அத்தியாயம் - 7
. ஒரு நாளும் இல்லாமல் சங்கிலி மிக நெருங்கி வருவது போல்
உரைக்க பயத்தில் நடையின் வேகத்தை கூட்டினாள் பல்லவி. அவன்
அவளுக்கு ஒரு சில உதவிகள் செய்திருக்கிறான் தான். அதற்காக அவன்
நல்லவன் லிஸ்டில் எல்லாம் அவளால் எடுக்க முடியவில்லை.
.
தேவையில்லாமல் அவனுடன் நட்பை வளர்த்துக் கொள்ளவும் அவள்
விரும்பவில்லை. இப்போது முன்பு போல் இல்லை. பதினோராம் வகுப்பிற்கு
அவள் செல்ல ஆரம்பித்ததில் இருந்து சங்கிலியிடம் பெரிய மாற்றம்
தெரிவதை தான் உணர்ந்தாள். அவள் எங்கு சென்றாலும் பின் தொடர்வதில்
இருந்து கண்ட கண்ட இடங்களில் வந்து குறுக்கால வண்டியை நிறுத்தி
ஏதாவது பேசுவது என இருந்த அவன் போக்கில் பெரிய வித்தியாசம்
தெரிந்தது.
.
அதிலும் ரவியை துணைக்கு அழைத்துக் கொண்டு அவனிடம் பேசுவது
போல தனக்குச் செய்தி சொல்வதும், அவளுக்கு தெரியாமல் இல்லை.அதில்
வேறு அத்தை இப்போதெல்லாம் அடிக்கடி அவன் பெயரை உச்சரிக்கவும்
தயங்கவில்லை. நல்ல பையன் என்று வேறு சர்டிபிகேட் கொடுக்கிறார். பத்து
பாஸ் ஆனதற்கு மிட்டாய் கொடுத்ததற்கே மகாத்மா ரேஞ்சில் பேசுகிறார்.
ஆரம்பத்தில் இது எதற்காக என்று அவளுக்கு தெரியவில்லை தான்.போகப்
போக அவள் வயது அவளுக்கு அதைச் சொல்லிக் கொடுத்தது.அதனாலேயே
அவனிடமிருந்து முழுமையாக விலகப் பார்த்தாள். நாளாக ஆக சங்கிலியின்
தொல்லை அதிகமானது.அதிகமாகவே கமலம் தான் காரணம்.
. "இல்லக்கா அந்த புள்ளைக்கு என் மேல அப்படி எதுவும் இருந்தது போல
தெரியல. வில்லனை பாக்குறது போல பாக்குது."
. ஒரு நாள் அவள் முறைத்த முறைப்பில் அடிபட்டவன் வந்து கமலம்
முன் நிற்க...
. "அப்புறம் வெளி இடத்துல போய் நின்னா எந்த பொண்ணும்
அப்படித்தான் பண்ணுவா.ஆள் இல்லாத இடமா போய் பேசு. கண்டிப்பா
மசிந்திடுவா."
என ஏத்தி விடதான் அப்படியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்து
அவளின் கோபத்திற்கு ஆளாகிப் போனான் சங்கிலி.
. கமலம் சொன்னது போல தாமரைக் குளம் தாண்டி ஒத்தையடி
பாதையில் அவள் பள்ளிக்கு அவசரமாக போய்க் கொண்டிருந்த போது
குறுக்கால கொண்டு வண்டியை விட்டவன்
. "ஏய் புள்ள உன்கிட்ட கொஞ்சம் பேசணும்." என சொல்ல
அவனை முறைத்தவள் பல்லை கடிக்க.
. "சொன்னா கேக்க மாட்டா. இப்படியே திமிர்தனத்தை காட்டுனா
இப்படியே தூக்கிட்டு காட்டுக்குள்ள கொண்டு போய் விடுவேன். அங்க என்ன
நடந்தாலும் யாருக்கும் தெரியாது தெரியும் இல்ல."
. அவனைக் கெட்டவனாகவே நினைத்துக் கொண்டிருக்கும் அவளிடம்
போய் வில்லனாக அவன் பேச, மொத்தமாய் அவன் மேல் வெறுப்பு
கொண்டவள் பளார் என அவர் கன்னத்தில் அறைய,
. வாங்கிய அடியோடு அவன் சிலையாகி போக, அவனை தாண்டி உயிர்
கொண்ட புலி போல பல்லவி முன்னோக்கி விரைந்தாள்.
. அவன் அடி வாங்கி கன்னத்தை தடவிக் கொண்டிருப்பதை பின்னால்
வந்த ரவி பார்த்து விட, வாய்விட்டு சிரித்தான்.
. "சிரிக்காத கொன்னுடுவேன்."
. "அப்புறம் சிரிக்காம...என் அம்மா பேச்சை கேட்டுட்டு நீ ஆடுறியே ஒரு
ஆட்டம். பார்க்க சகிக்கல. உண்மையிலேயே அந்த புள்ள மனசுல நீ
இல்லன்னு தான் நினைக்கிறேன். தேவை இல்லாம மனசுல ஆசையை
வளர்க்காமல் வேற வேலை இருந்தா போய் பாருடா.
. என ரவி சொல்ல...
. "இல்லடா அவ என்ன?..."
சங்கிலி இழுக்க
. "உன்னோட ஆசை புரியுது. ஆனா அது நடக்கிறது கஷ்டம்பா. அந்த
புள்ளை படிப்பை தவிர வேற எதுலையும் கவனம் சிதற கூடாதுன்னு
நினைக்குதுணு தோணுது. நான் பார்த்ததுல அது எப்பவுமே புத்தகமும்
கையுமா தான் இருக்குது."
".........."
. "நீ அம்மாவை அதட்டுனதுல இருந்து அம்மா அடக்கி தான்
வாசிக்கிறாங்க. அந்த புள்ளைக்கு பெரிய வேலை எல்லாம் கொடுக்கிறது
இல்ல. அதனால அந்த புள்ள வீடு வந்தாலே புத்தகமும் கையும் தான்
இருக்குது."
. "படிக்கட்டும். அவளுக்கு எவ்வளவு படிக்கனுமோ அவ்வளவு படிக்கட்டும்.
நான் வேணாணா சொல்லப் போறேன் அதுக்கு என்கிட்ட பேசக்கூடாதுனா
இருக்கா?..."
.
"உனக்கு புரியல சங்கிலி.அந்த புள்ள மனசுல வலி ஆழமா பதிஞ்சு போய்
கிடக்குது.அது அவங்க அம்மா இறந்ததிலிருந்து இன்னும் வெளிவரல.
வெளிவர இங்க யாரும் அவளிடம் அம்மா போல நடந்துக்கல."
. "நான் நடந்துக்குவேன்டா. அதுக்காக தானே அவளை விடாமல் பாலோ
பண்றேன்."
. "அது அவ நம்பணும் சங்கிலி."
. "அதுக்கு நான் என்னடா பண்ணனும்."
. "கொஞ்சம் அமைதியா இரு. எப்போவும் பின்னால சுத்தி இரிட்டேட்
பண்ணாத."
. "அப்படி செய்தால் என் பல்லவி என்கிட்ட வந்துடுவாளா?"
. "உடனே நடக்க வாய்ப்பில்லை.ஆனா அவ காயம் ஆறி உன்
உண்மையான அன்பு தெரியும் போது நிச்சயம் வருவா?"
.
"பல்லவி எனக்கு வேணும்டா.மனசுல அந்த அளவு அவளை ஏத்தி
வச்சுட்டேன். இனி அவ இல்லாம வாழ முடியாதுடா.அம்மா அப்பா கூட
பிறந்தவங்கன்னு யாரோட அன்பையும் நான் பார்த்ததில்லை. அதுதான் அந்த
புள்ளையோட அன்பாவது கிடைச்சுடாதணு ஏங்குறேன்.".
. "புரியுதுடா கொஞ்சம் பொறுமையா இரு."
. என ஒரு வழியாக தேற்றி அவனை அனுப்பினாலும் நேரே சங்கிலி
வந்தது என்னவோ கமலத்திடம் தான். நடந்தவற்றை கவலையோடு அவன்
சொல்ல...
. "இதுக்கு நீ சந்தோஷப்படணும்டா நீ என்ன கவலைப்படுற?"
. "என்னக்கா சொல்றீங்க."
. "அப்புறம் முதல் முதலா அவா உன்னை தொட்டு இருக்கா. உரிமை
இல்லாத பொருள் மேல எப்பவாவது நாம கையை வைப்போமா? உன் மேல
எனக்கு உரிமை இருக்குன்னு காட்டிட்டு போய் இருக்கா. இதுக்கு போய்
வருத்தப்படுறா."
. என்றதும்...
. "நெஜமாவா அக்கா."
.
"அப்புறம் ஒரு பொண்ணு மனச இப்படி தான் காட்டுவா? ஆம்பளைங்க
தான் ஏதாவது பரிசு பொருளை கொடுத்து தன் மனசு சொல்லணும்."
. "பரிசு பொருளா?"
. "ஆமா இந்த காலத்து பொண்ணுங்க எல்லாரும் கிப்ட்டுல மயங்கிடுவாங்க.
நீ அவளுக்கு எதுவும் பரிசு பொருள் வாங்கிட்டு வாயேன்.
. "நான் கொடுத்தா வாங்குவாளா அக்கா? " .
. "வாங்க மாட்டா பிகு தான் பண்ணுவா,அக்காகிட்ட கொண்டு வா நான்
பக்குவமா பேசி கொடுக்கிறேன்."
. "நிஜமாவாக்கா…"
.
"சத்தியமா...அப்பா ஆத்தா இல்லாத பொண்ணுக்கு உன்னால ஒரு நல்ல
வாழ்க்கை கிடைக்கும்னா நான் கண்டிப்பா செய்வேன்."
. "நாளைக்கு வாங்கிட்டு வந்துடுறேன் அக்கா."
. சங்கிலி பரபரப்பு அங்கிருந்து வெளியேற, நமட்டு சிரிப்போடு அவன்
போகும் திசையை பார்த்து நின்றாள் கமலம். அவள் எதிர்பார்த்ததை விட
சங்கிலியிடம் அந்த விஷயம் ஓவர் வினையை ஏற்படுத்தி இருக்க……
. தான் நினைத்தது நடக்கப் போகும் மகிழ்வில் இருந்தாள் கமலம்.
இவ்வளவு சொல்லியும் அவன் அவளுக்காக செய்தவற்றை நாசூக்காக பல
இடங்களில் சொல்லியும் அடித்திருக்கிறாள் என்றால் சுத்தமாக அவள்
சங்கிலியை வெறுக்கிறாள். எப்படி அவளை மசிய வைப்பது? மசிய வைத்து
இவனுடன் அனுப்பி வைப்பது?
"இன்னும் ஒரு மாதத்தில் பிளஸ் டூ தேர்வு நடக்கப்போகிறது அதை
எழுதிவிட்டால் இங்கே இருக்கிற மனுசனை கையில பிடிக்க முடியாது.
அதுக்குள்ள ரெண்டு பேரையும் பேக் பண்ணி ஆகணும்." .
. என்ன செய்யலாம் அவள் மனதில் கணக்கு போட்டுக் கொண்டிருக்க,
இவள் திட்டம் தெரியாமல் சங்கிலி அவளுக்காக பட்டு பாவாடை
தாவணியில் செலக்ட் பண்ணிக் கொண்டிருந்தான். மிகப்பெரிய
போராட்டத்திற்கு பிறகு மாம்பழக் கலர் அந்த பாவாடை துணியை
எடுத்துவிட்டு கடையை விட்டு வெளி வந்தான். மனது பூவாய் நிறைந்து
போயிருந்தது.
. அதனாலோ என்னவோ வரும் வழி எல்லாம் இதே பட்டுப்பாவாடை
தாவணியில் பல்லவி அவனுடன் ஆடிக்கொண்டே தான் வந்து
கொண்டிருந்தாள்
. அதை கண்ணுக்குள் ரசித்தவாறே வந்தவன் நேரே கமலத்திடம் வர,
அவளும் அதை வாங்கி வைத்துக்கொண்டு அனுப்பி வைத்திருந்தாள். அதை
கட்டிக்கொண்டு அவள் வருவாள் என அவன் காத்திருக்க...
இரண்டு வாரம் கழித்து கமலத்தின் மகள் ஐஸ்வர்யா கட்டிக் கொண்டு
வர,
கடுப்பின் உச்சத்திற்கு சென்றுவிட்டான் சங்கிலி
. நேரே கமலத்திடம் வந்தவன் வாய்க்கு வந்தபடி பேச,
. "நான் என்னடா செய்ய. நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லி தான் அவா
கைல கொடுத்தேன். அவா என்ன நெனைச்சாளோ ஐஸ்வர்யா கையில தூக்கி
கொடுத்திருக்கா. நான் கூட அவ தைச்சி போட்ட பிறகுதான் பார்த்தேன்
அதனால எதுவும் செய்ய முடியவில்லை."
. "முடியாது. எதுவும் செய்ய முடியாது. என்ன?...என்னை
பைத்தியக்காரன்ணா ரெண்டு பேரும் நினைச்சுட்டு இருக்கீங்க. அவளை நான்
நேரா பார்த்து பேசிட்டு..."
. அவன் சீற்றத்தோடு வெளியேற முயல, மாட்டிக் கொள்வோமோ என
பயந்த கமலம்...
.
"என்னடா நீ!.காரியத்தையே கெடுத்துடுவா போல. இப்ப தானே சொல்ல
ஆரம்பிச்சிருக்கா. அவா மனசுல போய் நீ அமர கொஞ்சம் காலம் கொடுடா.
அதை விட்டுட்டு முறுக்கிட்டு போனா..இந்த ஜென்மத்துல அவா உனக்கு
கிடைக்க மாட்டா.அப்புறம் காதல் பரத் போல...நங்கு நங்குன்னு தலையில்
கொட்டிட்டு தான் இந்த தாமரை குளம் முழுசும் அலைவா?"
. என்றதும் சட்டென நின்றவன் மெல்லத் தன்னை சமன் செய்து கொண்டு,
. "அப்புறம் என்னக்கா?. தாங்க முடியல.மூவாயிரம் ரூபாய்க்கா. எனக்கு
கூட நான் நூறு ரூபாய் கொடுத்து ஒரு டிரஸ் எடுக்க மாட்டேன். தண்டபாணி
அண்ணன் வருஷத்துக்கு கொடுக்கிற இரண்டு டிரஸ்சும் தான். அப்படிப்பட்ட
நான் ஆசையா போய் எடுத்து கொடுத்துட்டு கட்டிட்டு வருவானு காவல்
இருந்தா?..."
. சொல்லும் போதே சங்கிலியின் வார்த்தை பிசிறடிக்க…
. "விடுடா.கொஞ்சம் விட்டு பிடி. அப்புறம் உன் கையால துணி வாங்கி
அணிய ஏங்கி நிற்பா..."
"நடக்குமா அக்கா?"
"அதுல உனக்கு என்ன சந்தேகம் முதல்ல நீ கிளம்பு நான்
பார்த்துக்கிறேன்."
என அன்று அவனை அனுப்பிவிட்டாலும் அதன் பின் வந்த நாட்கள்
எல்லாம் ஏதேதோ சொல்லி சொல்லி அவன் பணத்தை புடுங்க தான்
செய்தாள். பல்லவி மேல் கொண்ட நேசத்தில் அவள் ஆடிய ஆட்டத்திற்கு
எல்லாம் ஆடினான் தான் சங்கிலி.
ஆனால் எந்த விஷயத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி உண்டு அல்லவா?
கமலத்தின் ஆட்டத்திற்கும் அந்த முற்றுப்புள்ளி வந்தது.
அன்று பள்ளிக்குத் தேர்வு எழுத சென்று விட்டு பல்லவி நடந்து வந்து
கொண்டிருந்த போது அவளுடன் படிக்கும் சில மாணவர்கள் பின்புறமாக
அவளை கிண்டல் செய்து வந்து கொண்டிருக்க...
பல்லவியோ நடுக்கத்தோடு முன்னால் பயந்த விழியோடு வந்து
கொண்டிருந்தாள். அவனுங்க விடுவதாய் இல்லை. அவள் அருகில் வந்து
சீண்ட ஆரம்பிக்க..அவள் பயத்தில் விரைவாக நடக்கத் தொடங்கினாள்.
அவனுங்களும் தொடர்ந்து கிண்டலோடு வர…இதை சங்கிலி பார்த்து
விட்டான். கேட்கவும் வேண்டுமா? ஹீரோவுக்கு கோபம் வந்துவிட்டது.
அடித்து துவைத்து எடுத்து விட, கடைசியில் அவன் கையில் மாட்டியவன்
அவனை கையெடுத்து கும்பிட..
"அவா என்னோட ஆளுடா? .இனி எவனாவது அவ பின்னால வந்ததை
கண்டேன். கண்ட இடத்திலேயே சமாதி ஆகிடுவேன்"
சங்கிலி கர்ச்சித்துக் கொண்டு நிற்க,
அத்தனை பசங்களும் துண்டை காணோம் துணியை காணோம் என
ஓடிவிட,
சட்டென திரும்பிப் பார்த்தான் சங்கிலி.
பல்லவி விழி நிறைய நீரோடு அவனை முறைத்து பார்த்துக்
கொண்டிருந்தாள். தலைகுனிந்தவனாக அவள் அருகில் வந்தவன்
"எனக்கு உன்னை புடிச்சிருக்கு பல்லவி. இதைச் சொல்ல தான் நாய்
மாதிரி உன்னை சுத்தி சுத்தி வந்தேன்.ஆனா நீ என்னை நாயா நினைச்சுட்டா.
சாரி, சுடிதார்ன்னு எவ்வளவோ பரிசு பொருள் வாங்கி கொடுத்தும்...நீ
ஐஸ்வர்யாவுக்கு தூக்கி கொடுத்து என் மனச சாவடிச்சுட்டா. இதுக்கு
மேலயும் பேசாம இருக்கக் கூடாது என்று தான் உன்னை தேடி
வந்தேன்..வந்த வழியில் என்னவெல்லாமோ…."
"உன்னை எவனாவது ஏதாவது செய்தா அம்புட்டு கோபம் வருது. ஏன்னு
தெரியல. உன் கண்ணுல கண்ணீரை பார்த்தா அம்புட்டு ஆத்திரம் வருது.
அதுவும் ஏன்னு தெரியல. கொஞ்ச நாளாவே நான் நானாகவே இல்லை.
எனக்குள்ள நீ என்னமோ பண்ற,. எனக்கு நீ வேணும் பல்லவி. உன்னை நான்
தங்கமா பாத்துப்பேன். உள்ளங்கைல வைத்து தாங்கிக்குவேன். உயிர்ல்ல
ஏந்திக்குவேன். நீ உம்முன்னு ஒரு வார்த்தை சொல்லு. இப்பவே கொண்டு
போய் தாலி கட்டி என் மனைவியாக்கிடுவேன்."
சங்கிலி மனதில் இருந்த அத்தனை உணர்வையும் கொட்டி விட்டு
திரும்பி பார்க்க...
பல்லவி வெகு தொலைவில் போய்க் கொண்டிருப்பது தெரிந்தது.சங்கிலி
திகைத்து நின்று விட்டான்.
மறுநாள் காலை பாண்டி அவனை தேடி வந்த போது தான் பல்லவியின்
மனதில் தான் இல்லை என்பதை தெரிந்து கொண்டான். என் செயல்
எவ்வளவு நொறுக்கியிருந்தால் மாமாவிடம் போய்ச் சொல்லிச் சொல்லி
கதறி இருப்பாள். அவள் பின்னால் வந்த மாணவர்களை விட என்னை
அல்லவா அவள் மோசமாக நினைத்து விட்டாள். இனி காலத்திற்கும் அவள்
புறம் செல்லக்கூடாது. என தீர்மானித்து விட்டான். அதனால் அதன் பிறகு
கமலத்தின் வீட்டிற்கு கூட அவன் செல்வதில்லை. கமலத்திற்கு தான்
பொசுக்கென்று ஆகிவிட்டது. இரண்டு வருடமாய் அவளும் எப்படி எல்லாமோ
காய் நகர்த்தி பார்த்தாள். சங்கிலியை தகர்த்த முடிந்த அவளால் பல்லவியின்
மனதை கரைக்க முடியவில்லை. அதிலும் பாண்டி போய் வருத்தப்பட்டு
அழுத பின் அவன் அவள் புறம் திரும்பாததும் இவள் போய் பேசியும் இறங்கி
வராததும் சலிப்பை தந்தது.
"அப்படின்னா என் திட்டம் நிறைவேறாதா? இந்த பொண்ண கூட்டிட்டு
அவன் ஓட மாட்டானா? இது சரி இல்லையே. எப்படியும் இவங்களை ஊரை
விட்டு ஓட வைக்க வேண்டுமே.
என கமலம் ஆயிரம் திட்டங்களை யோசித்துக் கொண்டிருந்த அதே
நேரம்...
அவர்கள் யாருமே எதிர்பார்க்காத சந்தோசத்தை அள்ளிக்கொண்டு அந்த
நாள் சுமந்து வந்தது.
அதுதான் +2 ரிசல்ட். உலகமே அவளை தூக்கி வைத்துக் கொண்டாடும்
அளவு அவள் மார்க் இருக்க, பாண்டி நெஞ்சம் நிறைந்து போனார். ஒரு
மார்க்கை கூட நீ இழந்து விடக்கூடாது என ஐந்து வருடத்திற்கு முன்னால்
சொன்னார். அதை பல்லவி நிரூபித்து விட்டாள்..ஆம் அவளுக்கு 600 க்கு 600
மார்க் கிடைத்திருந்தது..
ஊரே அவளைப் பாராட்டித் தீர்த்தது. பெரிய பெரிய விஐபிக்கள் கூட
வீட்டுக்கு வந்து பார்த்துவிட்டு சென்றனர். அந்த குடிசை வீடு கூட டிவியிலும்
சேனலிலும் பிரபலமானது. உள்ளூர் எம்எல்ஏ முதல் மந்திரி வரை வாழ்த்தி
விட்டு சென்றனர். ஆனால் சங்கிலி அவள் புறமே செல்லவில்லை ஆனால்
விஷயம் அறிந்ததும் கோயிலுக்கு மட்டும் சென்றான். அவள் பெயருக்கு
அர்ச்சனை மட்டும் செய்து தெய்வத்திற்கு நன்றி மட்டும் சொல்லிவிட்டு
கடையில் வந்து முடங்கிக் கொண்டான்.
தண்டபாணிக்கும் ஜெகனுக்கும் தான் பாவமாக இருந்தது. தன் வாழ்வில்
செய்யவே மாட்டேன் என உறுதியாக இருந்தவற்றைக் கூட அவளுக்காக
மாற்றினான். ஆனால் அவள் மொத்தமாய் தாட்டா காட்டிவிட்டு
சென்றுவிட்டாள். அதில் வேறு ஊரே இன்று அவளை கொண்டாடித்
தீர்க்கிறது. இதன்பின் அவள் இவன் புறம் திரும்பவா போகிறாள். பாவம்
சங்கிலி. இந்த பிசாசு இந்த ஊருக்கு வராமல் இருந்திருக்கலாம். அவன்
உண்டு அவன் வேலை உண்டு என இருந்தவனை, இப்படி ஆட்டி
மொத்தமாய் உட்கார வைத்து விட்டாளே...தண்டபாணி வாய் விட்டே புலம்ப…
"வேற வேலை இருக்குனா போய் பாருங்க அண்ணே காலையிலேயே
புலம்பிட்டு இருக்கிறது."
"அது இல்லடா உன்னை இப்படி பார்க்க முடியல."
"முடியலன்னா எழும்பி போங்க. நல்ல சிவம் பணம் தரணும் இல்ல.
டவுனுக்கு போய் வாங்கிட்டு வாருங்கள்."
அவன் எரி்ந்து விழுவதே அவன் ஆதங்கத்தை காட்ட...
"நீ இங்கே இருக்க வேண்டாம்டா. நீ வேணா டவுனுக்கு போய் நல்லா
சாப்பிட்டுட்டு, தியேட்டர்ல படம் பார்த்துட்டு நைட் வா. அப்பவாவது உன்
மனசு நார்மல் ஆகுதான்னு பார்ப்போம்."
"இப்ப என் மனசுக்கு என்ன வந்துச்சு. நான் நல்லா தானே இருக்கேன்."
"நல்லா இருந்தா இந்நேரம் இங்க இருக்க மாட்டியே..ஊருக்கே லட்டுல
வழங்கிட்டுருப்பா?"
"அதான் வேணான்னு தூக்கி எறிஞ்சுட்டால. அப்புறம் என்ன?
சொல்லியவாறு எழுந்தவன்...
"அந்த துரையோட மோட்டார் சைக்கிள் எடுடா. சரி பண்ணுவோம். நமக்கு
வேலை தான் முக்கியம். வேற எதுவும் தேவையில்லை."
சொல்லியவாறு சுவரோடு சாய்ந்து நின்ற அந்த மோட்டார் பைக்கை
எடுத்தவன், அதை பார்ட் பார்டாக பிரிக்க தொடங்க, அவனை இருவரும்
பார்த்து நின்றனர். சங்கிலியால் நார்மலாக செய்ய முடியவில்லை. எல்லாம்
தப்பும் தவறுதலுமாக வர, ஒரு கட்டத்தில் கையில் சுத்தியலால் அடித்து
விட, வலி பொறுக்காமல் முகத்தைச் சுழித்துக் கொண்டு இருந்தவன் அருகில்
ஓடி வந்த தண்டபாணி
"நீ சரியா இல்லடா சங்கிலி. இன்று விட்டுடு. நாளைக்கு பாக்கலாம்."
என அவன் கரம் பிடிக்க, அவர் மார்பில் மேல் விழுந்து புரண்டவன்
விம்மி துடித்தான்.
"விடுடா எல்லாம் சரியாகும்."
"இல்லண்ணே. இனி சரியாகாது. சரியாகாது அவா என்னை விட்டு தூரமா
போயிட்டா. அவளை விட்டு ஒதுங்குறது தான் எனக்கு சரி. அதான் அம்புட்டு
ஆசை இருந்தும் அவங்க சந்தோஷத்துல கலராம ஒதுங்கி நிற்கிறேன்.
பாண்டி அண்ணே ரிசல்ட் வந்ததும் சந்தோஷத்துல வந்து சொல்ல கூட
செய்தார். சந்தோசம் தான். அந்த புள்ள இந்த அளவு உயர போகுதுன்னு நான்
நினைக்கல. அந்த சந்தோஷத்துல கலந்துக்கணும்னு எனக்கும் ஆசைதான்.
ஆனா சரி ஆகாது அண்ணே..."
"இனி அவளோடு முகத்துல என்னால முழிக்க முடியாது. செருப்பை
கழட்டி அடிச்சது போல எனக்கு புரிய வச்சிட்டா. இதுக்கு மேலயும் அவ
பக்கத்துல போறது சரியா இருக்காது. விடுங்கண்ணே."
என்றவன் சட்டென அவரிடம் இருந்து பிரிந்து வெளியே நடந்தான்.
அவன் போவதையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர் தண்டபாணியும்
ஜெகனும்.
அத்தியாயம் தொடரும்…

Last edited: