அத்தியாயம் - 6
இரவு வெகுநேரமாகியும் சங்கிலிக்கு தூக்கம் வரவே இல்லை. இவ்வளவு உதவி செய்தும் ஒரு வார்த்தை பேசவில்லையே. பல்லவியின் பாராமுகம் தான் நியாபகத்தில் வந்தது. எங்கெல்லாம் அலைந்து திரிந்து அந்த மாட்டை கண்டுபிடித்து அவளையும் அவள் மாட்டையும் பத்திரமாய் கொண்டு சேர்த்தேன். அன்று தான் அதிர்ச்சியில் இருக்கிறாள் என்று நினைத்தேன். ஆனால் மூன்று நாளான பின்பு கூட ஒரு நன்றி சொல்ல தோணுதா பாரு. நன்றி சொல்ல வேணாம். ஒரு சிரிப்பையாவது கொடுக்கலாம் தானே... இப்போதும் ஏதோ வில்லனை பார்ப்பது போல ஒரு பார்வை. தெரியாதவனை கடந்து போவது போல ஒரு போக்கு...
சங்கிலியின் மனது சலித்து கொண்ட அதே நேரம், அவனை உலுக்கி எழுப்பினான் தண்டபாணி.
"என்னடா ஆச்சு. விடிஞ்சி இவ்வளவு நேரமாச்சு இன்னும் எழும்பாம இருக்கா?..."
என்றதும் தான் விடிஞ்சிடுச்சா என்ற எண்ணமே வந்தது. சட்டென எழுந்தவன் திருதிருவென விழிக்க ஆரம்பிக்க...
"உன் போக்கே சரியில்லடா. இப்ப எல்லாம் உன் நடையில ரொம்ப வித்தியாசம் தெரியுது."
"என்ன வித்தியாசம் தெரியுது."
எழுந்து பாயை சுருட்டியவாறு அவன் கேட்க...
"வித்தியாசம் ஒண்ணுனா சொல்லலாம். மொத்தமா மாறி நின்னா என்னத்த சொல்லுறது?."
அவரும் சலித்து கொள்ள...
" முதலாளி... இப்ப எல்லாம் சார் குளிக்காம வெளியில போறதேயில்ல. சீப்பு வாங்குனா பத்து ரூபாய் தெண்டம் என இருந்தவரு இப்ப எல்லாம் ஒரு நாள் பத்து வாட்டியாவது தலை சீவுறாரு..."
ஜெகன் எடுத்து கொடுக்க...
" அதை விடுடா. அதை விட பெரிசா ஒண்ணு செய்திருக்கான் தெரியுமா? அதை அறிஞ்ச நேரத்துல இருந்து நம்ம சங்கிலியா அப்படினு நம்ப முடியல..."
"அப்படி என்ன பண்ணுனான்."
"அன்னை தெரசாவா மாறி சேவை எல்லாம் பண்ணியிருக்காண்டா/?..."
"ஒரு பேச்சுக்கு கூட அப்படி சொல்லாதுங்க. சங்கிலியாவது யாருக்கும் உதவுறதாவது. ஒரு நாள் அர்ஜென்ட்க்கு பத்து ரூபாய் தான் கேட்டேன். அதையே கூட இருக்கிறவனுக்கு கொடுத்து உதவாதவன் வேற யாருக்கு சேவை செய்ய போறான்."
"அவன் சேவை எல்லாம் உன்னை போல ஆணுக்கில்ல... அழகான ஒரு பெண்ணுக்கு."
"என்னண்ணே சொல்லுறீங்க. நிஜமா? நம்ம சங்கிலியா?"
"ம்...ம்...கொஞ்சம் நஞ்சமில்ல. 2000 ரூபாய். முழுசா தூக்கி கொடுத்திருக்கான். அதுவும் அவன் சேமிச்சி வச்ச பணத்துல இருந்து. எப்பவாவது நம்ம சங்கிலி உண்டியல்ல போட்ட பணத்தை செலவு பண்ண எடுப்பானா? சோறு இல்லடா. அதுல எடுத்து வாங்குணு சொன்னா கூட,ஒரு முறை சாப்பிடாம இருந்தா செத்து போக மாட்டோம்னு சொன்ன பையன் இன்று சொழையா அதுல இருந்து 2000 எடுத்து கொடுத்தாணு சொன்னதும் மயக்கம் வராத குறைதான் எனக்கு."
"பாண்டி அண்ணாச்சி போட்டு கொடுத்துட்டாரு போல..."
உள்ளத்துக்குள் எண்ணி கொண்டவன்.
"கடனா தான். சீக்கிரம் திரும்ப கொடுத்திடுறேணு சொல்லியிருக்காரு. "
சங்கிலி அவசரமாக சொல்ல...
"இந்த கடனை நாங்க எத்தனை நாள் கேட்டிருப்போம். எங்களுக்கே கொடுக்க மனசில்லாத உனக்கு அங்க கொடுக்க மட்டும் எப்படி மனசு வந்துச்சு."
"அது!..அது!.."
என சங்கிலி இழுக்க...
"அது பொண்ணு முதலாளி. நீங்களும் பொண்ணா இருந்தா ஒரு வேளை சார் உதவியிருப்பாரோ என்னவோ."
ஜெகன் சொல்ல வெட்கத்தில் நெளிந்த சங்கிலி... சிரித்து கொண்டே
" உங்களுக்கு வேற வேலை இல்லையா? காலையிலேயே என் தலை தான் கிடைச்சிதா. உருட்டுங்க. நல்லா உருட்டுங்க. ஆனா எனக்கு நிற்க நேரமில்ல. குளிக்க போகணும். நான் வரேன்."
என்றவாறு டவ்வலோடு வெளியேற...
"ஓடப்பாக்குறான் முதலாளி விடாதுங்க. நியாயம் கேட்காம விடாதுங்க. நம்மளை விட அவா எப்படி உசத்தினு கேளுங்க."
ஜெகன் எடுத்து கொடுக்க...
"நில்லுடா. சொல்லிட்டு போடா..."
தண்டபாணியும் குரல் கொடுக்க...
சங்கிலியோ ஒரே ஓட்டமாய் ஒடி விட இங்கு இருவரும் சிரித்து கொண்டனர்.
அதே நேரம் பாண்டி வெளியூர் கிளம்ப ரெடியாகி கொண்டே இருந்தார்.
அருகில் வந்த கமலத்திடம்...
"முழுசா மூணு நாள் நிற்க வேண்டி வரும். வருகிற லோடை ஏத்திட்டு ஞாயிற்றுகிழமை காலை இங்க வந்து சேர்ந்திடுவேணு நினைக்கிறேன்."
சொன்னவன் கையில் பையை தூக்க பல்லவிக்கு தான் வலியாக இருந்தது. தினமும் காலையில் போய் ராத்திரி வந்தாலே கமலம் அவளை மொத்தமாய் படுத்தி எடுத்து விடுவாள். இந்த நிலையில் முழுதாய் மூன்று நாள் இல்லாவிட்டால் அவளின் பாடு திண்டாட்டம் தான் என்பது இப்போதே புரிந்தது.
அதே நேரம் அவள் அருகில் வந்த பாண்டி...
"பத்திரமா இரும்மா. அத்தை உன்னை நல்லா பாத்துப்பா. எதுனாலும் கேளு. கமலம் புள்ளையை நல்லா பாத்துக்க..."
என்றதும் தான் கமலத்தின் நெஞ்சு பகுதிக்குள் எரிமலை வெடித்தது. தான் பெற்ற பிள்ளையை பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. எங்கிருந்தோ வந்தவள் மேல் அக்கறையை பார் என மனது குமைந்தாலும் வெளிக்காட்டி கொள்ளாமல் சிரித்த முகத்தோடே அவனை வழியனுப்ப... பல்லவியோ அவர் வெளியேறுவதையே பார்த்து கொண்டு கலக்கமாக நின்றாள். பின் யாரிடமும் பேசாமல் பழையபடி அந்த மூலையில் போய் முடங்கி கொண்டாள்.
கணவனை வாசல் தாண்டி போய் வழி அனுப்பி விட்டு உள்ளே வந்த கமலமோ ஒரே பாய்ச்சலில் பல்லவி அருகில் வர... அவள் சுருண்டு அந்த மூலையில் கிடப்பதை கண்டதும் வெகுண்டெழுந்து ...
"மகாராணி சுருண்டு படுத்தாச்சா. எழும்பு டீ. சாப்பிடுறது தூங்குறதுணு இருந்தா வீடு விளங்கிடும்." .
என அவள் கையை தரதரவென இழுத்து கொண்டு பின்புறம் வந்தவள் வேலைகள் ஒவ்வொன்றாக அடுக்க தொடங்க... இரவு 9 மணி வரை அது நீண்டு கொண்டே போனது.
கடைசியில் எல்லாம் முடிந்து சாப்பிட உட்கார்ந்த போது...
"வடிச்ச சாப்பாடு தீர்ந்து போச்சு. இனி எல்லாம் நாளைக்கு தான். போய் ஒரு கப் தண்ணியை குடிச்சிட்டு படுத்துக்க..."
என கமலம் விரட்டி அடித்த போது அந்த சின்ன பெண் நொந்து நூலாகி தான் போனாள். ஆனாலும் தன் ஆதங்கத்தை காட்ட முடியுமா? வலியோடு வந்து மூலையில் சுருண்டு கொண்டாள். என்றாலும் அவளால் அழுகையை கட்டுபடுத்த முடியவில்லை. தன் கட்டுபாட்டை மீறி கண்கள் நீரை வடிய விட்டது. ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் குலுங்கி குலுங்கி அழுதாள்.
தாயின் நியாபகம் வந்தது.
"ஒரு பிடிடா... இந்த ஒரு பிடியும்..."
என தாய் அவளை கெஞ்சி கெஞ்சி சாப்பிட வைத்தது திரும்ப திரும்ப நெஞ்சில் வர வெடித்து அழுது விட்டாள் பல்லவி. பல்லவியின் அழுகை குரல் கேட்டு உள்ளே வந்த செழியன்.
அவள் அருகில் வந்து" ஏன்? " என்று கேட்க...
"ஒண்ணுமில்லை..." என்றாளே தவிர வேறு எதுவும் பேசவில்லை. ஆனால் அழுகையை மட்டும் அடக்க முடியவில்லை . கேட்டு கேட்டு பார்த்து ஒய்ந்தவன். ஒரு கட்டத்தில் எழும்பி வெளியேற தாங்க மாட்டாமல் குலுங்கி குலுங்கி அழுதாள் பல்லவி.
மறுநாள் காலையிலே, கமலத்தின் ஆட்டம் தொடங்கி விட்டது. காலை சமையலை செய்ய வைத்ததிலிருந்து மதியம் மீன் கறி வைக்க வரை சொல்லி விட்டு அவள் சென்று விட பல்லவி மிக கஷ்டப்பட்டு காலை சமையலை சமைத்து முடித்து விட்டாள். ஆனால் மீன் குழம்பு எப்படி வைப்பது என அவளுக்கு தெரியவில்லை.
அதிலும் பக்கத்து வீட்டு பாட்டி வாங்கி கொடுத்த மீனை சிறுசிறு துண்டாக்கவே அவளுக்கு தெரியவில்லை. மீன் அறுக்கும் அரிவாள்மணையை எடுத்து வைத்து கொண்டு மீனை கிளீன் பண்ண ஆரம்பித்தவள். அதை சிறு துண்டாக்க முயன்ற போக தவறுதலாக கையை வெட்டி கொள்ள... விரலில் இருந்து இரத்தம் குப்பென வடிய அழுகையில் அவள் கண்ணும் கண்ணீரை வடித்தது.
சிறிது நேரம் கையை உதறி உதறி... மறுபடியும் வேலை செய்ய முயல... ரத்தம் குபுகுபுவென வடிந்தது.
அதே நேரம் உள் வந்த பாட்டி பல்லவியின் நிலை பார்த்து பரிதாபம் கொண்டு...
"அந்த படுபாவி உனட்டயா இந்த வேலையை எல்லாம் செய்ய சொன்னா?... அவளுக்கு செய்தா என்னவாம்."
" காட்டு. கையில ஆழமா பட்டிடுச்சா?..."
என்றவாறு ஒடி வந்து பல்லவியின் விரலை அழுத்தி பிடிக்க... வலியில் அவளும் குரல் எடுத்து அழுதாள். அவளை சமாதானப்படுத்திய பாட்டி... பழைய துணி ஒன்றால் கட்டு போட ரத்தம் கசிவது நின்றது. பாட்டியை பரிதாபமாக பார்த்தாள்.
"நீ இதுல உட்காரு..."
என அவளை அமர வைத்து விட்டு மீனை கழுவி அரைத்து மண் ஜட்டியில் எல்லாம் கலந்து வைத்து விட்டு...
"என் மருமகா வந்துட்டா. வேற வினையே வேணாம் பாப்பா. உன் அத்தைக்கு கொஞ்சமும் குறைவில்லாதவங்க தான் என் மருமகளும். வாயை திறந்தா மூடவே மாட்டா. இனி அடுப்பு வச்சி இறக்கிடுவால ..."
என்றதும் சரி என பல்லவி தலையாட்ட... பாட்டி மெதுவாக அவள் தலையை கோரி கொண்டு...
"எல்லாம் உன் நேரம்ப்பா. ஆமா படிக்கிறியாமே என்ன படிக்கிறா?"
"இப்போ பத்தாவது படிக்கிறேன் பாட்டி."
"நீ... நீ நல்லா படிப்பியாமே. என் பேத்தி சொன்னா. படிச்சி ஒரு வேலை எடுத்துட்டு எப்படியாவது இந்த சண்டாளிட்ட இருந்து ஒடி தப்பிச்சிடு"
என்றவாறு அவள் கிளம்ப...
கொஞ்ச நேரம் அப்படியே இருந்த பல்லவி.
"இனி கொஞ்ச நேரத்துல அத்தை சாப்பிட வந்திடுவாங்க. வேலையை முடிச்சி வைக்கல அடி சாத்திடுவாங்க. அவங்களுட்ட அடி வாங்குறதுக்கு பேசாம போய் வேலையை பார்ப்போம்."
எண்ணியவள் மெல்ல எழுந்து பாட்டி மண்ஜட்டியில் ரெடி பண்ணி வைத்திருந்த மீன் குழம்பை தூக்கி கொண்டு வெளி அடுப்புக்கு வர முயன்றாள். விரலில் பட்ட காயத்தால் அவளால் ஒழுங்காக மண்சட்டியை பிடிக்க முடியவில்லை. மிக சிரமப்பட்டு தூக்கி வந்தவள். வெளிபுறம் வரும் போது தவறி விழுந்து விட மொத்த குழம்பும் கொட்டி சட்டியும் உடைந்து விட்டது. பயத்தின் எல்லைக்கே சென்று பதறிக் கொண்டு நின்ற நேரம் சரியாக உள்ளே வந்த கமலம் பல்லவியையும் அவள் உடைத்த மண்சட்டியையும் பார்த்து வெகுண்டெழுந்து ஒடி அருகில் வந்தவள்.
தன் கோபம் ஆத்திரம் வெறி அத்தனையும் ஒன்று திரட்டி அடுப்பில் பற்ற வைத்திருந்த கொள்ளி கட்டையை எடுத்து அவள் காலில் சூடு வைக்க அலறியே விட்டாள் பல்லவி.
"எவன் அப்பன் வீட்டு சொத்துணு தூக்கி போட்டு உடைச்சிருக்கா. அவன் அவன் வெயில்லயும் மழையிலையும் முதுகு ஒடுஞ்சி . செத்து வாங்கி கொண்டு வச்சா. மூணு நேரம் விக்காம சாப்பிட்டு என் புழைப்புல வாழுற நீ, கொஞ்சம் கூட கூசாம உடைச்சி வச்சிருக்கிறியே... உனக்கு எம்புட்டு திமிர் இருக்கும்."
கமலத்தின் ஒட்டைவாய் மூடாமல் வார்த்தையை கொட்ட துடிதுடித்து தான் போனாள் பல்லவி. ஒரு பக்கம் காலின் எரிச்சல். மறுபக்கம் மனதின் வலி. இரண்டையும் தாங்க முடியாமல் ஓடி போய் மூலையில் முடங்கி கொண்டு கதறி அழ... பாவம் அந்த பாவப்பட்ட ஜீவனின் கண்ணீரை துடைக்க தான் இவள் குரல் யாரின் செவிப்பறையையும் அண்டவில்லையே.
காலில் நேரம் ஆக ஆக... எரிச்சல் அதிகமாகி கொண்டே போனது. இதை அவளுக்கு பரிசளித்த கமலமோ இரக்கமே இல்லாமல் கிளம்பி விட... பல்லவியோ அழுது துடித்தாள். கண்ணில் இருந்து கண்ணீர் ஆறாக பாய்ந்தது. குரல் எடுத்து அழுதாள். வலியை அவளால் பொறுக்க முடியவில்லை.
அதே நேரம் தன் TVS இல் சிவன் கோவில் தாண்டி வந்து கொண்டிருந்த சங்கிலி நேரே கடைக்கு தான் வண்டியை விட்டான். கையில் இருந்த மொத்த காசையும் வங்கியில் டெப்பாசிட் பண்ணி விட்டு தான் வந்து கொண்டிருந்தான்.
அவன் கடையை எட்டும் போது அங்கே ரவி நிற்பது அவன் கண்களுக்கு தெரிய...
"என்னடா அதிசயமா கடை பக்கம் எல்லாம் வந்திருக்கா?."
"சைக்கிள் வாடகைக்கு வேணும் சங்கிலி..."
"உனக்கா.?.. உனக்கு ஒட்ட தெரியுமா?"
"தெரியும். ஒரு மணி நேரம் போதும்..."
"இரண்டு ரூபாய் பரவாயில்லயா ?.."
"அப்பா வந்ததும் வாங்கி கொடுக்கட்டுமா?"
"இதுதானே வேணாங்கிறது. இந்த சங்கிலி எவன்ட்டயும் போய் கை நீட்டி நிற்கவும் மாட்டான். எவனுக்கும் கடன் கொடுக்கவும் மாட்டான் தெரியும் தானே. அப்படியும் கடன் சொல்லுறியனா உனக்கு எம்புட்டு திமிர் இருக்கும்."
"இல்ல சங்கிலி முக்கியமான விசயமா போஸ்ட் ஆபீஸ் வரை போகணும்."
"போஸ்ட் ஆபீஸ்க்கா... அங்க எதுக்கு?..."
"அப்பாட்ட உடனே பேசியாகணும்."
"அப்பாட்டயா. ஊருக்கு போன அப்பாட்ட உடனே பேசுற அளவு அப்படி முக்கியமான விசயம் என்ன?..."
"பல்லவி... பல்லவிக்கு ...
ரவி பல்லவியின் பெயரை சொல்ல சட்டென திரும்பியவன்.
"பல்லவிக்கு!..."
"அம்மா சூடு வச்சிட்டாங்க சங்கிலி. அந்த புள்ள வலி தாங்காம துடிக்கிது. பார்க்க முடியல. எனக்கு என்ன பண்ணனே தெரியல. அதான் அப்பாட்ட சொல்லலாம்ணு ."
சூடு என்றதுமே துள்ளி எழுந்தவன்.
"என்னடா சொல்லுறா?..."
"ஆமா சங்கிலி. அந்த புள்ள என்ன தப்பு பண்ணுச்சுணு தெரியல. நான் விளையாடிட்டு வீட்டுக்குள்ள போகும் போது அம்மா கொள்ளி கட்டையோட நின்னதையும் அந்த பொண்ணு கதறி அழுதுட்டு உள்ளே ஒடி வந்ததையும் பார்த்தேன். எனக்கு மனசே கேட்கல. அம்மாட்ட பேசி எந்த பிரயோஜனமும் இல்லணு தெரியும். ஆனா அந்த புள்ள துடிக்கிறதை பார்த்துட்டு நிக்க முடியல. அதான் ஒடி வந்தேன்."
என்றதும் சங்கிலி துள்ளி TVS -ல் ஏறி விட்டான். நேரே அசுர வேகத்தில் வந்தது வைத்தியரின் வீட்டிற்கு தான்.
வந்தவன் நேரே அவர் காலில் விழுந்து விட்டான்.
"என்னப்பா இது. எழும்பு எதுக்கு இப்போ என் காலுல விழுறா?".
"கையில ஒத்த துட்டு இல்ல. எல்லாத்தையும் இப்ப தான் பேங்க்ல்ல போட்டுட்டு வந்தேன்".
அதான் எனக்கு தெரியுமேப்பா. உனக்கு இரண்டு ஆசை. ஒண்ணு சொந்தமா நிலம் வாங்கி வீடு வைக்கணும். இரண்டாவது நம்ம ஊருக்கு ஒரு மினிபஸ் வாங்கி ஓட்டணும். அதுக்காக தானே குருவி சேக்கிறது போல சேர்கிறா?...நல்ல விசயம் தானேப்பா. இப்போ என் கால்ல விழுந்ததுக்கும் நீ பணம் சேர்க்கிறதுக்கும் என்ன சம்மந்தம்."
"எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணுக்கு தவறுதலா தீ காயம் பட்டுடுச்சி. வலி பொறுக்க முடியாம துடிக்கிறா . பெரிய மனசு பண்ணி எனக்கு மருந்து கொடுங்க. இன்றைக்கே ஏதாவது வேலை செய்து கொடுத்து உங்க கடனை அடைச்சிடுறேன்."
"இதுக்கு ஏண்டா அழுறா?.. மருந்து தானே. நானே தரேன். நீ போய் அவங்க வலியை குறை. பணம் தானே பதமா கொண்டு வந்து தா ."
என்றவர் உள் சென்ற அதே வேகத்தில் திரும்பி வந்தார். அவர் கையில் ஒரு பாட்டில் இருந்தது.
" இதை கையால தொட்டு தீ காயம்பட்ட இடத்துல பூசுனா போதும்ப்பா. கொஞ்ச நேரத்துல வலி மட்டுபடும். அப்புறம் இந்த மருந்தை விடாம மூணு நேரம் மேல பூசச் சொல்லு. காயம் முழுசா குணமாகிற வரை பூசணும்."
"சரிங்கைய்யா... ரொம்ப நன்றி."
இப்போதும் சங்கிலியின் கண்கள் கலங்கியிருப்பதை வினோதமாக தான் பார்த்து நின்றார் வைத்தியர். ஆனால் மருந்து கைக்கு கிடைத்த மறுநொடி அவன் அங்கு இல்லை. கிளம்பியிருந்தான். அசுர வேகத்தில் தான் அவன் பயணம் இருந்தது. நேரே யாரையும் பார்க்கவில்லை. பாண்டியின் குடிசைவீட்டிற்கு வந்து விட்டான்.
யாரிடமும் அனுமதியும் கேட்கவில்லை. உள்ளே புகுந்து விட்டான். இப்போதும் பல்லவியின் குரல் எடுத்து அழும் சத்தம் கேட்டு கொண்டே தான் இருந்தது.
அவன் சத்தம் வந்த திசைக்கு ஓடியவன் அவள் கதறும் நிலையை பார்க்க சகிக்காமல் அவள் அருகில் போய் அமர...
வெடுக்கென எழுந்தவள் பயத்தில் அழுவதை நிறுத்தி கொண்டு மூலையில் ஒடுங்க...
இப்போது சங்கிலியின் கண்ணில் இருந்து கண்ணீர் ஆறாக பாய்ந்தது. அவன் கண்களில் கண்ணீரை கண்டதும் ஏனோ அவள் வலி மறந்து "இவன் ஏன் அழுகிறான்?." என தான் நினைக்கத் தோன்றியது.
என்றாலும் வழிந்த கண்ணீரோடு அவள் அவனையே பார்க்க அவனோ பாதம் வரை மூடி வைத்திருந்த அவள் பாவாடையை விலக்க... துடித்து அவள் தடுக்க முயன்றாள். அவளின் கரத்தை மெல்ல விலக்கியவன்.
அவள் கரத்தில் விழுந்த அவன் கண்ணீரை பார்த்து கொண்டே, மெல்ல அவனில் இருந்த தன் கையை விலக்க...
பாவாடையை நீக்கி தீ காயத்தை பார்த்தவன் தாங்க முடியாமல் விம்மி கொண்டே வைத்தியர் கொடுத்த மருந்தை பூசத் தொடங்கினாள்.
"என்ன மாயஜாலமோ போட்டவுடன் கொடுமையாய் வலித்த வலி சிறிது நேரத்திலே மட்டுபட..."
தன் கையில் இருந்த மற்றொரு பாட்டிலை அவள் கையில் வைத்தவன். "அரை மணி நேரம் கழித்து இதை பூசு. சரியாகி விடும். காயம் ஆறுகிறவரை விடாம பூசணும் சரியா?..."
என்றதற்கும் எதுவும் பேசாமல் இருக்க... விழி நீரை துடைத்தவன்.
"படுத்துக்க. நாளைக்கு காலையில மாமா ஊருக்கு வந்திடுவாரு. இனிமேல் இப்படி நடக்காம நான் பாத்துக்கிறேன்."
சொன்னவன் ஒரு முறை அவள் முகத்தை ஆழமாக பார்த்து விட்டு அந்த இடம் விட்டு நகர...
அதிர்வில் உறைந்து அப்படியே அமர்ந்திருந்தாள். அவனை கண்டாலே பிடிக்காது தான். ஆனால் இன்று அவளுக்கு அவன் தாயாக தெரிந்தான். சட்டென எழுந்தவள் விந்தி விந்தி வெளியே வந்தாள். போகும் அவன் பின் முதுகை துளைத்தவாறே நின்றாள்.
முன்னால் சென்ற சங்கிலி ரொம்பவே தயங்கி தயங்கி... போகவே விரும்பாதவன் போல அவளை திரும்பி திருப்பி பார்த்து கொண்டே தான் கிளம்பினான். அவன் போய் பல மணி நேரம் அவள் அவன் போன திசையையே முறைத்து கொண்டு நின்றிருந்தாள்.
மறுநாள் அவன் சொன்னது போல மாமா வந்து விட்டார். கைநிறைய தின்பண்டங்களோடு தான் வந்தார். யாரும் அவரிடம் நடந்தவற்றை சொல்லவில்லை என்பது அவரின் சிரித்த முகத்திலே தெரிந்தது.
என்னவோ அன்று கமலம் பயந்து கொண்டு தான் இருந்தாள். காரணம் இவள் அவரிடம் சொல்ல மாட்டாள் என்ற தைரியத்தில் தான் செய்து விட்டான். ஆனால் விசயம் சங்கிலி வரை போய் அவன் வந்து மிரட்டி விட்டு சென்றதிலிருந்து உதறல் தான் எடுத்தது. மகன் வீட்டிற்குள் நுழைந்ததுமே வறுத்தெடுத்து விட்டாள்.
ஆனால் சங்கிலி கணவரிடம் மாட்டி விட்டால் வினையே வேணாம். மனிதர் காலில் சலங்கை கட்டி கொண்டு தான் ஆடுவார். அப்போதாவது கூட்டி வந்து விட்டோமே என்ற பச்சாதாபம் தான் இருந்தது. ஆனால் இந்த மூன்று வருடத்தில் பல்லவி மேல் அவர் உயிரையே வைத்திருக்கிறார். இந்த நேரம் நான் சூடு வைத்தது தெரிந்தால்...
எண்ணமே பேயாக பயமுறுத்த...
குட்டிப்போட்ட பூனை போல்தான் வெளிப்புறத்தில் குமைந்து கொண்டிருந்தாள். அதே நேரம் திண்ணையில் பாண்டியோடு குழந்தைகள் குதூகலமாய் இருந்தனர். பல்லவி சுவரோடு சுவராக சாய்ந்து நின்று கொண்டிருந்தாள். தங்களை விட்டு ஒதுங்கி நின்ற பல்லவியை பார்த்த பாண்டி ...
"என்னம்மா முகம் எல்லாம் ஒரு மாதிரி இருக்கு..."
நெருங்கி வந்து கேட்ட பாண்டியை விழி உயர்த்தி பார்த்த பல்லவி ஒருவித திணறலோடே ...
" இல்ல மாமா. நைட் நிறைய நேரம் தூங்காம படிச்சேனா அதான் அப்படியிருக்கும்னு நினைக்கிறேன்."
"எதுக்குடா கண் விழிச்சி படிக்கிறா . இப்பவே நீ ஸ்கூல் பஸ்ட்ல்ல தான் வரா. அதுலயும் ஒண்ணோ இரண்டோ மார்க் தான் குறையுது. எப்படியும் ஸ்டேட் லெவல் வந்திடுவானு உங்க ஸ்கூல்லே எதிர்பாத்துட்டு இருக்கு. அதுல வேற உங்க HM என்னை கூப்பிட்டனுப்பி அவ்வளவு நம்பிக்கையா சொல்லுறாரு. அப்புறம் ஏம்மா..."
" அவங்க நம்பிக்கையை காப்பாத்தணம் இல்லயா மாமா..."
"நிச்சயமாடா. உன்னோட மார்க்கை தானே ஸ்கூல்லே எதிர்பார்க்குது. இந்த வருடம் இந்த சின்ன ஊரை உலகமே திரும்பி பார்க்கிற அளவு கொண்டு வந்திடுவானு பெருமையா சொன்னப்ப என் மனசு எவ்வளவு சந்தோஷப்பட்டு தெரியுமா? நீ சொன்னதை காப்பாத்திருவாணு நம்பிக்கை வந்திடுச்சிம்மா. சரி டெஸ்ட் என்று தொடங்குது."
"வருகிற வெனஸ்டே மாமா.."
" நல்லா படி. மாமா எது செய்யனாலும் செய்வேன்."
"கண்டிப்பா மாமா..."
"சரி. லோடு இறக்கிட்டு அப்படியே வந்துட்டேன். சம்பளத்தை போய் வாங்கிட்டு வந்திடுறேன்."
என்றவாறு பாண்டி வெளியேற, பல்லவி உள்ளே போய் அமர்ந்து கொண்டாள்.
விசயம் இன்னும் கணவருக்கு தெரியவில்லை என்பதே நிம்மதியை தர வீட்டினுள் கமலம் வந்த போது வெளியில் சங்கிலியின் குரல் கேட்க பதறியடித்து கொண்டு முன் வாசலுக்கு வந்தாள்.
அவனை கண்டதும் பதட்டமாக ...
" என்ன அக்கா... அண்ணாத்த வந்துட்டாப்புல தெரியுது... ஒரு முறை பார்த்துட்டு போலாம்ணு தான் வந்தேன்."
அவன் பொடி வைத்து பேச சர்வமும் கலங்கி போனது கமலத்திற்கு ...
"சங்கிலி..."
"என்னக்கா பயமாயிருக்கா? அந்த பொண்ணை ஈவு இரக்கம் இல்லாம அப்படி பண்ணும் போது பயமாயில்லையா? நீங்களும் ஒரு பொண்ணை வச்சிட்டு தானே இருக்கீங்க. அவளை இப்படி தான் பண்ணுவீங்களா? உங்க பொண்ணுக்கு பட்டா வலி அதுவே ஊரான் பொண்ணுக்கு பட்டா மட்டும் எதுவும் இல்லைல..".
"சாரிடா... கோபத்துல பண்ணிட்டேன். இதுக்க மேல அப்படி எதுவும் பண்ணவே மாட்டேண்டா. நேற்று அவ்வளவு சொன்னேனே அப்படியும் வந்திருக்கா."
" ம்... சொன்னீங்கதான். ஆனாலும் மாற்றம் தெரியுதானு பார்க்க வேணாம்."
"மாறிட்டேண்டா. இனிமேல் எதுவும் பண்ண மாட்டேன். இந்த ஒரு முறை விட்டுடு. அவர்ட்ட எதையும் சொல்லிடாத."
"அந்த நம்பிக்கையில தான் போறேன். குளத்துல மீன் பிடிச்சி விற்க கொண்டு வந்தேன். அதான் உங்களுக்கும் இரண்டு கொடுத்துட்டு போலாம்ணு வந்தேன். அண்ணாத்தைக்கு குழம்பு வச்சி கொடுங்க. அந்த பொண்ணையும் ஒழுங்கா பாத்துக்கோங்க."
"சரிடா . நில்லு காசு கொண்டு வரேன்."
என திரும்ப சென்ற கமலத்தை தடுத்து நிறுத்தியவன்.
"இதுக்கு காசு வேணாம். உங்களோட மீனை சிந்திட்டதால தானே அந்த பொண்ணை தண்டிச்சீங்க. அதுக்கு பதிலா இதை வச்சிக்கோங்க. இனிமேல் அந்த புள்ளையை மட்டும் எதுவும் செய்திடாதுங்க. அப்படி மட்டும் எதாவது செஞ்சீங்கணு அறிஞ்சேன். உங்களை சும்மா விட மாட்டேன்."
எச்சரித்து விட்டு கழுத்து சங்கிலியை ஸ்டைலாக ஆட்டி விட்டு திரும்பி நடந்த சங்கிலியின் பின் முதுகை பார்த்து பேய் அறைந்தது போல மிரட்சியோடு நின்றிருந்தாள் கமலம். "அவளுக்கு கேட்க யாருமில்லணு ஆட்டம் போட்டா புதுசா என்ன இவன். அதுல வேற அதிசயமா மீனுக்கு காசு வாங்காம போறான். இவன் அப்படி போற ஆளே இல்லையே..".
"ஒரு வேளை!... ஒரு வேளை!..".
"இருக்கும். இருக்கும். அனாதையும் அனாதையும் சேர்ந்தா சரியா தான் இருக்கும். இதை வச்சே சங்கிலிட்ட ரொம்ப கறக்கலாம் போல தெரியுதே. கமலத்தினுள் வேறு ஒன்று பூதாகரமாய் தோன்ற நமட்டு சிரிப்போடு அந்த பெரிய மீனை தூக்கி கொண்டு உள்ளே போனாள்."
இது நடந்து பல நாள் சென்ற பிறகும் கூட பல்லவி வழியில் சங்கிலியை கண்டால் பேசுவதும் இல்லை. ஒரு பேச்சுக்கு கூட நன்றி செல்லவும் இல்லை. ஆரம்பத்தில் இருந்தது போலவே கண்டும் காணாதவன் போல தான் போனாள். ஆனால் அந்த முகம் சுழிப்போ வெடுக்கென திரும்பிக் கொள்வதோ இல்லை.
அன்று அவளுக்கு பத்தாம் வகுப்பு ரெசல்ட். ஊரே காவல் இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். அது சின்ன ஊர் என்பதால் அதிலும் இதுவரை இப்படி ஒரு எதிர்ப்பார்ப்பு கொள்ளும் அளவு எந்த மாணவனும் அமைந்ததில்லை என்பதால் முழு ஸ்கூலுமே காத்திருந்தது. சங்கிலியும் காத்திருந்தான்.
பல்லவிக்குள் உள்ளுக்குள்ளே உதறல் எடுத்து கொண்டு தான் இருந்தது. நன்றாக தான் தேர்வு எழுதினாள். ஆனால் எல்லாரும் திரும்ப திரும்ப கேட்பதும் அவளின் ரெசல்ட்டுக்காக காத்திருப்பதும் அவளுக்குள் பயத்தை தான் கொடுத்தது.
அவள் பயம் தேவையற்றது என்பது போல அவளுக்கு நல்ல மதிப்பெண் தான் கிடைத்திருந்தது. அதிலும் மாநில அளவில் இரண்டாவது இடமும் மாவட்ட அளவில் முதல் இடமும் கிடைக்க...
ஊரே விழாக்கோலம் பூண்டது. பாராட்டு விழாக்களும் பரிசுகளும் கூட கிடைத்தது.
சங்கிலி முகம் மலர ஸ்வீட் பாக்கெட்டோடு அவள் வீட்டிற்கு வந்தான். கமலம் தவிர வேறு ஒருவருமில்லை. அனைவரும் ஸ்கூல் பங்ஷனுக்கு போய் விட்டு வரவில்லை என கமலம் சொன்னதும்...
"இந்தாருங்கக்கா... பக்கத்துல எல்லாருக்கும் கொடுங்க."
என முட்டாய் பாக்கெட்டை நீட்ட..
"என்னடா காசை தண்ணியா செலவு பண்ணுறா?... நீ அப்படியான ஆள் இல்லயே. அப்போ எல்லாம் ஒத்த காசை செலவு பண்ண ஒராயிரம் முறை யோசிப்பா. இப்போ என்னவாம். அன்று என்னணா முழு மீனையே சும்மா கொடுத்துட்டு போறா. இன்று அவா பாஸானதுக்கு ஊருக்கே ஸ்சுவீட் கொடுக்க சொல்லுறா?. ஆமா உங்களுக்குள்ள அப்படி என்ன இருக்கு."
கமலம் கண்ணடித்து கேட்க...
"சும்மா இருங்கக்கா. நீங்க வேற..."
அவன் நெளிய...
"தெரியும்டா எனக்கு. உனக்கு அந்த புள்ளை மேல ஒரு இது. அதுனால தான் அவானா நீ துடிச்சி போறா?... சரிதானே. நான் சொல்லுறது சரிதானேடா?.."
"இல்லக்கா. அப்படி எல்லாம் இல்ல..."
"எனக்கு தெரியாது. உன் முகமே சொல்லுதே. தப்பில்லை. அவா உனக்கு சரியான ஜோடி தான். நடத்து... அக்கா கண்டிப்பா உன் பக்கம் தான்."
"சும்மா இருக்கா. என் மனசுல எல்லாம் அப்படி ஒரு எண்ணமே இல்ல..."
" பாத்தா அப்படி தெரியலியே. அவளுக்கு ஒண்ணுணா தீயா நிக்குறா?... எனட்டயே எதிர்த்துட்டு நின்னவன் தானே. எனக்கு அப்பவே தெரியும். ஆனாலும் காட்டிக்கல. அவளுக்கும் உன் மேல ஒரு இதுணு தான் நினைக்கிறேன்."
கமலம் இப்படி சொன்னதும் சட்டென சங்கிலியின் தலை நிமிர... கண்கள் வியப்பில் பளபளத்தன.
" நிஜமாக்கா!..."
"எனக்கு அப்படி தான் தோணுது. உன் பெயர் சொன்னாலே அவள் முகத்துலயும் ஏதோ ஒரு ஒளி தெரிஞ்சது போல தான் தெரியுது. நீ வேணா பேசிப்பாரேன் ."
"எங்கக்கா. கிட்ட போனாலே தூரமா ஒடுறா?."
"பொண்ணுங்கணா அப்படிதாண்டா இருப்பாங்க. நீங்க தான் பதமா பிடிச்சி உள்ளால வச்சிக்கணும். புடிச்சிருந்தாலும் ஆரம்பத்துல பிகு தான் பண்ணுவாங்க. நீங்க தான் தாஜா பண்ணணும். அப்பதான் இறங்கி வருவாங்க."
"அப்படினா பேசலாங்கிறீங்களா?"
"அப்புறம் இவ்வளவு நேரமும் என்ன சொல்றேன். முயன்று பாரு சீக்கிரத்துல உன் மடியில விழுந்திடுவா."
"நான்!... நான் அவளுக்கு தகுதியானவனாக்கா? ."
" உனக்கு என்னடா குறை. கைநிறைய சம்பாதிக்கிறா?... அவளுக்கு ஒண்ணுனா துடிச்சி போறா. இதை விட வேற என்ன தகுதி வேணும். நீ கிடைக்க அவா தான் கொடுத்து வச்சிருக்கணும். நீயே சொல்லு உன்னை விட அவளை வேற யார் நல்லா பாத்துக்கு வா... சொல்லு"
என்றதும் சங்கிலி மூளை சுறுசுறுப்பாக முகம் லேசாக பொலிவு பெற ஆரம்பித்தது. கூடவே...
"ஆமாக்கா அவளை என் உள்ளங்கையில வச்சி தாங்கிப்பேன்."
"அப்புறம் என்னடா... இன்றே போய் உன் மனசை சொல்லு. உனக்கு நான் துணையா இருக்கேன்."
"தேங்க்ஸ்க்கா..."
என்றவாறே சங்கிலி அங்கிருந்து விலக... அவன் உதடு மென்மையாக விரிந்தது. அதே நேரம் போகும் சங்கிலியின் பின் முதுகை துளைத்தவாறு நின்று கொண்டிருந்த கமலத்தின் உதடோ மர்மமாய் விரிந்தது.
" எப்படியும் இன்னும் இரண்டு வருஷத்துல எதையாவது சொல்லி மனசுல ஆசையை வரவச்சி ஊரை விட்டே ஒடவச்சிடனும். இல்லனா இந்த மனுஷர் படிக்க வைக்கிறேன் என்ற பெயரல்ல மொத்த காசையும் கரியாக்கிடுவாரு.'
என கமலம் உள்ளுக்குள் கொடூரமாய் யோசித்திருப்பது தெரியாமல் சங்கிலி ஏதோ ஒரு மாய உலகில் நுழைய ஆயத்தமானான்.
அத்தியாயம் தொடரும்...