மௌனம் பேசியதே
அத்தியாயம் - 9
முதல் நாள் பல்லவியை மனைவி ஏற்று கொள்ளவில்லை என எந்த மரத்தடியில் அழுது கொண்டிருந்தாரோ அதே மரத்தடியில் தான் இன்றும் பாண்டி இருந்தார். ஆனால் இன்று தூரத்தில் வரும் சங்கிலியை பார்த்து கொண்டே தான் இருந்தார்.
அவனை பார்க்க கூச்சமாக தான் இருந்தது. காரணம் அன்று அவனை வாய்க்கு வந்த படி பேசிவிட்டார் தான். பாதுகாப்பாய் இருப்பான் என நினைத்தவனே அப்படி நடந்து கொண்டான் என்ற போது கொதித்து விட்டது உண்மை தான்.
ஆனால் அதன் பின் முற்றிலுமாக பல்லவியின் பாதையில் இருந்து விலகி விட்டது தெரிந்ததும் நன்றி சொல்ல போன போதும், சங்கிலி பெரிதாக பேசவில்லை. பாராட்டு விழாவிற்கு அழைத்த பிறகும் வரவில்லை. ஏன் இடையில் கூட ஒரு நாள் வீட்டு பக்கம் வரவில்லை. அவனின் கோபம் புரிந்தாலும் அவரும் அவனை தேடி செல்லவில்லை.
அப்படியிருக்க இந்த சூழலில் தன்னை நாடி வரும் அவனை ஆச்சரியமாக பார்த்தார். பக்கத்தில் வந்த சங்கிலி.
"இந்தாங்க..."
என ஒரு பையை நீட்ட...
"என்ன?..." என்பது போல பாண்டி விழி உயர்த்தி பார்த்தார்.
"நீங்க எந்த பணத்துக்காக ஒரு மாதமா தெருதெருவா அலைகிறீங்களோ அந்த பணம்."
"பணமா?..."
"ம்... பல்லவி டாக்டர் படிக்க தேவையான மொத்த பணமும் இதுல இருக்கு. எடுத்துக்குங்க. எடுத்துட்டு போய் அவளை படிக்கவைங்க."
எங்கோ பார்த்தவாறே சொன்ன சங்கிலியை ஆழமாக பார்த்தார் பாண்டி. அவன் நேருக்கு நேர் பேச முடியாமல் தவிப்பதை உணர்ந்தவர். அவன் மேல் வைத்த கண்ணை எடுக்காமல் அப்படியே நெகிழ்வோடு அமர்ந்திருந்தார். ஆனால் அந்த பணத்தை அவர் தொடவில்லை. ஒரு மாதமாய் அவர் ஏறி இறங்காத பணக்காரர்கள் வீடுகளே இல்லை. ஆனால் அவரில் எவருக்கும் தோன்றாத ஒரு உன்னத உணர்வை மனசாட்சி இல்லாத மாங்கா ,கஞ்சன் என பலராலும் அடையாளப்படுத்தபட்ட சங்கிலியில் தெரிய, உண்மையில் உடைந்து விட்டார் பாண்டி.
மனமுவந்து அவன் தந்தாலும் வாங்கும் அளவு அவரில் தைரியம் இல்லை. கண்கள் கட்டி கொண்ட நீரை அவன் பார்த்து விட கூடாது என தலை குனிந்தாலும்.. அவர் மனம்படும் பாடு தெரியாமல் இல்லை.
"ஏன் நம்பிக்கையில்லயா?...இந்த அனாதைட்ட அப்படி எங்க பணம் இருக்கும்ணு நினைக்கிறீங்களா? இல்ல...திருடிட்டு வந்திருப்பேணு நினைக்கிறீங்களா?..."
என்றதும் நிமிர்ந்து அவனை பார்த்தவர் உதடோ... நீரை கன்னத்தில் வடிய விட்டவாறு,
"அது... இல்லடா. இது ஏது பணம்?".
"ம்... இது இந்த சங்கிலியோட பணம். இந்த அனாதை கஷ்டப்பட்டு இந்த இருபத்து ஒரு வயசு வரை சம்பாதிச்சு சேர்த்து வச்ச பணம். ஒத்த ரூபாய் செலவு செய்யாமல் கஞ்சன்னு பேர் எடுத்து பணப்பேய்ணு பெயர் எடுத்து சொந்த வீடு கட்டியே ஆகணும் என்கிற வெறியில சேர்த்த பணம்."
என்றதும் விழி அகலாமல் அவனை பார்த்த பாண்டி.
"இதை போய் நீ அவளுக்கு,"
"ஆசைப்பட்டேன் தான். சொந்த வீடு இல்லாம ஒவ்வொரு தெருவுலயும் ஒவ்வொரு வீட்டு திண்ணையில படுக்க போய் பாதி தூக்கத்துலயே தண்ணீர் ஊற்றி, ஓட வச்ச இந்த மக்கள் முன்னால நமக்குணு ஒரு வீடு வைக்க வேண்டும் என்கிற ஆசையில தான் சேர்த்தேன். ஆனா இப்போ என் ஆசையை விட அந்த புள்ளையோட புனிதமான ஆசை நிறைவேறணம்னு தோணுது."
" ...............".
"எனக்கென்ன?... ஒரு நாள் கோவில் மண்டபத்துலயும் ஒரு நாள் சைக்கிள் கடையிலயும் இப்போ படுக்கிறது போல படுத்துட்டு போறேன். நீங்க கொண்டு போய் அந்த புள்ளையை படிக்க வைங்க. அன்று அந்த மேடையில எவ்வளவு நம்பிக்கையோட பேசுச்சு. இந்த அளவு மார்க் எடுக்கிறது முடியவே முடியாதுணு தானே எல்லாரும் பேசினாங்க. அப்படியும் அந்த புள்ளை எடுத்திருக்குணா. நாம அவளோட உழைப்புக்கு மதிப்பு கொடுக்கணும் இல்லையா? மதிப்பு கொடுங்க அண்ணாச்சி. பணத்தால அவளோட நம்பிக்கை சிதைய வேணாம். புடிங்க...கொண்டு போய் அவா ஆசைபட்டது போல படிக்க வைங்க."
முகம் முழுதும் பிரகாசத்தோடு கையில் பணத்தை ஏந்தி நின்ற சங்கிலியை நெகிழ்வோடு பார்த்தார் பாண்டி. ஏனோ அவன் கையில் இருந்து உதவி வாங்க கூசியது. கூடவே தயக்கமாகவும் இருந்தது. அவனை நிமிர்ந்து பார்க்கவே கஷ்டமாக இருந்தது. ஆனால் அவரின் மௌனநிலையை பார்த்தவன் அவரை ஏக்கத்தோடு பார்க்க...
"இல்ல சங்கிலி. அப்போ உதவி செய்தா. அந்த நேரம் உன் மனசுல எதுவும் இல்ல. ஆனா இப்போ அப்படி இல்ல. ஏதோ ஒரு இடத்துல அந்த புள்ளை வேணும்னு நீ ஆசைப்பட்டுட்டா. இனி வாங்குனா சரியா இருக்காதுணு தோணுது."
"நான் அப்பவே அந்த எண்ணத்தை அழிச்சிட்டேன் அண்ணாச்சி. எப்போ அவளோட மனசுல நான் இல்லணு தெரிஞ்சிதோ அந்த நொடியே ஒதுங்கிட்டேன் தானே."
"ஒதுங்கிட்டா தான். ஆனா இந்த பணத்தை வாங்கி நானே தொடங்கி வைத்தது போல ஆகிட கூடாதுல, ..."
"அப்படி எந்த பயமும் உங்களுக்கு வேணாம். அவளை நான் என் மனசுல ஏத்தி வைக்கும் போது அவளும் அனாதை. நானும் அனாதை.. அவளும் நானும் ஒரே தகுதியில இருந்தோம். இப்போ அப்படி அல்ல. நான் படிப்பறிவே இல்லாத கரியில வாழ்க்கையை கழிக்க கூடிய சாதாரண கூலிகாரன். அவளோ வருங்காலத்துல பல பேரோட உசுரை காப்பாற்றி கரை சேர்க்க கூடிய டாக்டர். எனக்கு என் தகுதி தெரியும் அண்ணாச்சி. எந்த காரணம் கொண்டும் நான் அந்த புள்ளை பக்கம் வர மாட்டேன். இது சத்தியம். நீங்க என்னை முழுசா நம்பி இந்த பணத்தை எடுத்துட்டு போலாம்."
"அந்த பிள்ளைக்கு கூட நான் தான் பணம் தந்தேனு தெரிய வேணாம். நீங்களே வேற யாரோ தந்ததா சொல்லி படிக்க வைங்க. அவா படிக்கணும். அந்த மேடையில சொன்னது போல பல பேர் உயிரை காப்பாத்த கூடிய மதிப்பு மிக்க டாக்டரா திரும்பி வரணும். எனக்கு அவ்வளவு தான் வேணும்."
"அப்படினா நீ அந்த கூட்டத்துக்கு வந்திருந்தியா "
"ம்...ம்... வந்தேன். தூரமா இருந்து பார்த்தேன். அவா சொன்ன அத்தனையும் கேட்டேன். ரொம்ப சந்தோஷமா இருந்துச்சி. இந்த ஐந்து வருட வாழ்க்கையில அந்த புள்ளையோட குரலை கூட நான் அந்த மேடையில தான் கேட்டேன்."
"கண்ணுல ஆர்வம் மின்ன நம்பிக்கையோட பேசுன ஒவ்வொரு வரியும் இப்பவும் என் காதுல ஒலிச்சிட்டே இருக்கு. அவளோட அந்த நம்பிக்கை குலைஞ்சிட கூடாது அண்ணாச்சி. பாத்துக்கோங்க. அவளை நல்லா பாத்துக்கோங்க. இதுக்க மேல நான் அவளை பற்றி உங்களுட்ட பேசவே மாட்டேன்."
சொல்லிவிட்டு பாண்டியின் கையை பிடித்து பணத்தை வைத்தவன் விறுவிறுவென கிளம்பி இருக்க...
போகும் அவனை நெகிழ்ச்சியோடு பார்த்து நின்றார் பாண்டி. மறுநாளே வேலைகளை பம்பரமாக செய்ய தொடங்கினார். பல்லவியின் பள்ளி ஆசிரியரே அவர்களை கூட்டி சென்று எல்லா வேலையும் முன்னின்று பார்த்து முடித்தார். அவளுக்கு சென்னை காலேஜில் சீற் கிடைத்தது.
மிக சந்தோஷத்தோடு ஊருக்கு வந்தாள். பாண்டியை தவிர இந்த சந்தோஷத்தை அவளுக்கு கொடுத்தது சங்கிலி தான் என்ற உண்மை வேறு யாருக்கும் தெரியாது..
வீடே சந்தோஷத்தில் இருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் பல்லவி சென்றாக வேண்டும். அதுவரை பொண்ணை நன்றாக பார்த்து அனுப்ப வேண்டும் என கமலம் கவனித்து கொள்ள, அதன் பிறகு ஊரில் நின்ற ஒவ்வொரு நாளும் பல்லவி சந்தோஷமாக தான் இருந்தாள். அதிலும் பக்கத்து வீடு, எதிர்த்த வீடு என எல்லாரும் அவளை அழைத்து கொண்டு போய் உபசரித்தே அனுப்ப உச்சி குளிர்ந்து தான் போனாள்.
இன்னும் ஒரே நாள் தான் இருந்தது. மனது ஏனோ தவிப்பாக இருந்தது பல்லவிக்கு. அத்தையிடம் சொல்லி விட்டு கோவிலுக்கு சென்றாள். சிவன் கோவிலுக்கு சென்று பிராத்தனை முடித்து கொண்டு வெளி வந்தவள்.
சுற்றி சுற்றி பார்த்தாள். எங்கும் காணவில்லை. மெல்ல இறங்கி நடந்தாள். சைக்கிள் கடை பக்கத்தில் வந்தாள். கண்களை மேய விட்டாள். அங்கும் அவன் இல்லை. சோர்வோடு திரும்பிய நேரம் குளித்து விட்டு ஈர டவ்வலை உடலில் சுற்றியவாறு வந்து கொண்டிருந்தான் சங்கிலி.
அவனை கண்டதுமே அவள் முகம் சட்டென பிரகாசமானது. தூரத்தில் வரும் போதே சங்கிலியும் பார்த்து விட்டான். ஆனால் பார்க்காதவன் போல கவிழ்ந்து வந்து அவளை தாண்டி சென்ற போது,
"சங்கிலி!..."
என பல்லவியின் மென்குரல் அழைக்க... அதிர்ந்து போய் நின்றவன். நம்ப முடியாமல் சட்டென நிமிர்ந்து அவளை பார்க்க, அவன் பார்வையின் வீரியம் பாதிக்க, பெண்ணவளோ தலையை தாழ்த்தியவாறு ,
"கொஞ்சம் பேசணும்..."
என்றதும் சட்டென சங்கிலியின் முகம் வெளிச்சத்தை காட்ட... அடுத்த நொடியே இளகியோடும் மனதோடு அவளை நோக்கியவாறு,
"சொல்லுங்க..."
என்றவன் முகமோ பிரகாசத்தோடு மிளிர..."
"நாளைக்கு மெட்ராஸ் கிளம்புறேன்."
சொன்னவள் சட்டென நிமிர்ந்து அவன் முகம் பார்க்க முயல... முடியாமல் மறுபடியும் தலையை தாழ்த்தி கொண்டாள்.,
அவளின் பாராமுகத்தை பார்த்தவன். சுருதி குறைந்தவனாய்...
"நல்லதுங்க. நல்ல ஒரு வாய்ப்பு. கடவுளா உங்களுக்கு கொடுத்திருக்காரு. ஜெயிச்சி வெற்றியோட வாருங்க."
"தேங்க்ஸ்..."
"எதுக்கு?..."
"என்னை வாழ்த்துனதுக்கு."
"ம்...ம்...ம்"
"அப்போ நான் கிளம்பவா?"
" ம்...ம்...ம்...."
என்றதும் அவளை நிமிர்ந்து கூட பார்க்காமலே திரும்ப போனவனை,
"நில்லுங்க..."
என்றாள் மென்குரலில் அவசரகதியில். அவளின் குரலால் ஈர்க்கப்பட்டு திரும்பிய வேகத்தில் அப்படியே நின்றவன்.
"சொல்லுங்க... வேற எதுவும் பேசணுமா?"
"ம்.... எல்லாரும் நினைவு பரிசா எதுவெல்லாமோ கொடுத்தாங்க. நீங்க எதுவும் தரலியே..."
"நினைவு பரிசா?. அப்படி எனக்கு கொடுக்க கையில எதுவும் இல்லையே."
என்றவன் பதட்டமாக ...அவனை நிமிர்ந்து பார்த்தவள் ஆர்வமாக நிற்க... அவளின் ஆர்வத்தை பார்த்ததும்.
"இப்படி திடீர்ணு கேட்டா நான் எதை கொடுக்கிறது. நாளைக்கு வாங்கி கொடுக்கிறேன்."
"நாளைக்கு விடியற்காலையில நான் கிளம்பிடுவேன். இப்போ உங்களுட்ட இருக்கிற எதையாவது கொடுங்க போதும்."
முகத்தில் நளினத்தை படரவிட்டு அவள் கொடுத்த மறுமொழியில் குழம்பியவன், அவளுக்கு என்ன கொடுப்பது என குழம்பிய போது...
அவள் கண்கள் அவனில் அலை பாய்ந்து கொண்டிருந்தது. அவளின் பார்வையின் அர்த்தம் புரியாமல்,
ஒரு முறை தன்னை பார்த்தவன். இடையில் கட்டியிருந்த ஈர டவ்வலையும் கையில் இருந்த சோப் பாக்ஸையும் தோளில் கிடந்த துண்டையும் மறுபடியும் கூட ஒரு முறை பார்த்தவன்.
"உனக்கு தர இப்போ எனட்ட என்ன இருக்கு. எது வேணும்னாலும் கேளு. எனட்ட இருக்கும் பட்சத்துல கண்டிப்பா தரேன்."
என்றதும் புன்சிரிப்பை முகத்தில் தவளவிட்டவாறு, தன் ஆட்காட்டி விரலை நீட்ட... அந்த ஆள்காட்டி விரல் சுட்டிக் காட்டிய பொருளை பார்த்ததும் பலமாக அதிர்ந்தான் சங்கிலி.
"என் கழுத்துல உள்ள சங்கிலியையா கேட்கிறா?"
வியப்போடு கேட்டவனை விழி உயர்த்தி பார்க்க சங்கடப்பட்டு கொண்டு,
"ம்..ம்..." என்றாள் மென்குரலில்.
"அதை எப்படி?"
சங்கிலி தயங்கி நிற்க.
"சங்கிலியோட நியாபகமா சங்கிலியே இருக்கட்டும்னு தான் கேட்டேன். கொடுக்க விரும்பம் இல்லனா விடுங்க."
முகம் சுருங்கி சொன்ன பெண்ணவளை கலங்கும் விழியால் பார்த்தவன்.
"உனக்காக இத்தனை வருட ஆசையையே விட்டிருக்கேன். இந்த கழுத்து சங்கிலியை விட்டு கொடுக்க மாட்டேனா?"
மனதுக்குள் சொன்னவன். மொழிகளை அந்த இடத்தில் விடாமல், அவளை பார்த்தவாறே தன் கழுத்தில் கிடந்த சங்கிலியை கழற்ற... சங்கிலியின் கழுத்தில் கிடந்த அந்த வெள்ளி சங்கிலி அவள் கைக்குள் வந்த போது ஆர்வமாக பல்லவியின் தலை உயர்ந்து விழிகள் ஆர்வமாக அவள் கரத்தை பார்த்தது. இதுவரை விடாமல் அவன் கழுத்தில் ஸ்டைலாக ஆடிநின்ற சங்கிலி இப்போது அவனை போல அவள் முன் அடங்கி ஒடுங்கி அமைதியாக உள்ளங்கையில் தூங்கி கொண்டிருக்க, அதை தன் கை கொண்டு எடுத்தவள். நிமிர்ந்து அவன் முகம் பார்க்காமலே,
"அப்ப கிளம்புறேன். எப்படியும் இனி இந்த ஊருக்கு வர நாலு வருஷமாவது ஆகும். அதான் தெரிஞ்சவங்க எல்லாரையும் ஒரு முறை பார்த்திடலாம்ணு தோணுச்சு. எல்லாரையும் பாத்திட்டேன். உங்களையும் ஒரு முறை பார்த்திடுறது தானே சரி. ஆரம்பத்துல இருந்தே எனக்கு சில சில உதவிகள் பண்ணியவராச்சே. மறந்துட்டு போறது பாவம் இல்லயா?.. அதான் வந்தேன்".
"எனிவே நீங்க செஞ்ச எல்லா உதவிக்கும் தேங்க்ஸ். நான் கிளம்புறேன்.:
என்றவள் அவன் கொடுத்த சங்கிலியை ஒரு முறை பார்த்தவாறே திரும்பி நடந்தாள்.
நம்ப முடியா அதிர்வில் சங்கிலி அப்படியே பல மணி நேரம் நின்றான். இப்போது தன் முன்னால் நடந்த உரையாடல் எல்லாம் நிஜமா? அல்லது அவளை எதிர்பார்த்ததால் வந்த மாயையா? ஒரு முறை கழுத்தில் கை வைத்து பார்த்தான். சங்கிலி இல்லை. அப்படி என்றால் உண்மை தான். பல்லவி இப்போது இந்த இடத்திற்கு வந்தது உண்மை. தன்னுடைய கழுத்து சங்கிலியை கேட்டது உண்மை. அதை நான் கழற்றி கொடுத்தது உண்மை. அதை அவள் கொண்டு சென்றதும் உண்மை.
பல்லவி என்னை தேடி வந்து நன்றி சொல்லிட்டு போறா?... கூடவே என்னை மறக்க கூடாதுணு நியாபகமா இருக்க என் கழுத்து சங்கிலியை வாங்கிட்டு போறா. போதும். இதுவே போதும்.
மனநிறைவோடு தான் வீட்டிற்கு வந்தான்.
மறுநாள் பல்லவி கிளம்பி விட்டாள்
என ரவி மூலம் தான் அறிந்து கொண்டான். அவளை பற்றி இனி பாண்டியிடம் பேச முடியாது என்பதால் ரவியிடம் தோழமையை வளர்த்து கொண்டான்.
பல்லவியை பற்றி ஒவ்வொரு விசயத்தையும் தெரிந்து தான் வைத்திருந்தான். இடையில் கூட பாண்டி பணத்திற்கு தடுமாறிய போது அவனே வலிய வந்து உதவவும் செய்தான். அன்று மொத்த பணத்தையும் தந்ததிலிருந்து இன்று இந்த நொடி வரை அவளை பற்றி விசாரிக்காதது சங்கிலி மேல் அசைக்க முடியாத நம்பிக்கையை பாண்டிக்கு தர,
இந்த நாலு வருடத்தில் பாண்டி நிறைய நேரம் அவனிடம் கை நீட்டியுள்ளார். சங்கிலியும் தான் மாடாய் உழைத்த அனைத்தையும் அவளுக்காக தாரை வார்த்தான்.
அதில் கோபப்பட்டு திட்டியவர் என்னவோ தண்டபாணி தான்.
"நீ என்னடா நினைச்சிட்டிருக்கா. பெரிய அன்னைதெரசாணு நினைப்பாக்கும். அப்படிணா மாடா உழைச்சதை மொத்தமா கொடுத்தா உனக்கு சிலையா வைப்பாங்க. முச்சந்தியில விட்டு செருப்பால அடிப்பாங்கடா. எப்படியும் அந்த புள்ளை உனக்கில்லணு ஆகியாச்சு. அப்படியிருக்க நீ ஏண்டா காசை அவங்களுக்காக கரியாக்கணும். சனியன் விட்டு தொலைஞ்சினு விட்டு தள்ளிட்டு ஒதுங்கி வராம அவளுக்கு உழைச்சி கொட்டவே பிறந்தவன் போல அம்புட்டையும் தூக்கி கொடுக்கிறா?"
"விடுங்க முதலாளி. இந்த ஒரு வருஷமும் தான். இதோட அவா படிப்பு முடிஞ்சிடும். அதுக்க பிறகு நம்ம பக்கம் வரவா போறாங்க."
" அதை தாண்டா நானும் சொல்றேன். கருவேப்பிலை போல உன்னையும் தூக்கி குப்பையில தான் போட போறாங்க. அப்படியிருக்க எதுக்குடா விழுந்து விழுந்து அவங்களுக்காக செய்யுறா?"
"விரும்பிட்டேன் முதலாளி. அந்த புள்ளை நல்லா இருக்கணும். அம்புட்டு தான்."
"அது நடக்கும். எப்படி நடக்காம போகும். உன் ஆசை எதிர்காலம், கனவு எல்லாத்தையும் மொத்தமா அழிச்சில படிக்க வச்சிருக்கா. அதுவும் டாக்டர் படிப்பு. முடிஞ்சதும் திரும்பி கூட பார்க்க போறதில்லை."
"அது தெரிஞ்சி தானே முதலாளி இது எல்லாம் செய்றேன். சாதாரணமா படிச்சிட்டிருக்கும் போதே அவா என்னை திரும்பி பாக்கல. இனியோ அவா டாக்டர். இதுக்க மேல நம்மளை திரும்பி பார்க்கலனு வருத்தப்பட முடியுமா?"
"அப்புறம் ஏண்டா?"
"காதல். அது எனக்கு இடையில தான் வந்துச்சு முதலாளி. அதுவும் அந்த கமலம் அக்காவால . அனாதைக்கு அனாதை ஆறுதலா இருக்கலாமேனு . ஆனா முதல் முதலா அவளை பார்த்த போது ஒரு நேசம் வந்துச்சே அதை காலத்துக்கும் என்னால மாத்திக்க முடியாது முதலாளி. அதுக்காக தான் இந்த அளவு அவளுக்காக செய்தேன். அந்த புள்ள சந்தோஷமா இருக்கிறதே எனக்கு சந்தோஷம் தான். வாழ்க்கையை தொலைக்காம அவா சாதிச்சதே எனக்கு சந்தோஷம் தான். போதும் அவா ஒருத்தியாவது வாழ்க்கையில செட்டில் ஆகிட்டால அதே போதும்."
சொல்லி கொண்டே அவன் விரக்தியாக சிரிக்க...
அவனை பாவமாக பார்த்தவர் மனமோ...
இவனை எல்லாரும் கெட்டவன்னு சொல்லுறாங்க. சுயநலம் பிடிச்சவன்னு பேசுறாங்க. இவனா கெட்டவன்? இவனா சுயநலம் பிடிச்சவன்? இப்படி ஒரு மனசு யாருக்கு வரும். இந்த ஊர்ல்ல வேற எவனுக்காவது இப்படி ஒரு மனசு இருக்குமா? அனாதை பொண்ணுணு மேடையில அவ்வளவு பேசினானுங்க. ஒருத்தனாவது உதவுனானா? கடைசியில இவன் தானே கொடுத்தான். அந்த நன்றி அந்த பாண்டிக்கு இருக்குமா? இல்ல அந்த பொண்ணுக்கு தான் இருக்க போகுதா? கடைசியில இவன் தான் கலங்கிட்டு நிற்க போறான்.
எண்ணி கொண்டவர் எதுவும் செய்ய முடியாமல் கையை பிசைந்து கொண்டு நிற்பார். இப்படியே நாட்கள் சங்கிலியை விட்டு வேகமாக நகர்ந்து சென்றது.
பல்லவி படிப்பு முடிந்து ஊருக்கு வரும் நாளும் வந்தது.
விசயத்தை ரவி மூலம் அறிந்த சங்கிலிக்கு ஒரு முறை அவளை பார்த்து விட மனசு பரபரக்கத் தான் செய்தது. ஆனாலும் அடக்கி கொண்டு அமர்ந்திருந்தான்.
"எப்படியும் வீட்டிற்கு வந்திருப்பால."..
எண்ணிய போது அவனை தேடி ரவி வந்தான்.
"வாடா போயிட்டு வருவோம்."
"எங்க?..."
ரயில்வே ஸ்டேஷனுக்கு...
"எதுக்கு ?"
"பல்லவியை கூட்டிட்டு வர தான்."
"நான் வரல"
?மனசு முழுதும் ஆசையை வச்சிட்டு எதுக்குடா ஒதுங்குறா. பார்க்க வேணும்னு மனசு ஏங்கல..."
"இல்லயே..."
"எனட்ட பொய் சொல்ல வேணாம். உன் மனசு தவிக்கிற தவிப்பு எனக்கு தெரியும். எழும்பு . நாம பைக்ல போகலாம். தூரமா இருந்து அவளை ஒருமுறை பார்த்துட்டு வந்திடலாம்."
"வேணாம்டா. அவா என்னோட பல்லவி இல்லை."
"அது இல்லாமலே போகட்டும். ஒரு முறை பார்த்திட மாட்டோமானு உன் மனசு துடிக்குதுல."
ம்...ம்....
அப்போ கிளம்புடா. பார்த்துட்டு வந்திடலாம். அதுக்கு பிறகு பார்க்க முடியுதோ என்னவோ?
"ஏண்டா?
"ம்... வந்தவா வீட்டுல தங்கலடா மச்சான்."
"அப்புறம்..".
" நம்ம ஊர் கவர்மென்ட் ஹாஸ்பிட்டல்ல டியூட்டி போட்டிருக்காங்களாம். அதனால அங்க பக்கத்துல ஒரு நல்ல வீடு பாத்திருக்கிறதா அப்பா பேசிகிட்டாங்க. அவா இனி அங்க தான் தங்கிப்பா போல..."
" "ஒ....
என்றானே தவிர வேறு எதுவும் பேசவில்லை.
"சரிடா டயிமாச்சு எழும்பு . "
ஏனோ உடனே கிளம்பிவிடுவாள் என்றதும் பார்க்க வேண்டும் என்ற ஆசை எட்டிப் பார்க்க...
மெல்ல அந்த இடத்தை விட்டு எழும்பினான். சங்கிலி எழுந்ததும் ரவி உற்சாகத்தில் வண்டியை எடுக்க,
சங்கிலி பின்னால் ஏறிக் கொண்டான். வண்டி ரயில்வே ஸ்டேஷனை நோக்கி பயணமானது. வழி நெடுக்கிலும் ரவி வாய் மூடாமல் பேச தான் செய்தான். ஆனால் அவன் பேச்சில் ஒன்று கூட அவன் காது வழியே சென்று மூளையை சென்றடையவில்லை.
காரணம் சங்கிலி மனதில் பல்லவி பற்றிய எண்ணமே ஒடிக் கொண்டிருந்தது. அதிலும் முதல் நாள் பார்த்த அவள் உருவில் இருந்து, டாக்டர் படிக்க கிளம்பி போன முந்திய நாள் அவன் முன் வந்து நின்ற பல்லவியின் உரு வரை ஒரு படமாக ஓடியது.
"இப்போ எப்படி இருப்பா. மாறியிருப்பாளா.? இல்ல அப்படியே சின்ன குழந்தை போலவே இருப்பாளா? அது எப்படி? இப்போ அவா பெரிய டாக்டர். அவா எப்படி பழையபடி இருக்க முடியும். எப்படியும் மாறி தான் இருப்பா. ஆனா எப்படி மாறி இருக்காணு தான் தெரியல..".
என்று பேசிய அவன் மனது... அவளை பல விதமாக நினைத்து நினைத்து ரசிக்க ஆரம்பித்தது. இவன் ரசிப்பு தன்மை பல்லவி டாக்டராக ரோலிங் செயரில் அமர்ந்து கொண்டு வயோதிக ஒரு முதிய தாய்க்கு மருந்து கொடுப்பது வரை நீண்ட போது ரவியின் டூவீலர் ரயில்வே ஸ்டேஷன் வந்து அடைந்தது.
தூரத்தில் வரும் போதே ரவியின் கண்களில் காத்திருக்கும் அவன் குடும்பம் பட்டு விட, அவர்களை நெருங்கி செல்லாமல் தூரமாய் வண்டியை நிறுத்தி இறங்கினான். ஆனாலும் அங்கிருந்து பார்த்தாலும் பல்லவி வந்து இறங்கினால் தெளிவாக தெரியும் இடத்தில் இருவரும் நின்று கொண்டனர்.
சரியாக அரை மணி நேரம் கழித்து தான் அந்த டிரைன் வந்து தன் மூச்சை பிடித்து நின்றது. இரண்டே நிமிடத்தில் பல்லவி வெளிப்பட்டாள்.
அவளை பார்த்ததும் சங்கிலியினுள் ஜிவ்வென்று ஒரு உணர்வு மேல் எழுவது போல ஒரு அவஸ்தை உருவாக, நெகிழ்வோடு பார்த்தான். அவன் கற்பனை செய்தது போல மாடன் டிரெஸ்ஸில் வரவில்லை. காட்டன் சாரியில் தான் வந்திருந்தாள். ஆனால் அவளில்..., அவள் உடையில்... நடையில்... எல்லாம் ரொம்பவே வித்தியாசம் தெரிந்தது. கண்ணில் கறுப்பு கலர் கிளாஸ் இருந்தது.
மேக்கப் எதுவும் செய்யாத இயல்பான அவள் முகத்திலும் அந்த முகம் சுமந்து நின்ற மெல்லிய புன்னகையிலும் தன்னை தொலைத்து விட்டு நின்ற போது,
பல்லவியின் தோளை பிடித்தவாறே வந்து இறங்கினான் அந்த இளைஞன்.
அத்தியாயம் தொடரும்...