தயங்கி தயங்கி செல்ல ஆரம்பித்தாள். ஆனால் மாட்டை எப்படி ஓட்டி செல்வது என அவளுக்கு தெரியவில்லை. ராசுவோ எதுவும் செய்யாமல்... அவன் மாடு அவனுடனே நடந்து வர... பல்லவி மாடு அடம்பிடித்தது.
. எப்படி அதை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது என தெரியாமல் முழித்தாள். அருகில் வந்த சுப்புவோ மாட்டை குரல் கொடுத்து பின் முதுகை அடிக்க... அதுவும் பல்லவியுடன் நடக்கத் தொடங்கியது. சிறிது நேரம் அப்படியே அவளுடனே மாடு நடக்க... கொஞ்ச தூரம் தாண்டி போனதும். பசுமையான புல்லை கண்டதும் மாடு மேய ஆரம்பித்தது. எவ்வளவு வலுக்கட்டாயமாய் பிடித்து இழுத்தாலும் அது அங்கிருந்து நகர மறுத்தது. முன்னாள் ராசு வெகு தொலைவு போயிருந்தான்.. பல்லவிக்கு பயம் வயிற்றை கலக்கியது. என்ன செய்ய என்று தெரியவில்லை. இந்த நேரம் மேய்ந்துக் கொண்டிருந்த ஒரு மாடு முன்னோக்கி நகர... மற்ற இரண்டு மாடுகளும் மேய்ந்து கொண்டே இருந்தது. முன்னோக்கி நகர்ந்த மாடு அவளை இழுக்க... பிடி அவளை விட்டு சென்றது. விடுதலை கிடைத்த மாடு கண நேரத்தில் ஓட தொடங்கியது. பல்லவியால் எதுவும் பண்ண முடியவில்லை. ஓடிய மாட்டின் பின்தொடர்ந்து செல்வதா?... அல்லது நிற்கும் மாட்டை கண்காணிப்பதா?... இந்த குழப்பத்தில் திரூதிருவென முழித்துக் கொண்டிருந்த நேரம்... அடுத்த மாடும் ஓட்டம் பிடித்தது.
. சட்டென அதன் கயிற்றை அவள் பிடித்து இழுக்க, அந்த மாடு அவளையும் இழுத்துக் கொண்டே ஓடியது. எவ்வளவு தூரம் மாட்டின் பின் ஓடி வந்தாளோ தெரியவில்லை. ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு பகுதிக்குள் ஓடிக்கொண்டிருந்தது மாடு. பல்லவி பயத்தின் உச்சத்தில் இருந்தாள். கயிற்றை விட்டால்... தான் விழுந்து விடுவேன். விடவில்லை என்றால் அது இழுத்த இழுப்புக்கு எல்லாம் போயாக வேண்டும். எப்படி போவது... என்ன செய்வது... என தெரியாமல் பயத்தில் அவள் குரல் எடுத்து அழுத நேரம்...
சரியாக ஒரு கரம் அவள் பிடித்து இருந்த கயிற்றை அழுத்தி பிடித்தது.
. அதுவும் அவளை நெருங்கி நின்றவாறே... அந்தக் கரத்தில் ஒரு இழுப்புக்கு கட்டுப்பட்ட அந்த மாடு சரணடைந்து விட... பல்லவி மெல்ல திரும்பி "அது யார்?" என பார்த்தாள்.
. அவள் தினமும் அருவருத்து ஒதுக்கிய அதே சங்கிலி தான். எங்கிருந்தோ ஓடி தான் வந்திருக்கிறான். உடலெல்லாம் வியர்வையில் நனைந்தே போயிருந்தது. அவனைக் கண்டதும் மாட்டின் கயிற்றில் இருந்து தன் கையை எடுத்தவள். சட்டென ஒதுங்கிக் கொள்ள...
"சாரி... சாரி... மாட்ட புடிச்சி இழுக்க தான்..."
அவன் தடுமாற... அவளும் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள். மாட்டை பிடித்து ஒரு கம்பில் கட்டியவன் அவளைப் பார்க்க... அவளோ நிமிர்ந்து பார்க்காமல் அழுது கொண்டே இருந்தாள். அதே நேரம் ஒரு மாடோடு வந்த ராசு
. "என்ன புள்ள மாட்ட இப்படியா அவிழ்த்து விடுவா?. அது சரியா மேய்க்கிற இடத்துக்கு வந்துச்சு. நான் பார்த்தேன். அதனால தப்பிச்சா. வேற எங்கேயாவது போய் இருந்துச்சு. அப்புறம் தெரிஞ்சிருக்கும். என்றவாறே கையோடு கொண்டு வந்த மாட்டை கொடுக்க... அதை வாங்கிய சங்கிலியோ...
"தேங்க்ஸ் அண்ணே..."
"என்ன சங்கிலி. நீ எங்க இந்த பக்கம்..."
"குளிக்க குளத்துக்கு வந்தேன். அப்போ இந்த புள்ளையை மாடு இழுத்துட்டு வருவதை பார்த்தேன். அதான் ஓடி வந்தேன்."
சங்கிலி விளக்கம் கொடுக்க...
"நல்ல நேரம் வந்தா... இந்தா..."
என்றதும் சங்கிலி அந்த மாட்டை பிடித்து கொள்ள... வந்தவனோ...
"ஆமா இன்னொரு மாடு எங்க..."
என்றதும் தான் பல்லவிக்கு ஒரு மாட்டை அங்கே விட்டு வந்த நினைவு வர, மறுபடியும் குரல் எடுத்துஅழ தொடங்கினாள்.
. சங்கிலிக்கு தர்ம சங்கடமாகி போனது. ராசுவிடம்...
"கொஞ்சம் இந்த புள்ள பக்கத்திலேயே நில்லுங்க. நான் கொஞ்சம் நேரத்துல அந்த மாட்டோட வரேன்."
"எனக்கு வேற வேலை இருக்கு சங்கிலி."
"பாவம்ண்ணே... இந்த புள்ள கிராமத்துக்கு புதுசு. விட்டுட்டு போனா பயந்துடும். ப்ளீஸ்...".
"அதுக்கு!..." அவன் பிகு பண்ண.
"இந்தாண்ணே... இந்த 100 ரூபாயை செலவுக்கு வச்சிடுங்க. இந்த புள்ளைய மட்டும் தனியா விட்டுட்டு போயிடாதீங்க."
"100 ரூபாயை பார்த்ததும் ராசு வாயெல்லாம் பல்லாக சிரிக்க... பல்லவியோ நிமிர்ந்து கிலியோடு பார்த்தாள்.
"சீக்கிரம் வந்திடு சங்கிலி. உனக்காக தான். உனக்காக மட்டும் தான்." என்றதும்...
"பயப்படாத இதுலயே நில்லு. நான் சீக்கிரமா மாட்டோட வரேன்."
என சொல்லிவிட்டே கிளம்பி இருந்தான் சங்கிலி.
. நகங்களைக் கடித்துக் கொண்டே ஒவ்வொரு மணித்துளியையும் பயத்தோடு இவள் கழிக்க... ரொம்ப நேரத்திற்கு பிறகு தான் சங்கிலி வந்து சேர்ந்தான். சங்கிலியை மாட்டோடு பார்த்த பின் தான் பல்லவிக்கு மூச்சே வந்தது. அன்று முழுவதும் அவளுடனே இருந்தான்.. ஏனோ இன்று அவள் அந்த வெறுப்பு கலந்த பார்வையை வீசவுமில்லை. முகத்தை சுழிக்கவுமில்லை. அதுபோல ஒற்றை வார்த்தை பேசவும் இல்லை. பகல் முழுவதும் மாட்டோடவே இருந்தான். வீடு வரை கொண்டு விட்டு திரும்பி சென்றான். அவன். அருகில் இருக்கும் வரை கவிழ்ந்த தலை நிமிராமல் இருந்த பல்லவியோ அவன் போனவுடன் திரும்பிப் பார்த்தாள். இன்று ஏனோ அந்த கரையேறிய டிரஸ் அருவருப்பாய் தெரியவில்லை. என்றாலும் கண்ணில் நீர் நிறைந்து கொண்டது.
. இது நடந்து மூன்றாம் நாள் பள்ளி செல்லும் வழியில் சங்கிலியை பார்த்தாள்.
எப்படியும் பேசுவாள் என்று தான் சங்கிலி காத்திருந்தான். ஆனால் பல்லவியோ திரும்பி கூட பார்க்காமல் செல்ல...
அவள் போகும் திசையை அதிருப்தியோடு பார்த்து நின்றான் சங்கிலி. .
. அத்தியாயம் தொடரும்…