ஒரு அழகான இயற்கையோடு இணைந்து உள்ள ஒரு குக் கிராமம்.
இன்றளவும் ஊருக்குள் ஒரு பஸ் கூட ஒடியதில்லை.
அப்படியொரு கிராமத்தில் நேர்மையான,ஒழுக்கமான, ஒரு உண்மையான மக்களுக்கு
உழைத்த அனைவருக்கும் பிடித்த அரசியல்வாதி ஆவார்.ஆனால் சிறு தவறை கூட மன்
னிக்கமாட்டார்.
சிறு வயதில் இருந்தே தன் தந்தை இறந்து விட குடும்ப பொறுப்பு
முழுவதும் இவர் கவனிக்கவேண்டிய நிலை . அக்கா,தங்கை திருமணம் செய்து வைத்து
கடமை முடித்து கல்யாணம் பண்ண வயது 32, அருமை குழந்தை பிறக்க வயது 36.
தவமாய் தவமிருந்து பிறந்த குழந்தை பெண் குழந்தை.
பொட்ட பிள்ளை என முகம் சுளித்து பார்க்க்கவந்த அவருக்கு, ஆசை மகள் அழுத்தி
பிடித்தாள் அவரின் பெருவிரலை.
அழகா ன சாதனைப் பெண்ணாக,தேவதை போலதெரிந்தாள்.வளர்ந்து வந்த வேளையில்
உறவினர்கள் எல்லாம் அம்மா சொல்லு, அத் தை
சொல்லு,ஆச்சி சொல்லு என்ற போது அவள் சொன்ன வார்த்தை “அப்பா”. உயிரே அவள்
தான் சிறு துரும்பு கூட படாமல் ஈ, எறும்பு அண்டாமல் பார்த்துக்கொள்வார். யார்
சொன்னாலும் கேட்காத அப்பா ,மகள் சொன்னால் மறு பேச்சு இல்லை. அப்படி ஒரு
சிறப்பான அப்பா..
தாயிடம் தப்பி வந்த மண்ணும் கல்லும் கூட மகளின் கைபட்டால் காந்த சிலையாகும்.
அப்படி ஒரு சிறப்பான முறையில் அமைந்த மகள். மகள் சொல்லே அவருக்கு மந்திரம்.
அப்பா என்ற ஒன்றே மகளின் திருமந்திரம். அப்பா அப்பா அப்பா.
காலை நேரம் அன்பில் தர்மலிங்கம் தலைமை ஆசிரியர்
வீட்டின் உள்ளே நுழைகிறார்.
வாங்க ஐயா, என்ன விசயம் என்கிறார் அப்பா ராமசாமி.
ஒன்றும் இல்லை உங்கள் சித்தப்பா சந்தோசம் பள்ளி தாளாளர் எங்களுக்கு ஒரு கெடு
வைத்துள்ளார் . பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அதிகம் இல்லை.ஆதலால் நீங்கள் என்
மதினி பையன் ராமசாமி யை பார்த்து பேசி வாருங்கள் என்று கூறினார் தலைமை
ஆசிரியர்.
ஓ அப்படியா சரி, .செல்வி செல்வி போய் அம்மாவிடம் காபி வாங்கிட்டுவா, சரி அப்பா
என்று ஓடினாள் சிறுமி செல்வி. காபி தம்ளருடன் வந்த செல்வியை உற்று பார்த்த
தலைமை ஆசிரியர்,
பாப்பாக்கு என்ன வயது என்றார். 4 வயது என்றார் அப்பா ராமசாமி .
செல்வியிடம் பேச, அவள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த விதம் குறித்து ஆச்சரியப்பட்டு
பள்ளியில் முதலில் உங்கள் பொண்ணை சேருங்கள் என்றார். வயது குறைவு என்பதால்
எப்படி சேர்க்க முடியும் என்று கேட்டதற்கு ஒன்றும் தப்பில்லை,
என்று பள்ளியில் சேர்க்க வைத்தார்.
உடனே சந்தோசமாக பள்ளியில் சேர ஒப்புக் கொண்டாள் செல்வி.
பள்ளி சென்ற செல்வி, அங்கு ஆண்கள் மட்டும் இருப்பதை பார்த்து, வீட்டுக்கு வந்த
உடன் அப்பாவிடம் அப்பா அங்கு பெண்கள் குறைவாகத்தான் இருக்கிறார்கள், அது ஏன்
என்று கேட்டதற்கு, அப்பா ஆமா மா, நம் ஊரில் பெண் பிள்ளைகள் படிக்க
மறுக்கின்றனர். அவள் பெற்றோரும் சேர்க்க மாட்டார்கள் என்றார்.
நீங்கள் பெற்றோர்களுக்கு அறிவுரை கூறி சேர்க்க சொல்லுங்கள்.நான் பிள்ளைகளிடம்
பேசுகிறேன் என்றார்.
வீடு வீடாக சென்று பெண் பிள்ளைகள் பெற்றோர்களிடம் பேசி வகுப்பில் ஒரு மாணவி
இருந்ததை ஒவ்வொரு வகுப்பிற்கும், அதிக அளவுக்கு பெண் மாணவிகளை சேர்த்தனர்.
முதலில் முதல் வகுப்பிற்கு 12 மாணவிகள்,
இரண்டாம் வகுப்பிற்கு 8 மாணவிகள்,
மூன்றாம் வகுப்பிற்கு 4 மாணவிகள்,
நான்காம் வகுப்பிற்கு
9 மாணவிகள்,
ஐந்தாம் வகுப்பிற்கு
3 என மாணவிகளை உயர்த்தி பள்ளிக்கு பெருமை சேர்த்தாள் செல்வி.
செல்வியை பாராட்டி தாளாளர் சந்தோஷ் நாராயணன், தலைமை ஆசிரியர் தர்மலிங்கம்
பாராட்டி பரிசு வழங்கினார்கள். சென்ற உடனே பரிசு பெற்ற செல்வி என்று நம்
கதாநாயகி தமிழ்ச்செல்வி சந்தோசமாக தோழிகளுடன் பள்ளி சென்றாள்.
என்னே! ஒருபெண் மறுமலர்ச்சி.
பாண்டியா, என்ன ஆத்தா?
உன் தங்கச்சிக்கு பொங்கல் படி கொடுக்கனுண்டா, நீ இப்போ தான் சொல்ற ஆத்தா,
நான் நேற்றே கொடுத்துட்டு வந்துட்டேன். அப்படியா, நல்லத்தாய் என்ன சொன்னா?,
அவ மகளுக்கு சடங்கு வைக்க போராளாம்.
எப்படிப்பா, இப்போதானே எல்லாம் செய்தோம்.
சரி செய்தால் தான் என்? தாய்மாமா என்றால் , சும்மாவா என்றார் அப்பா.
மணி 7.00ஆகுது இந்த பிள்ளை எழுந்திரிக்கா பாரு, எல்லாம் அவ அப்பா கொடுக்கிற
செல்லம்.பெண் பிள்ளை மாதிரியா வளர்க்குறாரு, பையன் மாதிரில்ல வளர்க்குறாரு.
அங்க என்ன சத்தம். மாமியாரும், மருமகளும் சேர்ந்து என் குழந்தையைப்
திட்டுகிறிர்களோ ?,
ம்ம் திட்ட வில்லை சொல்றோம் என்றார்கள்.
செல்வி எழுந்திரு,
பள்ளி செல்ல வேண்டும்.
இதோ அப்பா பத்து நிமிடத்தில் கிளம்பி விடுவேன். என்று ஓடி போய் பள்ளி
கிளம்பினாள் .அப்பா சொன்ன வார்த்தை க்கு மதிப்ப, நம்ம சொன்னா யார் கேட்பது சரி,
எப்படியோ பள்ளிக்கூடம் என்றவுடன் ஓடி விடுவாள்.
அம்மா தலை வாரி விடு. ம்ம் சரி,வா ஏய் என்ன தலைல ஈரம் அப்படியே இருக்கு.
தினமும் தலைக்கு குளிக்க வேண்டாம் என்றால் கேட்க மாட்டாள். வாரம் ஒருமுறை
எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். அப்ப தான் முடி நன்கு வளரும் சரியா?, சரி
அம்மா என்றால் செல்வி.
அப்பாவிடம் அப்பா நம்ம ரேடியோ வில் Sunsilk shampoo
என்று ஒரு ஷாம்பு வந்து இருக்கு அதை போட்டால் முடி நன்கு வளரும் என்றார்கள்,
எனக்கு வாங்கி தாங்க அப்பா என்றாள் . இன்று கடைக்கு போய் வாங்கிட்டு
வரேன்.என்றார் அப்பா. செல்வியை பள்ளியில் விட்டுவிட்டு வந்ததும் திருநெல்வேலி
போகிறேன் எதாவது வாங்க வேண்டுமா? வீட்டுக்கு என்றார்.
மனைவி அவரம்மாவிடம்எனக்கு ஒரு வெற்றிலை பெட்டி ஒன்னு மட்டும் வாங்கி வா என்றார்.
மனைவி கதவு கொண்டி வாங்க வேண்டும் கதவு சரியா பூட்ட மாட்டேங்குது என்றாள்
மனைவி. பேசி கொண்டு இருக்கும் போது அவர் பெரியப்பா மகன், தேவர்பிரான்
முத்துராமலிங்கம் வருகிறார் பாண்டியா, என்ன வாங்க சுப்பு காபி கொண்டு வா என்று
பெஞ்சை இழுத்துபோடுகிறார.
இன்னைக்கு ஊர் கூட்டம். ப்பா நம்ம சங்கர பாண்டி மகள்
கள் பிரச்சனை அது தான் பேச வேண்டும். அப்படியா ஆமா எப்போ சாயங்காலம்
4.00மணிக்கு சரி நீ எப்போ எங்க போற திருநெல்வேலி எதுக்கு அது ,சும்மா மகள்
செல்வி ஷாம்பூ கேட்டா, அதான் வாங்க போகிறேன். பாண்டியா காலையில் தானே
சொன்னா அதுக்குள்ள வாங்கனுமா நா கூட வேற வேலையா போறாயோ என
நினைத்தேன். என்றார் அவர் அம்மா.
தம்பி பொட்ட பிள்ளை கேட்ட உடனே எல்லாம்
கஷ்டப்பட்டு உழைத்து எல்லாம் வாங்கி கொடுக்க கூடாது அது வேற வீட்டுக்கு போய்
விடும். நம்மை பார்க்காது உனக்கு வேற ஆம்பிளை பிள்ளை இல்லை நகை, பணம் என்று
சேர்த்து வை. பிள்ளை, அக்கா, தங்கை என எல்லாம் செலவு செய்யாதே என்று கூறினார்.
அண்ணன், போ அண்ணன் என் பிள்ளை எப்படி படிக்கிறாள் தெரியுமா?, பள்ளியில் இது
வரை அவள் தான் முதல் ரேங்க் அவள் கேட்டதை வாங்கி கொடுப்பது நம் கடமை.
அதனால் நான் போறேன். சாயங்காலம் வந்து விடுவேன் என்றார் அப்பா. பொட்ட
பிள்ளைக்கு தேவையா இது. எல்லாம் அது ரொம்ப விலை மிக அதிகமாக இருக்கும்
பார்த்துக்க. அவன் பிள்ளைக்கு மனைவி வளையலை அடகு வைத்து அல்வா
வாங்கியவன் ஆயி ற்றே, அவன் சொன்னா கேட்க மாட்டான் வா நாம போவோம். அவன்
சரியா, நாம சொன்ன நேரத்துக்கு வந்து விடுவான் வா . என்னப்பா சொல்ற வளையலை
வைத்து அல்வா வங்கினானா? ஏய், என்ன இப்படி பன்ற?, பொட்ட பிள்ளை அப்படி
வளர்க்க கூடாது டா என்றார் தேவர்பிரா ன் .அண்ணன் ஓயாமல் பொட்ட பிள்ளை என்று
சொல்லாதே .பொட்ட என்றால் அர்த்தம் தெரியுமா? உங்களுக்கு. என் பிள்ளை கண்
தெரியாதவள் என்று அர்த்தம். என் பிள்ளை ‘மகாராணி’ சும்மா இரு, ஒன்னும் சொல்ல
வேண்டாம் . போ என்று திருநெல்வேலி சென்றார்.
அங்கு கடைக்கு போய்கடைக்காரரிடம் சில்க் பூ தாப்பா என்றார் கடைக்காரர் சில்க் பூ வா அது என்ன என்றார்.
அதாம்ப்பா ரேடியோ வில் சொல்வானே முடி வளர போட சொல்லி அது. என் மகள்
செல்வி சொன்னா, ஆனா வரதுக்குள்ள இரண்டு பேர் வந்து பேசி என்ன குழப்பி விட்டு
விட்டான் அதுக்குள்ள மறந்து விட்டேன் என்றார் அப்பா.ஓ அதுவா அண்ணாச்சி அது பூ
இல்லை Sunsilk shampoo ஆ அதே தான் தா என்று வாங்கி வந்தார் அப்பா.
ஆச்சி அப்பாஎங்க , அவனா திருநெல்வேலி போய் இருக்கான் . இந்தா வந்து விட்டான் பாரு, சைக்கிள்
சத்தம் கேட்டதும் ஓடினாள் சிறுமி. அங்கே அப்பா வந்ததும், எங்கேப்பா, எங்க
போனீங்க? இது என்னது பார் என்றார். ஐ! ஷாம்பு உடனேவாங்கிட்டு வந்தாச்சா? Thank
you அப்பா என சந்தோசமாக துள்ளி குதித்தாள். மகளின் சந்தோஷம் அப்பாவின் நிம்மதி.
ஆச்சி, பார்த்தியா எங்க அப்பாவ, எம்மா உங்க அப்பா உணக்கு வாங்கி தந்தாரா? அம்மா,
உங்க அப்பா பொட்ட பிள்ளையாவா உன்னை வளர்க்கிறார், கேட்டதை வாங்கி
கொடுத்து கெடுக்கார். ஏய் பிள்ளை யை பொட்ட கிட்ட சொன்ன, அறைந்து விடுவேன்
போ, வேலையை பார். செல்வி நீ இதைதலையில் தேய். அப்பா இது எண்ணெய் இல்லை.
தலையில் தேய்த்து குளிக்க வேண்டும். ஓ, அப்படியா!, சரி அங்க போய் வை என்றார்.
அப்பா இன்றைக்கு என்ன கிழமை?
ஏன் கேட்குற? புதன் கிழமை.
கடைக்கு போக வேண்டும் அல்லவா?, ஆமாம் மறந்து விட்டேன். இன்றுமிட்டாய்க்காரர்
சீக்கரம் வருவார், போக வேண்டும் என்றார் அப்பா .
கடையை திறக்கும் முன் கடை வாசலில் ஒரே கூட்டம்.
ஏன் என்றால் மிட்டாய் புதியதாக கிடைக்கும் . அதனால் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம்
கூட்டமாக வந்து நிற்கின்றனர்.
மிட்டாய்காரார் வந்தவுடன் அவரிடம் பல வகை மிட்டாய்
களை வாங்கி விற்பதற்கு முன் அவ்வளவு பாக்கெட்டில்இருந்தும் இரண்டு இரண்டு
மிட்டாய் எடுத்து வைக்கிறார் அப்பா. கடையில் பொருள் வாங்குபவர்கள் அண்ணாச்சி
யாருக்கு இது என்கின்றனர் . வேறு யாருக்கு எம் பொண்ணு செல்விக்குதான்
என்கிறார்.உடனே அவர்கள் அவள் ஒருத்திக்கு எவ்வளவு மிட்டாய்
என்கின்றனர்.
அவர் கடையை அடைத்து உணவு உண்ண வீடு செல்லும் போது மிட்டாய் எல்லாம்
எடுத்து கொண்டு போகிற வழியில் வாய்க்காலில் குளிக்க செல்கிறார். பையை கரையில்
வைத்து விட்டு குளித்து முடித்து விட்டு பையை மறந்து விடுகிறார்.
அந்த பையை அடுத்து குளிக்க வரும் நபர் எடுத்து செல்கிறார். வீட்டில் போய் எல்லா
மிட்டாய் களையும் கொடுக்கிறார். இது ஏது?, எங்க உள்ளது என்று அவர் மனைவி கேட்க
இது பாண்டி மாமா அவர் கடையில் இருந்து மகளுக்கு கொண்டு போகும் போது மறந்து
விட்டார்.
அதைத் தான் எடுத்து வந்தேன் என்றார்.
ஏ,அப்பா எவ்வளவு செல்லமாய் பெண் பிள்ளையை வளர்க்கிறார் பாருங்கள் என்றார்.
ஆம் கடைசி வரை அந்த பிள்ளை அவரை காப்பாற்ற வேண்டும் என்றார் அவர்.